புனித நிக்கொலாஸ்

புனித நிக்கொலாஸ்

ஆயர் (கி.பி 350)

நிக்கொலாஸ், லிசியா என்றழைக்கப்படும் துருக்கியில் மீரா என்ற நகரின் ஆயராக இருந்தார் என்பதற்கு ஆதாரம் உண்டு. கிழக்கும் மேற்கும் இவரைப் பெருமைப் படுத்தினாலும், மிகுதியாகப் பெருமைப்படுத்தியிருப்பது ர~;யா தான். அந்நாட்டிற்கு இவரும் பெலவேந்திரும் பாதுகாவலர்கள். கிழக்கிந்திய நாடுகளில் கடல் பயணத்திற்கு இவரைப் பாதுகாவலராகத் தெரிந்து கொண்டனர். இவர் ஆயராக இருந்தார் எ;பதைத் தவிர மற்றவையனைத்தும் ஆதாரமற்றவைகளாகத் தெரிகின்றன.

கி.பி 11ம் நூற்றாண்டில் சரசேனியர் மீரா நகரைக் கைப்பற்றினர். அந்த வேளையில் இவரது திருப்பண்டங்கள் மறைவாக இத்தாலியின் தென்பகுதியில் பாரி என்ற நகரில் வைத்துக் காப்பாற்றப்பட்டன.

இவரைப் பற்றிய ஆதாரமில்லா ஒரு புதுமை இதோ: ஏழை ஒருவன் தன் 3 பெண்களைத் திருமணம் செய்து கொடுக்கப் போதிய பொருள்வளம் இன்றி வருந்தினான். வேறுவழி தெரியாமல் அவர்களைத் தவறான வழியில் அவன் ஈடுபடுத்த முற்பட்ட சூழ்நிலையில், புனிதர் குறிக்கிட்டார். அடுத்தடுத்து 3 இரவுகளில் இந்த மனிதன், குடியிருந்த வீட்டு ஜன்னல் வழியாக 3 பைகள் நிறையத் தங்கக் கட்டிகளைப் போட்டுவிட்டுச் சென்றார். இதனால் இந்த 3 பெண்களின் திருமணமும் நிறைவேறியது. நாளடைவில் இதன் அடிப்படையில் இவரது திருநாளன்று பரிசுகள் வழங்குவதும் நடைமுறைக்கு வந்தது. ஆங்கிலம் பெசும் நாடுகளில் “சாந்தாக்கிளாஸ்” என்று இவரை அழைக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *