Category Archives: இன்றைய தூயவர்

புனித சிலுவை யோவான் குரு

டிசம்பர் 14

புனித சிலுவை யோவான்  குரு – (கி.பி 1542 – 1591)

இவர் ஸ்nபின் நாட்டில் காஸ்டில் நகரில் பிறந்தார். இளமையிலேயே தம் தந்தையை இழந்தார். தாய் வறுமையான நிலையில் தம் 3 மகன்களையும் வளர்த்து வந்தார். யோவான் கடைசி மகன். இயேசு சபையினரிடம் இவர் கல்வி கற்றார். பின்னர் சிறிது காலம் நெசவுத் தொழிலில் ஈடுபட்டார். 21 வயதில் கார்மேல் சபையில் சேர்ந்தார். பின்னர் சலமான்கா பல்கலைக் கழகத்திற்குச் சென்று பயின்றார்.

இவர் தமது முதல் திருப்பலியை நிறைவேற்ற மெடினாதெல் காம்போ என்ற நகருக்கு வந்தார். இங்கேதான் முதன்முறையாகப் புனித அவிலா தெரசாளைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 5 ஆண்டு முயற்சியால் இந்த வேளையில் தான் தமது சபையில் பெரிய சீர்திருத்தங்களைத் தெரசா கொண்டு வந்திருந்தார். இந்த முறையில் கார்மேல் சபைக் குருக்களையும் இந்தச் சீர்திருத்தத்திற்குள் கொண்டு வர முயன்றார். ஏற்கனவே யோவான், தமது நபையின் தொடக்க நிலையிலிருந்த கடுமையான ஒழுங்குகளைக் கடைப்பிடிக்க இசைவு பெற்றிருந்தார். இதைப்பற்றித் தெரசா அறிந்திருந்தார்.

ஓராண்டுக்குப்பின் அத்தகைய கண்டிப்பான கார்மேல் சபை தொடங்கப்பட்டது. யோவான் முதல் உறுப்பினராகச் சேர்ந்தார். 23 ஆண்டுகள் இத்தகைய சபையில் பல பணிகள் ஆற்றினார். சீர்திருத்தம் பெற்ற சபையில் சேர்ந்ததினால் அவருக்கு வந்த நெருக்கடி, சிறுமை, தப்பெண்ணங்கள், ஏன் சபைக்குள்ளேயே சிறைவாசம் அனைத்தையும் ஏற்கவேண்டியதாயிற்று. சிலுவை என்றால் எத்துணை கடினமானது என்பதை அனுபவித்து உணர்ந்தார்.

இவருக்கு எதிர்ப்புக்கள் பல இருந்தன. ஆனால் ஆழ்ந்த தாழ்ச்சியினால் அவற்றை மேலான முறையில் எதிர்கொண்டார். இளைப்பாற்றி, உணவு இவற்றை மிகவும் குறைத்தார். புலால் உணவை அகற்றினார். ஜெருசலேமுக்குத் திருப்பயணம் மேற்கொண்டு, அங்கு துருக்கியரிடம் மறைசாட்சியாக மடியலாம் என எதிர்பார்த்தார்.

ஒருமுறை கள்வர் இவரது பணத்தைக் கவர்ந்துகொண்டனர். இன்னும் ஏதாகிலும் உண்டா? என்று கேட்டனர். “இல்லை” என்று பதிலளித்தார். அவர்கள் போய்விட்டனர். இதற்கிடையில் தனது உடையில் ஏதோ ஒரு மூலையில் சில நாணயங்கள் இருந்ததைக் கண்டுபிடித்தார். திருடர் சென்ற திசைநோக்கி இவரும் ஓடினார். உரத்த குரலில் கூப்பிட்டு அவர்களிடம் அந்த நாணயங்களையும் கொடுத்துவிட்டார். அந்தத் திருடர்கள் எத்துணை வியப்பு அடைந்தார்கள் எனில் அவர்கள் கவர்துகொண்ட அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்துவிட்டனர்.

 

புனித லூசியா (பிரகாசியம்மாள்)

டிசம்பர் 13

புனித லூசியா (பிரகாசியம்மாள்)

இவர் கி.பி 304ஆம் ஆண்டில் சிராக்யுஸ் நகரில் மறைசாட்சியாக மாண்டவர். தியோக்ளீசியன் காலத்தில் இஃது நிகழ்திருக்கலாம். திருச்சபை முழுவதிலும் இவரது பக்தி விரைவில் பரவியது. தொடக்கத்திருச்சபையிலிருந்தே இந்தப் பக்திக்கு ஆதாரம் கிடைத்துள்ளது. உரோமை திருவழிபாட்டு முறையில் அமைந்துள்ளவை என்று சொல்லப்படும் “பூசையின் மாறாத செபங்களின் தொகுப்பில்” இவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கி.பி 1204ம் ஆண்டிலிருந்து அவரது கல்லறை கண்டுபிடிக்கப்பட்டு புனிதமாகக் கருதப்பட்டு வருகிறது.

தகந்த ஆதாரம் இல்லாவிடினும் சில தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. லூசியாவின் தாய் இரத்தப் பெருக்கினால் வேதனைப்பட்டார். இதனால் தாயும் மகளுமாகக் கட்டோனியாவுக்குத் திருப்பயணம் சென்றனர். புனித ஆகத்தாவின் ஆலயம் அங்குள்ளது. இருவரும் அங்கு உருக்கமாக மன்றாடினர். லூசியாவுக்கு அன்றிரவு கனவில் ஆகத்தா தோன்றினார். “உன் தாய்க்குத் தேவையான உடல் நலனைப் பெற்றுக் கொடுக்க உன் மன்றாட்டே போதுமானதாய் இருக்கும்போது, என்னிடம் ஏன் கேட்கிறாய்? உன் மகற்பென்னும் லீலிமலரைக் கொணடு இறைவனுக்கேற்ற இல்லிடம் தயாரித்துள்ளாய். உனது விசுவாசமே உனக்கு இப்போது உதவுவதற்குப் போதுமானது” என்றார். தாயும் நலம் அடைந்தார்.

பின்னர், தம் உடைகளைஏழைகளுக்கு தானமளிக்க லூசியா அத்தலத்திலேயே தாயிடம் விடைபெற்றார். மீண்டும் சிராக்யுசுக்குத் திரும்பினர். வாக்களித்ததுபோல் உடைமைகளைப் பகிர்ந்தளித்தார். இளைஞன் ஒருவன் ஏற்கனவே இவரை மணந்துகொள்ள முயற்சிகள் பல செய்திருந்தான். இவரது கற்பின் வாக்குறுதியைக் கேட்டுக் கலங்கினான். பழிவாங்கும் எண்ணத்துடன், “இவர் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்” என்று உயர் அலுவலரிடம் குற்றம் சாட்டினான்.

“உன்னை அடித்து நொறுக்கும் உனக்குப் பேசுவதற்குக்கூட நா ஏழாது” என்றான். “இறையடியாள் நான். சரியான  சொற்களைச் சரியான  நேரத்தில் சொல்லத் த}ய ஆவியார் துணை நிற்பார். ஏனெனில் தூய வாழ்வு வாழ்வோர்  யாவரும் தூய ஆவியின் ஆலயங்கள்” என்றார்.  “விலை மகளிர் நடுவே உன்னைத் தள்ளுவார்கள்.  அப்போது தூய ஆவி பறந்துவிடுவார்” என்றான். “எனது விருப்பத்திற்கு மாறாக நடக்கும் ஒவ்வொரு செயலுக்கம் எனக்கு இரு மடங்கு வெற்றி உண்டு புரிந்து கொள்” என்றார்.

ஆவேசமடைந்தான் அலுவலன். ஆனால் அவரையோ அசைக்க இயலவில்லை. அவர்மேல் காய்ச்சிய தார் எண்ணையை ஊற்றினார். அவருக்குத் தீங்கிழைக்கவில்லை. மேலும் ஆத்திரம் அடைந்தவர்களாய் அவரது தொண்டையில் ஒரு வாளைப் பாய்ச்சினார்கள். இவ்வாறு மறைசாட்சி முடிபெற்று நம் மங்கை தூய வாயிலை அடைந்தார்.

 

குவாடலூப் மரியன்னை

டிசம்பர் 12  

குவாடலூப் மரியன்னை

இந்த மரியன்னையின் திருநாளை சமீபகாலமாக அதாவது 2006ம் ஆண்டு முதல் திருச்சபையில் கொண்டாடுகிறோம். இதற்கு வழிவகுத்தவர் மறைந்த திருத்தந்தை 2ம் அருள்சின்னப்பர். இருப்பினும் குவாடல}ப் கருமை மாமரியின் பக்தி மெக்சிக்கோ நாட்டில் பல நூற்றாண்டு காலமாகக் கொடிகட்டிப் பறக்கிறது. இலட்சோப லட்சப் பக்தர்கள் இங்கு வந்து போகின்றனர்.

அன்னை மரியா ஜூவான் டியேகோ என்ற கருப்பினத்தைச் சார்ந்தவருக்குக் (காண். டீச 9) கொடுத்த காட்சிதான், இப்பக்திக்கு ஆரம்பம். இன்று முக்கியமாக நமது கவனத்தை ஈர்க்க வேண்டியது, ஜூவானின் துண்டில் அன்னை பதித்த தனது உருவம். 5 நூற்றாண்டுகளாக இதனைத் தரிசிக்க எண்ணிலடங்காதவர்கள் வந்து போகின்றனர். இந்தத் துகில், அதில் பொறிக்கப்பெற்ற உருவம், இவற்றின் சிறப்பு அம்சங்க் இதோ: 1) 1531ம் ஆண்டில் இங்கு மரியன்னை காட்சி கொடுத்ததிலிருந்து இலட்சோப லட்சம் பேர் கிறிஸ்துவின் ஒளியைப் பெற்றுள்ளனர். 2) துகிலில் காணப்படும் மரியன்னையின் இந்த உருவம் மட்டுமே எவர் கையாலும் வரையப்படாதிருந்தது இதன் தனிச் சிறப்பு.

  1. இந்தத் துகில் கற்றாழை நார் போன்ற ஒரு நாரினால் வழக்கமாக அந்த நாட்டில் தயாரிக்கப்படுவது. இதன் வயது அதிகம் போனால் 20 ஆண்டுகள்தான். ஆனால் இந்தக் குறிப்பிட்ட துகிலல் ஆலயத்தில் மரியன்னையின் உருவத்துடன் வைக்கப்பட்டு 474 ஆண்டுகள் ஆகின்றன.
  2. ஆலயத்தில் மெழுவர்த்திகளின் புகையோ வெப்பமோ இதற்கு ஊருவிளைவிப்பதில்லை என்பதும் புதுமைதான்.
  3. 1921ம் ஆண்டு மெக்சிக்கோ நாட்டில் ஏற்ப்பட்ட உள்நாட்டுக் குழப்பம். அச்சமயம் ஒரு பெரிய, சக்தி வாய்ந்த குண்டு ஆலயத்திற்கு அருகில் வெடித்து. ஆலயத்திலிருந்த திருச்சிலுவையை அடையாளம் தெரியாதவாறு முறுக்கிவிட்டது. இருப்பினும் புதுமைத் துகிலுக்கு எந்த ஒரு சேதமும் இல்லை.
  4. 1791ம் ஆண்டு ஆலயத்தைப் புதுப்பிக்கும் பணியின்போது நைட்ரிக் ஆசிட் துணியில் சிந்திவிட்டது. ஆனால் சேதம் எதுவும் இல்லை.
  5. பலதரப்பட்ட சோதனைகளின் மத்தியில் இந்த நாள் வரை துகிலுக்கு எவ்விதப்பாதிப்பும் இல்லை.
  6. பொதுவாக இவ்வுருவம் கருப்பின மக்களின் பண்பாட்டினைப் பிரதிபலிக்கின்றதில் சந்தேகமில்லை.

டிசம்பர் 11 – புனித தோமசுஸ் பாப்பு – (கி.பி 305 – 384)

டிசம்பர் 11 – புனித தோமசுஸ் பாப்பு – (கி.பி 305 – 384)

இவரின் பெற்றோர் ஸ்பெயின் நாட்டினர். உரோமையில் இவர் குருப்பட்டம் பெற்றார். திருச்சபையின் கடுமையான கொந்தளிப்பின் நாட்களில் திருத்தந்தையாகத் தெரிந்துகொள்ளப்பட்hர். ஆயர்களைப் பலமுறை அழைத்து ஆலோசனை பெற்று, பிரிவினை சபையினரைக் கட்டுப்படுத்த முயன்றார். மறைசாட்சிகளின் கல்லறைகளைச் சிறந்த முறையில் புதுப்பித்தார். 20 ஆண்டுகளாகத் திருச்சபையைத் திறம்பட நடத்தி வந்தார். இவர் காலத்தில் கி.பி 380ம் ஆண்டு பெப்ரவரி 28ம் நாள் தியோடோசியுஸ் மன்னன். திருச்சபையின் சார்பில் மிக முக்கியமான ஓர் அறிக்கையை வெளியிட்டார். “எனது அரசிலுள்ள குடிமக்கள் அனைவரும், புனித பேதுரு உரோமையர்களுக்குக் கொண்டு வந்த சமயத்தைத் தழுவட்டும். ஒரே தெய்வத்தையே விசுவசிப்போம். அவரது தூயதமத்திரித்துவத்தில் தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூவராயிருக்கிறார்கள்” என்பதே அவ்வறிக்கை.

பாப்புவான தோமசுஸ் தம் கல்லறைமேல் எழுதும்படி தம் கைப்பட எழுதிவைத்த சொற்கள்: “அச்சமூட்டும் கடல் அலைகளை அமர்த்திய வரும், மண்ணில் மடியும் விதைகளுக்கு உயிர் அளிப்பவரும், இலாசருக்குச் சாவின் சங்கிலிகளைத் தகர்த்தெறிந்தவரும் 3 இரவுக்குப் பின் அவரை உயிர்பெறச் செய்து அவரின் சகோதரி மார்த்தாவிடம் ஒப்படைத்தவருமான இறைவன், தோமசுசையும் சாவுக்குப்பின் உயிர்தெழச் செய்வார் என விசுவசிக்கிறேன்” இந்த திருத்தந்தை புனிதர்களின் திருப்பண்டங்களைப் பேணிக்காப்பதிலும், மறைசாட்சிகள் மாண்ட இடங்களைப் பேணிக் காப்பதிலும் அக்கறை செலுத்தினார். புனித ஜெரோம், விவிலியத்தை வெளிக்கொணர்வதில் எடுத்துக்கொண்ட அனைத்து முயற்சிகளுக்கும் ஊக்கமும் ஆக்கமும் நல்கினார்.

80 வயதில் இறந்த தாமசுஸ், புனித கலிஸ்தாஸ் கல்லறை வளாகத்தில் இவ்வாறு எழுதி அறிக்கையிடப் பணித்தார்.

“தோமசுஸ் ஆகிய நான் இந்த இடத்தில் அடக்கம் பண்ணப்பட விரும்பினேன்: ஆனால் இதற்குமுன் சென்ற புனிதர்களின் சாம்பலை நான் கறைபடுத்திவிடுவேனோ என்ற அச்சமடைந்தே.” எனவே இவரின் விருப்பப்படி ஆர்டியெட்டினா என்ற இடத்தில் தம் தாய், சகோதரியின் கல்லறைக்கு அருகில் அடக்கம் பண்ணப்பட்டார்.

டிசம்பர் 09 – புனித ஜுலான் டியேகோ (1474 – 1548)

டிசம்பர் 09 –  புனித ஜுலான் டியேகோ (1474 – 1548)

2002ம் ஆண்டு ஜுலை 30ம் நாள் மெக்சிக்கோ நகரில் உள்ள புகழ்வாய்ந்த குவாடலூப் மரியன்னையின் ஆலய வளாகத்தில் 5 இலட்சத்திற்கும் மேலாக கருப்பின (இந்திய) மக்களும் வெள்ளையர்களும் மகிழ் ஒலி சகிதம் ஒன்று கூடினார். இதன் காரணம் கருப்பினத்தைச் செர்ந்த ஜுவான் டியேகோவுக்குப் புனிதர் பட்டம் அளிக்கும் சடங்கு நடைபெறவிருந்தது. இதற்காகத் திருத்தந்தை 2ம் ஜான் பால் வந்துவிட்டார். டியேகோவுக்கத் திருமணமான நிலையில் குழந்தைபேறு இன்றி, மனைவி இறந்துவிட்ட நிலை. இவர் புதிதாகக் கிறிஸ்துவின் ஒளி பெற்ற கிறிஸ்தவர். 1524ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பிரான்சிஸ்கள் வேதபோதகர்கள் இவரைத் திருமறைக்குக் கொண்டு வந்தனர்.

1531ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 9ம் நாள் டெப்பெயாக் என்ற மலைப்பாதையின் வழியாக அருகிலிருந்த ஊர் ஆலயத்திருப்பலியில் பங்கேற்க விரைந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மலையிலிருந்து ஓர் குரல் அவர் பெயரைச் சொல்லி அழைத்தது. மலைமேல் சிறிது தூரம் ஏறியபோது கருப்பு நிறத்தில் 14 வயது சிறுமி நின்றுகொண்டிருப்பதைப் பார்த்துவிட்டார். “நான் கன்னிமரி” எனக் கூறி ஜுவானிடம் பேச ஆரம்பித்தார். “நேரே ஆயரிடம் சென்று தான் நின்றுகொண்டிருக்கம் இடத்தில் ஒரு ஆலயம் கட்டச் சொல்” என்று பணித்தார். “மேலும் ஆலயம் கட்டி முடிக்கப்பட்ட நாளிலிருந்து இந்தப் பகுதி இறைவனின் அளப்பரிய இரக்கத்தின் உற்றாக அமையும்” என்று உறுதி அளித்தார், கருமை நிற மாமரி. “இவ்விடத்தில் இருந்து கொண்டு மக்களின் அபயக்கரலைக் கேட்டு அவர்கள் துயரனைத்தையும் நீக்கிக்கொண்டிருப்பேன்” என்ற வார்த்தைகளைத் தெளிவாகக் கெட்டு திகிலுற்றார் ஜுவான்

மரித்தாய் கூறியவாறு ஜுவான் ஆயரை அணுகினார். மரியன்னை கூறியவற்றைப் பிழைபடாமல் கூறினார். “சரி இன்னொரு நாள் வா, இதுபற்றிப் பேசிக்கொள்வோம்” என்று சிறிதும் பொருட்படுத்தாமல் ஜுவானை அனுப்பிவிட்டார். மேலைநாட்டினைச் சேர்ந்த ஆயர் என்றாலும் கருப்பின் மக்களைக் கரிசனையோடுதான் நடத்திவந்தார். ஜுவான் தனது ஊருக்குச் சேர்hவுடன் திரம்பி விட்டார். மீண்டும் ஒரு முறை கருமைநிற மாமரி ஜுவானுக்குக் காட்சி அளித்தார். இரணாடாவது முறை இதே நோக்கத்தடன் ஆயரை அணுகப் பணித்தார். இந்த முறை கூட ஆயர் போதிய கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை.

இதற்கிடையில் ஜீவானின் மாமா சாகம் தருவாயிலிருந்தார். மரணப்படுக்கையில் இருந்த இவருக்கு உதவிக்கரம் நீட்ட ஒரு குருவானவர் தேவை என்பதை உணர்ந்தார். இதற்காக, இதற்குமுன் சென்ற பாதையைத் தவிர்த்து வேறொரு வழியாக நடந்துசென்றார். செல்லும் வழியில் மீண்டும் அதே கருமைநிற மாமரி ஜுவானுக்குத் காட்சியளித்தார்! உனது மாமா சின்ன அம்மை நீங்கி நலம் பெற நான் உதவுவேன்” என்று உறுதி கூறினார். “மலை மீது சற்று ஏறி எனக்குக் கொஞ்சம் ரோசா மலர்கள் பறித்து வா” எனப் பணித்தார். மரியா குறிப்பட்ட இப்பகுதியில் ரோசா மலர்களைக் காண்பதே அரிது. அதிலும் ரோசா மலர்களுக்கான காலமும் அதுவல்ல.

இருப்பினும் அன்னையின் சொல்லைத் தட்டாமல் சென்றார். அதிர்~;டவசமாக மலர்களைக் கண்டார். அவற்றைச்சேர்த்தக் கொண்டுபோய் அன்னையின் பாதங்களில் வைத்தார். அவற்றை ஜுவானிடமிருந்த துண்டில் மரியாவே பத்திரமாக வைத்து ஆயரிடம் கொண்டுபோய்க் கொடுக்கப் பணித்தார். அவரும் அயர் அவர்களிடம் கொண்டுபோய்க் கொடுப்பதற்காகத் துண்டைத் திறந்த சமயம் மலர்கள் கீழே விழ, அவரது துண்டின் மையப் பகுதியில் மரியன்னையின் உருவம் காணப்பட்டது! அனைவரும் திகிலுற்றுப் பரவசம் அடைந்தனர்.

இப்புதுமையைப் பார்த்த பின்னரே ஆயர் கருமை மாமரியின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி பல எடுத்துக்கொண்டார். மறுநாள் காலையில் ஜுவான் முன்னே செல்ல, ஆயரும் மரியா காட்சி தந்த அந்த இடத்தை நோக்கிச் சென்றார். மேலும் அம்மை நோய் நீங்கி முற்றிலும் குணமடைந்திருந்த ஜுவானின் மாமாவையும் சந்தித்தார். அன்னைக்கு ஆலயம் எழுப்ப முயற்சிகள் ஜரூராக நடைபெற்றன. ஆலயம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு அன்னையின் உருவம் இருந்த ஜூவானின் துண்டை ஆலயத்தினுள் மக்கள் பார்த்துப்பரவசமடைவதற்கு காட்சிப் பொருளாக வைத்துவிட்டார் ஆயர். அன்றுமுதல் இன்றுவரை கருமை மாமரியின் அருளாசீர் பெறக் கூட்டம் அலைமோதுகிறது.

இருப்பினும் கருமை மாமரி கொடுத்த செய்திதான் என்ன? இதற்குமுன் லூர்து கெபி போன்ற பல இடங்களிலும் தந்த காட்சியின் போது கொடுத்த, தனக்குப் பிரியமான செய்திதான். இதன் சாரம் “மாக்னி ஃபிக்காத்” கீதம் தான். “எனதான்மா இறைவனை ஏத்திப் போற்றுகின்றது.” இறைவன், பொருட்செல்வம் படைத்த சமூதாயத்தினால் தள்ளப்பட்ட, ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட எளியோரின் தந்தை.” இந்த நற்செய்தி மேல் வகுப்பினரின் செவிகளைக் துளைத்தது. இறைவனைப் போல், மரியாவும் ஏழைகளிடம் பரிவிரக்கங்காட்டுபவர். அவர்களுக்காகப் பரிந்துரைக்கும் பரோபகாரி.

மேலும் ஒதுக்கப்பட்ட இனத்தைச் சார்ந்த ஜூவானிற் துண்டில் அன்னையின் உருவம் பதிக்கப்பட்டதன் மூலம், மரியன்னை ஒடுக்கப்பட்டவர்களின் சார்பில் எப்போதும் நிற்பவர் என்பதை அனைவரும் புரிந்துகொண்டனர். இந்த நற்செய்தி புது உலக மக்களுக்குக் கிடைத்த சூழ்நிலையைப் பாருங்கள். கருநிற மக்கள் துரும்பாகக் கருதப்பட்டனர். அவர்களைத் துன்புறுத்தி உயிரைப் பறித்தால் எவரும் கேட்பதற்கில்லை என்ற சூழ்நிலை. இத்தகைய சூழ்நிலையில் கருமை மாமரியாகத் தோன்றியதும் அவளது செய்தியும் அனைவரையும் புரிய வைக்காமல் இருந்திக்க முடியுமா?

டிசம்பர் 08 – புனித அமல அன்னை

டிசம்பர் 08  – புனித அமல அன்னை

கருவான போதே கறையொன்றும் இல்லாள்!

1854ம் ஆண்டு டிசம்பர் 8ம் நாள் திருத்தந்தை 9ம் பத்திநாதர் “கன்னிமரி அமல உற்பவி” என்பது விசுவாச சத்தியமென வரையறுத்துக் கூறினார். “மனுக்குல மீட்பரான இயேசு கிறிஸ்துவின் பயன்களை முன்னிட்டு கன்னிமரி கருவான நொடிப்பொழுத்லேயே எல்லாம் வல்ல இறைவனது அருளாலும், சலுகையாலும் ஜென்மப்பாவமாசு அணுகாதவளாய்த் தோன்றினார்.” இவ்வாறு இந்த சத்தியம் சரையறுக்கப்பட்டுள்ளது.

பல ந}ற்றாண்டுகளாகச் சிறிது சிறிதாகவே இந்தப் படிப்பினையில் நம்பிக்கை வளர்க்கப்பட்டு வந்தது. “போதிக்கும் திருச்சபை” கி.பி இரண்டாம் நூற்றாண்டில்” புதிய ஏவை” எனக் கன்னிமரிக்கப் புகழாரம் சூட்டியது. கி.பி 5ம் நூற்றாண்டில் ஏபேசு திருச்சங்கம் “இறைவனின் தாய்” என்ற பெயர் அவருக்கு முற்றிலும் பொருந்தும் என்ற அறிவித்தது. கி.பி 8வது நூற்றாண்டில் “அவர் மாசுபடாதவர்” என்பதை அனைவரும் ஒப்புக்கொண்டனர். “அமல” என்ற சொல் சேர்க்கப்படாமல் “அவரது உற்பவம்” என்ற திருநாள் கீழைத் திருச்சபையில் கொண்டாடப்பட்டது. கி.பி 12ம் நூற்றாண்டில் காண்டர்பரி ஈட்மர் என்பவர் “அமல உற்பவம்” என்ற நூலை வெளியிட்டார். இது உலகமெங்கும் காட்டுத் தீயாக பரவிக் கன்னிமரியின் பாவமின்மையைப் பற்றிப் பெரும் வாக்குவாதங்களை உண்டு பண்ணியது.

இவ்வேளையில் பிரான்சிஸ்கன் கபையைச் சேர்ந்த டன்ஸ் ஸ்காட்டுஸ், புனித அக்வுPனாஸ் தோமையாரின் ஜயங்களைத் தெளிவுபடுத்தி, வெட்டொன்று துண்டு இரண்டாக்கினார். “கன்னிமரி அமல உற்பவி என்றால், கிறிஸ்துவின் மீட்புப் பயன் அவருக்குத் தேவையில்லாதது போல் ஆகிவிடுகிறது” என்பது அக்வீனாஸ் தோமையாரின் சிக்கல். “கிறிஸ்துவை மீட்பராகப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை, மற்றவர்கள் எல்லோரையும்விடக் கன்னிமரிக்கு மிகுதியும் தேவைப்பட்டது. ஏனெனில், மீட்பரின் அருங்கொடை முன்சென்று அவரைப் பாதுகாத்திராவிடில், அவர் ஜென்மப் பாவத்திற்குத் தப்பித்திருக்கமாட்டார்” என்று ஸ்காட்டுஸ் வரையறுத்துக் கூறினார். இவ்வாறு சுட்டியதின் மூலம் சிக்கல் அடியோடு அழிந்தது.

பாம்பின் தலையை மிதித்து நசுக்கப் பரமனால் முன்னுரைக்கப்பட்ட பாவை, இவை பொழுதேனும் பாம்பின் நச்சு வாடைக்கு உட்பட்டிருக்க முடியுமோ? இறைவனின் திருவுளத்திற்கு எதிராக அன்றோ அது அமையும்? இந்தத் திருநாள் உரோமைத் திருநாள் பட்டியலில் கி.பி 1476ல் இடம் பெற்றது. கி.பி 17வது நூற்றாண்டில் பெரும்பாலும் திருச்சபை முழுவதும் இது பரவிற்று. கி.பி 1846ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் நாடுமுவதும் பாதுகாவலியின் திருநாளாகக் கொண்டாடத் தொடங்கினர். 8 ஆண்டுகளுக்குப்பின் “அமல உற்பவம்” திருத்தந்தை 9ம் பத்திநாதரால் வரையறுக்கப்பட்டது.

டிசம்பர் 07 – புனித அம்புரோஸ்

டிசம்பர் 07 புனித அம்புரோஸ்

ஆயர் மறைவல்லுநர் – (கி.பி 340 – 397)

கி.பி 340ல் இவர் பிறந்தபோது இவரின் தந்தை பிரான்சில் ஆளுநராகப் பணியாற்றினார். தந்தை மகனைச் சிறுவயதிலேயே விட்டுவிட்டு இறந்துவிடவே, தாயுடன் உரோமை வந்து சேர்ந்தார். தாயம் சகோதரி புனித மர்செலினாவும் இவரை மிகக் கவனமாக ஞான வாழ்வில் வளர்த்தனர். சிறுவனாயிருக்கும் போது கிரேக்க மொழியில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்ததால், கவிஞராகவும், சிறந்த பேச்சாளராகவும் விளங்கினார். மன்னன் வலேரியன் இவரது திறமைக்கப் பரிசளிப்பதுபோல் மிலானில் இருக்கச் செய்து ஆளுநராக ஆக்கினார்.

மிலானில் ஆரியப்பதித ஆயர் இறந்தபின் பதவியிடத்தை நிரப்புவதில், ஆரிய ஆயராக என்ற மோதல் கிளம்பவே, அதற்கு முடிவுகாண ஒரு பேரவை நடந்தது. அம்புரோஸ் மிகத் திறமையாகப் பேசி அனைவருடைய பாராட்டுதலையும் பெற்றார். கூட்டத்தில் “அம்புரோஸ் ஆயர், அமபுரோஸ் ஆயர்” என்ற பேரோசை எழுந்தது விண்ணைப் பிளந்தது.

அம்புரோஸ் அச்சமடைந்தார். காரணம், கத்தோலிக்கராக வாழ்ந்தாலும், இன்னும் அவர் திருநீராட்டுப் பெறவில்லை. நடந்த விவரங்கள் அனைத்தும் வலேரியனுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, மகிழ்ச்சி வெள்ளத்தில், “நான் நியமித்த ஆளுனரே, ஆயர் பதவிக்கத் தேர்ந்து கொள்ளப்பட்டார்” எனப் பூரிப்படைந்தார். அம்புரோஸ் இதை ஏற்றக்கொள்ளாமல் லியோன்சிஸ் என்ற உயர் அலுவலரின் வீட்டில் ஓடி ஒளிந்து கொண்டார். லியோன்சியஸ் இதைக் கேள்விப்பட்டபின் அம்புரோஸ் ஆயர் பதவிக்குத் தப்பிக்க இயலவில்லை.” அம்புரோஸ் தமக்கு விவிலிய ஞானம் மிகுதியாக இல்லையே என்று சொல்லி விவிலியத்தையும், மறைவல்லுநர்களின் ந}ல்களையம் கற்றுக்கொள்வதில் ஆழ்ந்த அக்கறை செலுத்தினார். நாள்தோறும் திருப்பலி மக்களுக்காக நிறைவேற்றினார்.”

மக்களின் நலனுக்காகவே இவர் ஆயராக இருப்பதை மக்கள் மகிழ்வோடு உணர்ந்தனர். மறையுரையில், இறையன்பின் பொருட்டுத் தெரிந்துகொள்ளம் கன்னிமையின் மேன்மை பற்றி அடிக்கடி பேசுவார். தங்களின் பெண்கள் ஏராளமானவர்கள் இம்மறையுரையைக் கேட்டுத் துறவைத் தெரிந்துகொள்கிறார்கள் என்று சொல்லி அன்னையர் பலர் தங்கள் பெண்கள் இம்மறையுரைகளைக் கேட்கவிடவில்லை. “போர்கள் தான் மக்களை அழிக்கின்றனவே அன்றி, சமூதாயத்தைக் குலைப்பவர்கள் புனிதத்தைத் தேடும் பெண்கள் அல்லர்” என்பார்.

இவரது காலத்தில் ஆரியப்பதிதம் இங்குமங்குமாக இன்னும் தலைவிரித்தாடியது. அரசர்கள் சிலரும் இதற்குத் துணைபோனார்கள். ஒருமுறை வலன்டினியன் மன்னனின் பெயாரால் டால்மேபயஸ், அம்புரோசை அணுகி அரசனின் ஆணை ஒன்றைத் தெரிவித்தார். அம்புரோஸ், திருச்சபையின் அலுவல்களில் அரசன் தலையிடக் கூடாது என்று கட்டளை பிறப்பித்தார். “அரசன் திருச்சபைக்குக் கட்டுப்பட்டவர். அவர் திருச்சபையின் மீது ஏறி உட்காரக் கூடாது” என்றார் அம்புரோஸ்.

இதன் பிறகும் கத்தோலிக்க மன்னன் தியடோசியசுக்கும் ஆயர் அம்புரோசுக்கம் இடையே ஒரு சலசலப்பு ஏற்ப்பட்டது. அம்புரோஸ் திருச்சபையின் ஒழுங்குகளின்படி தம் நிலையில் நிலைத்து நின்றார். ஆலயத்தில் இருந்துகொண்டு மன்னன் அடம்பிடிக்கவே ஆயர், அதற்குத் தீர்வு காணம் வரை திருப்பலி நிறைவேற்ற மறுத்துவிட்டார். மீண்டும் ஒரு முறை மக்களின் எழுச்சியை ஒடுக்க மன்னன் ஆணை பிறப்பித்ததில் 7000 பேர் மடிந்தனர். இந்த வேளையிலும் மன்னனுக்கு ஆயர் திருப்பலி நிறைவேற்ற மறுத்துவிட்டார்.

அடுத்து மன்னன் தியடோசியஸ் இறந்துவிட்டார். அவருடைய உடல் ஆலயத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அடக்கத் திருப்பலியை அம்புரோஸ் நிறைவேற்றினார். அப்போது மன்னனின் பணிவு, தாழ்ச்சி ஆகியவை பற்றி மக்களுக்கு அம்புரோஸ் தெளிவுபடுத்தினார். “அரசருக்குரிய தம் பெருமை ஆடம்பரத்தை எல்லாம் அவர் ஒதுக்கிவைத்துவிட்டு, வெளிப்படையாக ஆலயத்தில் தம் பாவங்களுக்காக மனம் வருந்தினார். மன்னராயிருந்தும் பலர் முன்னிலையில் பாவப் பரிகாரம் செய்ய அவர் வெட்க்கபடவில்லை அரசனும் ஆயர் அம்புரோஸிடம் எப்போதும் மிகக் கண்ணியமாக நடந்துகொண்டார். “அம்புரோசைப் போல் ஆயர் பதவிக்கரியவர்களை நான் பார்த்ததில்லை” என்று மனம்விட்டுப் பாராட்டினார் அரசர்.

ஈராண்டுகளுக்குப்பின் அம்புரோசும் இறந்தார். தமக்கு இறப்பு அடுத்திருப்பதை முன்னுரைத்தார். இறக்கும் நாளன்று சிலுவை அடையாளமாகப் பலமணி நேரம் கைகளை விரித்து வைத்திருந்தார். செபத்தில் உதடுகள் அசைந்துகொண்டிருந்தன. அடுத்த அறையில் இருந்த புனித ஹொனோரேட்டஸ் என்பவருக்கு, “எழுந்து வாரும், விரைந்து வாரும்” என்ற குரல் 3 முறை கேட்டது. அவர் ஓடிவந்து நற்கருணை கொடுத்தார். உடனே ஆயரின் ஆவி பரிந்தது. அன்று பெரிய வெள்ளிக்கிழமை! ஏப்ரல் 4 கி.பி 397.

புனித நிக்கொலாஸ்

புனித நிக்கொலாஸ்

ஆயர் (கி.பி 350)

நிக்கொலாஸ், லிசியா என்றழைக்கப்படும் துருக்கியில் மீரா என்ற நகரின் ஆயராக இருந்தார் என்பதற்கு ஆதாரம் உண்டு. கிழக்கும் மேற்கும் இவரைப் பெருமைப் படுத்தினாலும், மிகுதியாகப் பெருமைப்படுத்தியிருப்பது ர~;யா தான். அந்நாட்டிற்கு இவரும் பெலவேந்திரும் பாதுகாவலர்கள். கிழக்கிந்திய நாடுகளில் கடல் பயணத்திற்கு இவரைப் பாதுகாவலராகத் தெரிந்து கொண்டனர். இவர் ஆயராக இருந்தார் எ;பதைத் தவிர மற்றவையனைத்தும் ஆதாரமற்றவைகளாகத் தெரிகின்றன.

கி.பி 11ம் நூற்றாண்டில் சரசேனியர் மீரா நகரைக் கைப்பற்றினர். அந்த வேளையில் இவரது திருப்பண்டங்கள் மறைவாக இத்தாலியின் தென்பகுதியில் பாரி என்ற நகரில் வைத்துக் காப்பாற்றப்பட்டன.

இவரைப் பற்றிய ஆதாரமில்லா ஒரு புதுமை இதோ: ஏழை ஒருவன் தன் 3 பெண்களைத் திருமணம் செய்து கொடுக்கப் போதிய பொருள்வளம் இன்றி வருந்தினான். வேறுவழி தெரியாமல் அவர்களைத் தவறான வழியில் அவன் ஈடுபடுத்த முற்பட்ட சூழ்நிலையில், புனிதர் குறிக்கிட்டார். அடுத்தடுத்து 3 இரவுகளில் இந்த மனிதன், குடியிருந்த வீட்டு ஜன்னல் வழியாக 3 பைகள் நிறையத் தங்கக் கட்டிகளைப் போட்டுவிட்டுச் சென்றார். இதனால் இந்த 3 பெண்களின் திருமணமும் நிறைவேறியது. நாளடைவில் இதன் அடிப்படையில் இவரது திருநாளன்று பரிசுகள் வழங்குவதும் நடைமுறைக்கு வந்தது. ஆங்கிலம் பெசும் நாடுகளில் “சாந்தாக்கிளாஸ்” என்று இவரை அழைக்கிறார்கள்.

