மடுமாதா திருத்தலத்தில் 14.08.2018 செவ்வாய்க்கிழமை வேஸ்பர் மாலைப் புகழ் ஆராதனை சிறப்பாக நடைபெற்றது. ஏறத்தாள ஜந்து இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்ட இத் திருநிகழ்வு நற்கருணை ஆராதனையை கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்கலாநிதி அந்தனி ஜெயக்கொடி ஆண்டகை அவர்கள் நடாத்தினார்.இத் திரு நிகழ்வில் கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் அதிமேன்மைமிகு கர்தினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை, யாழ்ப்பாணம்; மறைமாவட்ட இளைப்பாறிய ஆயர் பேரருட்கலாநிதி தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை, கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்கலாநிதி அந்தனி ஜெயக்கொடி ஆண்டகை, காலி; மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி றேய்மன்ட் விக்ரமசிங்க ஆண்டகை, குருநாகல்; மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி கரல்ட் அந்தனி ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி நோபேட் அண்;றாடி ஆண்டகை ஆகியோரும், பெருந்தொகையான குருக்களும்,துறவிகளும், பக்தர்களும்,அரச-அரச சார்பற்ற உயர் பணிநிலைப் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.