மன்னார் தூய சவேரியார் பெண்கள் கல்லூரி ( தேசிய பாடசாலை) புதிய மாணவத் தலைவிகளுக்கான பணி நியமமன நிகழ்வு நேற்று (07.06.2018) வியாழக்கிழமை கல்லூரியின் அதிபர்; அருட்சகோதரி கில்டா சிங்கராயர் அவர்களின் தலைமையின் கீழ் கல்லூரி மைதானத்தில் இடம் பெற்றது. இந் நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்த முதன்மை விருந்தினர்களான; திருக்குடும்பக் கன்னியர் அருட் சகோதரிகளின் யாழ் மகாணத் தலைவியின் ஆலோசகர்களுள் ஒருவரான அருட்சகோதரி தயாநாயகி செபமாலை,மன்னார் வலய உதவிக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.கிறிஸ்ரிராஜா மற்றும், ஆசிரியர்கள், புதிதாகப் பணி நியமனம் பெறவிருந்த மாணவத் தலைவிகள் அனைவரும் இக் கல்லூரியின் மேற்கத்திய இசைக்குழுவினரின் மகிழ்வொலியோடு நிகழ்வு மையத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
அதன் பின்னர் உரைகளும், புதிய மாணவத் தலைவிகளுக்கான சின்னம் வழங்கும் நிகழ்வும், புதிய மாணவத் தலைவிகளின் பணி அர்ப்பணிப்பு வாக்குறுதி அளித்தலும் இடம் பெற்றது.
தொடர்ந்து முன்னைய மாணவத் தலைவியின் பணி அனுபவப் பகிர்வும், புதிய மாணவத் தலைவியின் முதல் பணியேற்பு உரையும் இடம் பெற்றது. இக்கல்லூரியின் ஜம்பது மாணவிகளுக்கு புதிய மாணவத் தலைவிகளுக்கான பணிப் பொறுப்பு வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் புதிய மாணவத் தலைவிகளின்; பெற்றோரும் சமூகமளித்திருந்தனர்.