புனித ஜான் டாமசின்

புனித ஜான் டாமசின்

மறைவல்லுநர் – (கி.பி – 650 – 753)

அரேபியா நாட்டில், தமாஸ்கஸ், முஸ்லிம் ஆட்சியிலிருந்தது. ஜானின் தந்தை ஆழமான விசுவாசமுள்ள கிறிஸ்தவராயினும் அரசாங்க கருவூலத்தின் பொறுப்பாளராகப் பணிபுரிந்தார்! இவருடைய திறமையால் ஏராளமான கிறிஸ்தவ அடிமைகளை மீட்க முடிந்தது. அப்படி கி.பி 699ல் மீட்க்கப்பட்டவருள் ஒருவர் சிசிலியா நகரைச் சார்ந்த துறவி ஆவார். கோஸ்மாஸ் என்ற பெயருடைய இவர் மிகவும் அறிவுக்கூர்மை வாய்ந்தவர். இவர்தான் இளைய ஜானுக்கு ஆசிரியராக அமைந்தார். மறையியல் உட்பட எல்லாவிதமான கல்வியையும் திறம்படக் கற்றுத் தந்தார். கோஸ்மாஸ் என்பவர் கணிதத்தில் பித்தாகோரசு;கு நிகராகவும் புநழஅநவசல ல் யூக்ளிட் என்ற தத்துவ ஞானிக்கு நிகராகவும் திகழ்ந்தாராம். இப்படிப்புக்களின் இறுதியில் காலிஃபின் அரச அவையில் ஜான் பொறுப்புள்ள பணியாற்றி வந்தார். இச்சூழலில் கொன்ஸ்டான்டைன் மன்னன் லியோ கி.பி 726ல் சுரூப வணக்கம் கூடாது என்று கட்டளை பிறப்பித்தான். இவ்வழக்கம் காலங்காலமாகத் திருச்சபையில் இருப்பதையும், இதில் தவறு எதுவும் இல்லையென்றம் ஜான் சுட்டிக் காட்டி வன்மையாகச் சாடினார். எனவே அரசன் சினமுற்றான்.

பின்னர் அரச அவைப் பொறுப்பிலிருந்து விலகி, யெருசலேமுக்கு அருகில் இருந்த புகழ்பெற்ற புனித சேபாஸ் என்ற துறவியிடம் சென்று அவரின் சீடரானார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் குருவாகத் திருநிலைப்படுத்தப் பெற்றார். குருப்பணியாற்றும்போது, இவரது வியத்தகு போதிக்கும் திறமைம் மறைநூல்கள் எழுதிய முறையும் அனைவருடைய மதிப்பையும் ஈதர்த்தன. கிரேக்க மறைத்த தந்தையர்களின் வரிசையில் கடைசியாக இவர் இடம் பிடித்துவிட்டார்.

“ஞானத்தின் ஊற்று” என்ற இவருடைய நூல், இதற்கு முந்திய திருச்சபையின் பாரம்பரியம், மறை இயலில் மிகத் தெளிவாகக் கற்றுக் கொடுத்து வந்தவர்களிடையே நிலவிய கருத்துக்கள் ஆகியவற்றை உள்ளடக்கியமதக மதிக்கப்பட்டது. இந்நூல் “மறை இயல் தொகுப்பு” ளுரஅஅய வுhநழடழபiஉய என்று Nhற்றப்பெற்று வநடதது. திருவழிபாட்டுப் பாடலுக்கும் இவர் மிகுந்த சிறப்பிடம் கொடுத்தார். அனைத்திற்கும் மேலாக திவ்விய நற்கருயையைப் பற்றித் தெளிவான கருத்துக்களைக் கொடுத்துள்ளார். “மனிதாவதாரம்” என்பதும் இவரது கவனத்தை ஆழமாக ஈர்த்துள்ளது.

மரியன்னை விண்ணகம் எடுத்துக்கொண்டது பற்றி இவர் எழுதியவையும் மிகப் புகழ் வாய்ந்தவை. “இந்த மறை பொருளுக்கு என்ன பெயரிடலாம்? சாவு என அழைப்போமா? இல்லை. ஏனெனில் மனிதாவதாரம் எடுத்த இறைவன் ஒரு கன்னியிடமிருந்து தோன்றினார். எனவே தம் தாய் இவ்வுலகைவிட்டுப்பிரியும் போது, அவரது உடலை அழியாது காத்துக்கொண்டார். மேலும் உடல்கள் அனைத்தும் உயிர்தெழும் இறுதிநாள் வரை காத்திராமல், இறைவன் அவரை உடனே விண்ணகத்திற்கு எடுத்துச் சென்றார். அஙகு அவரைப் பெருமைப்படுத்தத் திருவுள்ளம் கொண்டார். “எனவே ஓ, கன்னித்தாயே, பாவ மாசற்ற, மிகவும் தூய்மையான உமது உடல், மண்ணிற்குள் புதைக்கப்பட்ட நிலையில்லாமல், வானக அரசு உரிமைக்கு உமது மகனின் விருப்பத்தினால் எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றீர். உண்மையில் நீரே அரசி, நீரே இறைவனின் தாய்.

புனித பிரான்சிஸ் சவேரியார் சே.ச

புனித பிரான்சிஸ் சவேரியார் சே.ச

மறைப்போதகர் (கி.பி 1506 – 1552)

இவர் ஸ்பெயின் நாட்டினர். இவரது ஞானத் தந்தையாகிய இஞ்ஞாசியாரைப்போல் பாஸ்குப் பகுதியைச் சேர்ந்தவர். இவரிடம் 24வது வயதில் காணப்பட்ட உலகப் பற்றுதல்களைத் தந்தை இஞ்ஞாசியார் முற்றிலும் கட்டுப்படுத்தினார். பாரிஸ் பல்கலைக் கழகத்தில் 4 ஆண்டுகள் பாவர் இராயப்பருடனும், சவேரியருடனும் இஞ்ஞாசியார் உரே அறையில் தங்கிக் கற்று வந்தார்.

குருப்பட்டம் பெற்றபின் சவேரியார், “சிறிய மந்தை” என்ற அழைக்கப்பட்டதும் இளந்தளிரானதுமான இயேசு சபையின் முதல் மறைப்போதகராகக் கீழத்திசை நாடுகளை நோக்கிப் புறப்பட்டார். வேறொருவர் அனுப்பப்பட இருந்தபோது சூழ்நிலையின் காரணமாக, இறுதிக்கட்டத்தில் தான் சவேரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். “பிரான்சிஸ்! இது உங்கள் பணி” என்றார் இஞ்ஙாசியார். 24 மணி நேரத்திற்குள் பிரான்சிஸ், உரோமையிலிருந்து போர்ச்சுக்கல்லுக்குப் பறப்பட வேண்டும். மகிழ்ச்சியோடு இப்பணியை “ஆகட்டும்” என்று சொல்லி, ஏற்றுக்கொண்ட சவேரியார், கிழிந்த ஒரு நீளமான கால்சட்டையையும், பழைய அங்கியையும் பழுது பார்த்துக்கொண்டு, புறப்படுவதற்குத் தயாரானார். எளிமை மற்றும் கீழ்ப்படிதலின் மூலம் இறைவனின் திருவுளத்தைத் தெரிந்து செயல் படுதல், செபவாழ்வு இவைதான் சென்ற இடமெல்லாம் இவரது வாழ்வின் சாரமாக அமைந்தன.

மொழிகளைக் கற்றுக்கொள்வது இவருக்கு அரிதாகவே தோன்றியது. பற்றாக்குறைக்கு, சந்திக்கும் மக்களின் பழக்கங்களைப் புரிந்து செயல்படுவதும் எளிதானதன்று. லிஸ்ப் துறைமுகத்தில் இருந்து கோவாவை வந்தடைய 13 மாதங்கள் ஆயின. பயணத்தில் ஒரு முறை இவர் இஞ்ஞாசியாருக்கு எழுதிய மடலில் “எங்களுக்கு மகிழ்ச்சியூட்டுவது ஒன்று இருக்கிறது. இது இறைவன் அருளை இடைவிடாது எதிர்நோக்கி வாழ வழிவகுக்கிறது. அது என்னவெனில், நற்செய்தி பரப்புப் பணியில் எங்களுக்கத் தேவைப்படும் ஆற்றல் அiவை எதுவும் எங்களிடம் கிடையாது” என்று குறிப்பிடுகிறார்.

இவர் இந்தியாவிலும் ஜப்பானிலும் 10 ஆண்டுகள் அயராது உழைத்தார். நற்செய்திப் பணிக்காக இவர் செய்த பயணங்கள் இன்றைக்கு யாரையும் திகைக்க வைக்கின்றன. இறைவனுடன் செபத்தின் வழி ஒன்றித்த வாழ்வு மட்டுமே இவருக்கு இப்பயணங்களை மேற்கொள்ள ஆற்றல் அளித்திருக்க முடியும்.

“நிலையற்ற இவ்வுலகில் அமைதியான இளைப்பாற்றியைக் காண இயலாது. இறையன்பால் உந்தப்பட்டு, இறப்பே என்றாலும் அதனை எதிர்நோக்கி வாழ்வதில்தான், மனநிறைவு உண்டு” என்று மாசிஸ்லாஸ் என்ற தோழருக்கு எழுதிய கடிதங்களில் இவர் குறிப்பிடுகிறார். மீண்டும் மீண்டும் இறைமக்களை அவர்களின் இல்லம் சென்று சந்தித்து ஆறுதல் கூறி, விசுவாசத்தில் உறுதிப்படுத்த தூண்டுகிறார். “ஆலைக்குத் தண்ணீர் வந்து சேரவில்லையா? ஆலை முதலாளிதான் தண்ணீருடன் இடத்திற்குச் செல்ல வேண்டும்” என்பார். இவர் மேலும் “இந்த மக்களிடம் நீர் ஆழ்ந்த பற்றுதலுடன் நடந்துகொள்ள வேண்டும். ஏனெனில் நீர் அவர்களை அன்பு செய்யவும், அவர்கள் உம்மை அன்பு செய்வதற்கான சூழ்நிலையில் தான் அவர்களுக்கு மிகுந்த நன்மை செய்யமுடியும். இதுபோல்தான் நான் நடந்து கொள்கிறேன்” என்று எழுதினார்.

இந்தியாவில் நற்செய்தியைப் பரப்பத் தொடங்கி ஒன்றரை ஆண்டு ஆன பின்பு, இஞ்ஞாசியாருக்கு ஒரு மடல் எழுதினார். “திருமுழுக்கு எத்தனை பேருக்குக் கொடுக்க வேண்டியிருக்கிறது எனில் பல வேளைகளில் என் கைகள் வாத நோய் கண்டதுபோல், உயர்தத் முடியாத அளவுக்கு மரத்துப் போய்விடுகின்றன. இவர்களின் மொழிகளில் விசுவாசப் பிரமாணம் முதலில் செபங்களைச் சொல்லி எனக்குத் தொண்டையும் மரத்துப் பொவதுபோல் பெசவும் முடியவில்லை.”

இன்னும் அவர் எழுதியதாவது: “பல்கலைக் கழகத்தில் பல கலைக் கற்றுக் கொண்டிருக்கிறார்களே, தங்;கள் பாடங்;களுடன் இறைவன தங்களுக்குத் தந்த ஆற்றல்களுக்கு ஈடாக இறுதி நாளில் அவர் கேட்க இருக்கும் வாழ்க்கைக் கணக்கைப் பற்றி நினைப்பார்களா? அவ்வாறு நினைத்துவிட்டால், உடனே ஞான முயற்சிகள் செய்ய முன்வருவார்கள். இவை இறைவன் திருவுளத்தை உணர வைக்கம்! நான் என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்?” என்று கேட்கவும் முன்வருவார்கள்.

ஜப்பான் நாட்டிற்குச் சென்று, போதிய அளவு அந்த மொழியைக் கற்றுக்கொண்டார். அந்த நாட்டிலும் நற்செய்தியைப் போதித்து மறைக்கல்வி கற்றுக்கொடுத்து, திருமுழுக்காட்டித் தம் தொண்டுத் தளத்தை விரிவுபடுத்தினார்.

ஹாங்காங் நகருக்கு ஏறத்தாழ 100 கல் தொலைவில் உள்ளது சான்சியன் தீவு. கப்பல் வழியாகச் சவேரியார் அதை நோக்கிப் பயணம் செய்ததால் வழியில் காய்ச்சலின் காரணமாக, இவரைக் கப்பலிலிருந்து கரைக்கக் கொண்டுவந்து விட்டுச் சென்றார்கள். ஒரு போர்ச்சுக்கீசிய வாணிகர் இரக்கப்பட்டு அருகில் இருந்த குடிசையொன்றில் வைத்துச் சென்றார். அருகில் இருந்தவர் அந்தோணி என்பவர். பாடுபட்ட சுரூபத்தைக் கையில் வைத்துக்கொண்டே சவேரியார் இறைவன் அடி சென்றார்.

இறந்த இவரின் சடலத்தை அடக்கம் பண்ணும்போது கல்லறையில் இவரது உடலோடு சுண்ணாம்பை நிரப்பினார்கள். 6 மாதங்களுக்குப்பின் இவரது தாயகத்திற்கு இவரது எலும்புகளைக் கொண்டுபோய், உறவினரிடம் ஒப்படைக்கவே, இவ்வாறு சுண்ணாம்பு கலந்தனர். 6 மாதங்களுக்குப் பின் கல்லறையைத் தோண்டினர். இவரது உடல் சிறிதும் அழியாமலிருப்பதைப் பார்க்கும் போது, இறைவனை ழுமுமையாக அன்பு செய்வோரை ஆண்டவர் எவ்வாறு பேணுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியாதா?