Category Archives: இன்றைய தூயவர்

ஜனவரி:26 புனித திமொத்தேயு

ஜனவரி:26
புனித திமொத்தேயு
மறை ஆயர், வேதசாட்சி-(கி.பி.97)

திமொத்தேயுவின் தந்தை புற இனத்தவராகவும், தாய் யூதகுலத்தைச் சார்ந்தர்களுமாயிருந்தார்கள். புனித பவுல் பல இடங்களிலும் சென்று போதித்த போது திமொத்தேயுவும் அவர் தம் தாயாரும் பாட்டியும் அவரிடத்தில் திருமுழுக்குப் பெற்றார்கள். திமொத்தேயுவின் பக்தியையும் அறிவினையும் அறிந்த திருத்தூதர்கள் அவரைத் தம் துணைவராகத் தெரிந்து கொண்டனர். புனித பவுல் அவரைத் திருச்சபைக்காக வேதனைகளை அனுபவிக்கும் கிறிஸ்தவர்களிடம் அனுப்புவார். சில வேளைகளில் வேதத்தில் தத்தளிக்கும் விசுவாசிகளிடம் அனுப்புவார். பவுலின் வழியிலேயே திமொத்தேயு நடந்து கொண்டபடியால் எபேசு நகருக்கு ஆயராக நியமனம் பெற்றார். பவுல் சிறையில் வைக்கப்பட்டபொழுது திமொத்தேயுவுக்கு மெய்மறை பற்றி இரு திருமடல்கள் எழுதியனுப்பினார். திமொத்தேயு எண்ணற்ற புண்ணியங்களையும் தவச் செயல்களையும் செய்து வேதத்துக்காக தடிகளால் அடிக்கப்பட்டு வேதசாட்சி முடிபெற்றார்.

 

ஜனவரி:25 புனித பவுல் மனமாற்றம்

ஜனவரி:25
புனித பவுல் மனமாற்றம்

“சகோதரர்களே, உங்களுக்கு ஒன்று தெளிவுபடுத்த விரும்புகின்றேன். நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தி இயேசு கிறிஸ்து அளிய திருவெளிப்பாட்டின் வழியாகவே எனக்கு கிடைத்தது. ஒரு காலத்தில் நான் யூதமறையை பின்பற்றிய போது, கடவுளின் திருச்சபையை எவ்வளவோ துன்புறுத்தி ஒழிக்க முயன்றேன். ஆனால் தாயின் வயிற்றில் இருந்தபோதே என்னைத் தேர்ந்தெடுத்து தம் மகனைப்பற்றிய நற்செய்தியை புறவினத்தாருக்கு அறிவிக்கும் படி அம் மகனை எனக்குள் வெளிப்படுத்த திருவுளம் கொண்டார். ஒரு காலதடதில் நம்மை துன்புறுத்தியவன் தான் முன்பு ஒழிக்க முயன்ற விசுவாசத்தை போதித்து இப்பொழுது நற்செய்தி அறிவிக்கிறான் என்று மட்டும் (யூதேயா நாட்டு கிறித்தவர்கள்) கேள்விப்பட்டிருந்தனர்” (கலா.1, 11-24).
“நானே முன்னர் கடவுளைப் பழித்தேன். திருமறையை துன்புறுத்தினேன். கொடுமை புரிந்தேன். ஏனெனில் விசுவாசத்தைப் பெறாத நிலையில் அறியாமையால் அவ்வாறு நடந்தேன்” (1திமோ.1, 13-13).
“ நீ கண்களை திறப்பாய். அவர்கள் இருளைவிட்டு ஒளிக்கு வந்து பேயின் அதிகாரத்திலிருந்து கடவுள் பக்கம் திரும்பச் செய்வாய்.” (தி.ப.26,78).
“நான் வாழ்வது கடவுளின் மகன்மேல் உள்ள விசுவாசத்தின் வாழ்வாகும். இவரே என்மேல் அன்புகூர்ந்தார். எனக்காகத் தம்மையே கையளித்தார்.” (கலா.2, 22).
“நீ துன்புறுத்தும் இயேசு நானே ” என்ற சொற்கள் சவுலைக் கிறிஸ்துவின் சீடனாக மாற்றிவிட்டன. இங்கே இயேசு தம்மையும் தம்மீது விசுவாசம் கொண்டவர்களையும் ஒன்றாக்கிக் கொண்டதை பவுல் முற்றிலும் புரிந்து கொண்டார். கிறிஸ்துவின் மீது விசுவாசம் கொண்டவர்களை கறுவருக்கக் கங்கணம் கட்டிய தவற்றை ஒரு நொடியில் உணர்கிறார்.

 

ஜனவரி:24 புனித பிரான்சிஸ் சலேசியார்

ஜனவரி:24
புனித பிரான்சிஸ் சலேசியார்
மறைவல்லுனர்-(கி.பி.1567-1622)

 

ஜெனிவா நகரின் ஆயராக விளங்கியவர். புனித ஜான் பிரான்சிஸ் தே சாந்தாளுடன் சேர்ந்து மினவுதல் சபையைத் தோற்றுவித்தவர். “புனிதத்தில் வளர்வது எளிதிலும் எளிது. போர் வீரருக்கும் இது கைகூடும். பணித்தளத்தில் இருப்பவருக்கும் இது கைகூடும். ஏழை, பணக்காரருக்கும் இது கைகூடும். எங்கிருந்தாலும் இதயங்களை ஆண்டவரிடம் எழுப்பி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.”என்பார். “இறைவன் நமது இதயத்தில் மையங்கொண்டு வாழ விரும்புகிறார்.” என்பது இவரின் அசையாத நம்பிக்கை.
இவர் பிரான்ஸ் நாட்டில் சவாய் என்ற பகுதியில் உயர் குலத்தில் 13 மக்களில் மூத்தவராக தோன்றியவர். இவர் தம் தந்தை இவரை சட்டபடிப்புக்கு அனுப்பி உலகில் உயர்ந்த பதவியேற்க திட்டம் தீட்டினார். இத்திட்டத்துடன் பதுவை நகர் பல்கழைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தார். சட்டக் கலையில் பட்டம் பெற்றபின் தந்தையின் கனவை தவிடுபொடியாக்கி விட்டு குருத்துவத்தை இவர் தேர்ந்து கொண்டார்.இயறற்கையில் இறைவனை இவர் கண்டுகளித்ததின் பயனாக இவரது பிற்கால மறைபோதனையில் இவ்வுண்மைகள் பளிச்சிட்டன.
இவர் கவனத்துடனும் திறமையுடனும் எழுதிய மறை விளக்க நூல்கள் பலவற்றைக் கால்வின் பதித்தனம் நிலவிய ஸாப்ளே எனும் மாவட்டத்தில் வாசிக்க அவற்றை மக்களிடம் வழங்கினார். அதன் பின் அங்கு அவர் நேரடியாக போதிக்கவும் கால்வின் பதிதத்தை சேர்ந்த பலரை மனந்திரும்பவும் முடிந்தது. “கடவுள் மீது அன்பு” என்ற நூலை இவர் எழுதி முடிக்க 10 ஆண்டுகள் ஆயின.
திருத்தந்தை 23ம் அருளப்பர் இவரைத் தம் வாழ்நாளெல்லாம் முன் மாதிரிகையாகத் தெரிந்து கொண்டார். திருத்தந்தை தமது நாள் குறிப்பில் இவ்வாறு எழுதியுள்ளார். “புனித சலேரியாரின் வாழ்க்கை வரலாற்றை பலமுறை படித்திருக்கிறேன். அவருடைய அறிவுரைகள் என் வாழ்வில் எவ்வளவு பொருத்தமாக உள்ளன! அவரது முன்மாதிரிகையால், தாழ்ச்சி, சாந்தகுணம், அமைதி இவைகளின் மீது என் உள்ளம் தணியாத வேட்கை கொண்டுள்ளது. நாள்தோறும் நான் சாதாரண அலுவல்களையும் மிக மேலான நோக்கத்துடன் செய்தாலே போதும் என்று இப்போது புரிந்து கொண்டேன். பிரான்சிஸ் அமைதிப் பண்பு உள்ளவராகவே மக்கள் அனைவரிடத்திலும் நடந்து கொண்டார் என்பதை அவரைத் தேடி வந்த யாவரும் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது.”
“ஒரு பீப்பாய் நிறைய புளித்த காடி ஈக்களை ஈர்க்க முடியாது. ஆனால் ஒரு கரண்டி தேன் பல ஈக்களை ஈர்க்க முடியும்” என்பது இவரது விருதுவாக்காயிருந்தது.

 

ஜனவரி:22 புனித வின்சென்ட்

ஜனவரி:22
புனித வின்சென்ட்
தியாக்கோன்-(கி.பி.304)

 

ஸ்பெயின் இவரது தாய் நாடு. சரகோசாவில் இவர் வேதசாட்சியாகி விண்ணகம் அடைந்த போது இவர் பட்ட பாடுகளைப் பற்றிய குறிப்புக்கள் தம்மிடம் இருந்தன எனப் புனித அகஸ்டின் ஒரு மறையுரையில் குறிப்பிடுகிறார். சரகோசா நகரின் ஆயராக இருந்த வலெரியஸ் என்பவர் வின்சென்டுக்கு தியாக்கோன் பட்டம் அளித்தார். இவர்களிருவரும் 303ம் ஆண்டு சிறையில் வைக்கப்பட்டனர். பட்டினியாக விடப்பட்டதுடன் வேதனைகளுக்கும் உள்ளானார்கள். ஆனால் விசுவாசத்தில் உறுதிப்பட்டனர். ஆயர் இதன் பின்னர் நாடு கடத்தப்பட்டார். தனிமையாக விடப்பட்ட வின்சன் மீது டேசியன் மன்னன் புலியெனெப் பாய்ந்தான். கொலைஞர் அவனை கீழே கிடத்தி அவரது கை, கால்களை பிணைத்திருந்த கயிறுகளுக்கு கம்பிகளை மாட்டி இழுத்தனர். அவரது கை, கால், மூட்டுக்கள் கழன்றன. மிகக் கொடுமையாக அடித்து உடலைக் கிழித்தனர். இரத்தம் தரையில் ஓடியது. இரும்புக் கட்டிலில் கிடத்தி அடியில் நெருப்பு மூட்டினர். வின்சென்ட் எதற்கும் அஞ்சவில்லை. தூய்மையற்ற சிறை அறை ஒன்றில் தூக்கியெறியப்பட்டார். அங்கே அவரது முகத்தில் தோன்றிய அருள் ஒளியைக் கண்ட காவலர் மனந்திரும்பினார். இங்ஙனம் அடைந்த வேதனைகளினால் இவர் மறைசாட்சியாக உயிர் நீத்தார்.

ஜனவரி:21 புனித ஆக்னெஸ்

ஜனவரி:21
புனித ஆக்னெஸ்
கன்னி, மறைசாட்சி-(கி.பி.258)

இவர் உரோமையில் பட்ரீசியன் என்ற உயர் குலத்தில் தோன்றியவர். 12 வயதிலேயே தம் கன்னிமையை இறைவனுக்கு கையளித்தார். இவர் அழகான தோற்றமுடையவர். பணம் படைத்த பலரும் இவரை மணந்து கொள்ள முயன்றனர். “எனது கன்னிமை இறைவனுக்கே” என்று கூறினார். இதைக் கேட்டு சினம் அடைந்தவர்கள் இவரை கிறிஸ்தவள் என்று குற்றம் சாட்டினார்கள். மறையை மறுதலிக்கும்படி வற்புறுத்தப்பட்டார். தம் விசுவாசத்தில் வேரூன்றி இருந்தமையால் இவர் கண்முன் நெருப்பு மூட்டப்பட்டு அதை அவரிடம் காட்டி மிரட்டிய போது அவர் அஞ்சவில்லை. பொய்த் தெய்வங்களுக்கு தூபங்காட்ட பணிக்கப்பட்ட போதும் தம்மேல் சிலுவை வரைந்து கொண்டாரேயன்றி விசுவாசத்தை மறுதலிக்கவில்லை. பின்னர் ஒரு விலைமகளின் வீட்டில் விடப்பட்டார். அங்கு தீய இளைஞர் பலர் அவரை அனுக முயன்றும் அவர்களால் முடியாமற் போயிற்று. அவர்களில் ஒருவன் மின்னல் போன்ற ஓர் ஒளியால் தாக்கப்பட்டு பார்வையிழந்து கீழே விழுந்தான். புனிதவதியின் உருக்கமாக மன்றாடியதால் அவன் மீண்டும் பார்வை பெற்றான். இறுதியில் அவர் தலை வெட்டப்பட்டு மறைசாட்சியாக குருதி சிந்தி வானகப் பரிசை பெற்றுக் கொண்டார்.

 

ஜனவரி:20 புனித செபஸ்தியார்

ஜனவரி:20

புனித செபஸ்தியார்
மறைசாட்சியர்-(கி.பி.257-288)

இவர் பிரான்ஸ் நாட்டினர். இத்தாலி நாட்டில் கல்விப் பயிற்சி பெற்றார். இவரது நாட்களில் கிறிஸ்தவர்கள் வதைக்கப்பட்டனர், கொல்லப்பட்டனர். இத்தகைய சூழ்நிலையிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு இவர் பரிவிரக்கம் காட்டினார். ஊக்கம் அளித்தார். இதற்காகவே படையிற் சேர்ந்தார். தமது திறமையால் படையில் பதவி உயர்வு பெற்றார். இவர் காலத்தில் வேதத்திற்காக சிறைபட்டுக்கிடந்த மார்க்கஸ், மார்சலீனஸ் என்ற இருவரும் தம் பெற்றோரின் தூண்டுதலால் வேதத்தை மறுதலிக்கக் கூடும் என்ற சூழ்நிலையை புனிதர் உணர்ந்தார். உடனே இவர் இவ்விருவரையும் அனுகி விசுவாசத்தில் உறுதிப்படுத்தினார். இதன் காரணமாக அவர்கள் தங்கள் குருதியை சிந்தும் அளவுக்கு விசுவாசத்தில் நிலைத்திருந்தார்கள். இத்தையக தொண்டுகளைப் பற்றி கேள்வியுற்ற மன்னன் இவரை ஒரு மரத்தில் கட்டி அம்புகளால் எய்து கொல்லக் கட்டளையிட்டான். இவ் வேதனைக்குப் பின் அவர் இறந்திருப்பாரென விட்டுச் சென்றனர். இறை அருளால் இவர் பிழைத்துக் கொண்டார். பிறகு அரசனை மீண்டும் அனுகினார். குpறிஸ்தவர்களை வதைக்கக் கூடாதென்றார். அப்போது மன்னன் இவரை தடியால் அடித்து கொல்லக் கட்டளையிட்டான். இவ்வாறு இவர் கிறிஸ்துவிற்கு தம் குருதியால் சான்று பகர்ந்து உயிர் நீத்தார்.

 

ஜனவரி:20 புனித பபியான்

ஜனவரி:20

புனித பபியான்
திருத்தந்தை-(கி.பி.250)

 

கி.பி 236ம் ஆண்டு திருத்தந்தை அந்தீருஸ் இறையடி சேர்ந்தபின் திருச்சபைளின் தலைமைப்பதவியை யாரிடம் அளிப்பது என்று உரோமை குருக்களும் பொதுநிலையினரும் ஒன்று கூடி ஆராய்ந்தனர். அப்போது பபியான் என்ற ஒரு தூயவரின் தலையில் ஒரு மாடப்புறா வந்திறங்கியது. இதுவே பபியான் என்பவரை தலைவராக்குவதற்கு தூய ஆவி அருங்குறியாக எடுத்துக்கொள்ளப்பட்டதென்று புகழ் வாய்ந்த திருச்சபை வரலாற்று வல்லுனர் ஒருவர் குறிப்பிடுகிறார். பெரிய வியாழனன்று புனிதத் தைலம் மந்திரிக்கப்படும் புனிதச் சடங்கினை தோற்றுவித்தவர் பபியானே ஆவார். 14 ஆண்டுகாலமாக திருச்சபையை வழிநடத்தினார். பின்னர் டிசியஸ் என்ற வேதகலாபனைக்காரன் ஆட்சிக்கு வந்ததால் திருச்சபை தாக்கப்பட்டது. வேதகலாபனையில் இவர் உயிர் துறந்தார். இவரது இறப்பினைப்பற்றி புனித சுப்பிரியான் கூறியது. “மறை ஆயர் ஒருவர் மறைசாட்சியின் மரண வேதனைகளை அடைவது அவருடைய சகோதரர்களுக்கு ஊக்கத்தை தருகிறது.” இவர் பொதுநிலையினரில் ஒருவராக இருந்த போது திருத்தந்தையாக தெரிந்து கொள்ளப்பட்டவர்.

 

ஜனவரி:19 புனித இக்னேசியஸ் அசுவேடா, சே.ச.

ஜனவரி:19
புனித இக்னேசியஸ் அசுவேடா, சே.ச.

இவர் போர்த்துக்கல் நாட்டினர். 1548ல் கொயிம்பிரா நகரில் இயேசு சபையில் துறவு வாழ்வை தொடங்கினார். இவர் குருப்பட்டம் பெற்றபின் பிறரன்புத் தொண்டுகள் பல புரிந்து வந்தார். பிரான்சிஸ் போர்ஜியா சபைத் தலைவராக தெரிந்தெடுக்ப்பட்ட போது வாக்குரிமையுடன் உரோமை சென்று சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இவர் விரும்பியவாறு இவருக்கு அறிமுகமாகாத பிறேசில் நாட்டுக்கு அனுப்பப்பட்டார். பிறேசில் நாட்டில் பணியாற்ற மேலும் பல மறைபோதகர்கள் தேவை என்று உணர்ந்து இயேசு சபை குருக்கள் 73 பேரை திரட்டிச் சென்றார். 2 கப்பல்களில் பயணத்தை மேற்கொண்டனர். சன்டியாகோ என்ற கப்பலில் அசுவேடோவும் 39 தோழர்களும் சென்றனர். கனேரித் தீவுக்கருகில் கப்பலில் இருந்தவர்களைத் தாக்கினர். அசுவேடா தம் தோழர்களை சாவுக்கு தயாராயிருக்க கேட்டுக் கொண்டார். இவர்கள் ஒருவர் பின் ஒருவராக அடித்து நொறுக்கப்பட்டு கடலில் தள்ளப்பட்டனர். சமையல்காரர் ஒருவர் மட்டும் உயிரோடு விடப்பட்டார். அவர் தான் தம் தோழர்கள் கொல்லப்பட்டதை அறிவித்தார். 1570ம் ஆண்டு ஜீலை மாதம் 15ம் நாள் புனித அவிலா தெரேசாவுக்கு ஒரு காட்சி கிடைத்தது. (கடலில் இவ்விதம் எறியப்பட்டவர்களில் ஒருவர் தெரேசாவின் உறவினர்) இவர்கள் எல்லாரும் ஒளிமயமாக வான்வீடு பறந்து சென்றதை அக்காட்சியில் அவிலா தெரேசா பார்த்தார்.

 

ஜனவரி: 19 சே.ச. ஜேம்ஸ் பொன்னாடும் , தோழர்களும்

ஜனவரி: 19
சே.ச. ஜேம்ஸ் பொன்னாடும் , தோழர்களும்
(1792)

பிரான்ஸ் நாட்டில் பெரியதோர் புரட்சி தோன்றிய நாட்களில் திருச்சபைக்கு மிகப் பெரிய சோதனைகளும் நெருக்கடிகளும் எழுந்தன. நூளடைவில் திருச்சபையே அழஜக்கப்பட்டது போல் தோன்றியது. பாப்புவின் அதிகாரத்தை புரட்சியாளர்கள் உதறித்தள்ளினர். புரட்சி அரசால் தரப்பட்ட வாக்குறுதியை ஏற்றுக் கொள்ளாதவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். 160 குருக்கள்(இவர்களில் மூவர் ஆயர்கள்) 1792ல் அடிபட்டு அல்லது தலை வெட்டப்பட்டு கொல்லப்பட்டனர். இவர்களில் ஜேம்ஸ் பொன்னாடும் அவரது இரு தோழர்களும் சேசு சபையினர்.

ஜனவரி:19 ஜேம்ஸ் சேல்ஸ் தோழர்கள்

ஜனவரி:19

ஜேம்ஸ் சேல்ஸ் தோழர்கள்
இயேசு சபை மறைசாட்சிகள்-(1556)

ஜேம்ஸ் சேல்ஸ் பிரான்ஸ் நாட்டினர். வெர்ட்யூ என்ற இடத்தில் 16 வயதில் இயேசு சபை இளந்துறவு மடத்தில் சேர்ந்தார். 10 ஆண்டுகளுக்குப்பின் குருவானார். நுற்கருணையில் வாழும் நாதரிடம் தனிப்பெரும் பக்தி கொண்டிருந்தார். மறைபரப்பு நாடுகளுக்குச் சென்று பணியாற்ற விரும்பி விண்ணப்பித்தார். “இந்தியத்தீவுகளில் கிடைக்கக்கூடிய ஞான அறுவடை பிரான்சிலேயே கிடைக்கும்” என்றார் இயேசு சபைத்தலைவர் அக்வாவீவா.பிரான்சில் திருமறைக்கல்வி கற்றுத்தரும் பொறுப்பினை இவர் ஏற்றாhர். இக்காலத்தில் ஒருமுறை அப்பென்னாஸ் என்ற இடத்தில் திருவருகைக்காலத்தின் சிறப்பு மறையுரை ஆற்ற அனுப்பப்பெற்றார்.

வுpல்லியம் சால்ட்முஸ் சே.ச. ஜேம்சுக்கு தோழராக அனுப்பப்பட்டார். இவர் இயேசு சபையில் துணைச் சகோதரராக பணியாற்றினார். செபத்தில் முழு நம்பிக்கை கொண்டவர். “மனித உடையில் தேவ தூதர்” என்று இவரை அழைத்தனர். இவருடைய சிறப்பு மறையுரையின் மூலம் பாவிகள் பலர் மனந்திரும்பினர். கால்வின் சபையைச் சார்ந்தவர்கள் பலர் மனந்திரும்பினர். ஒருமுறை ஒரே மேடையில் கால்வின் சபைப் போதகரும் ஜேம்சும் மறையுண்மைகளைப்பற்றி பேசத் திட்டமிடப்பட்டது. கால்வின் சபைப் பாதிரியார் குறித்த நாளில் வரவில்லை. இதைப் பற்றி கத்தோலிக்கர் ஏளனம் செய்தனர். இதனால் இருசாராருக்குமிடையே மனத்தாங்கல் விரிவடைந்தது. சினமடைந்த கால்வின் சபையினர் சிலர் ஆயுதம் தாங்கிய வீரர்களுடன் ஜேம்ஸ் இருந்த இடத்திற்குச் சென்று அவரைத் தாக்கினார்கள். ஜேம்சும் வில்லியமும் சிறைப்படுத்தப்பட்டனர். கத்தோலிக்க கொள்கைகள் பற்றிக் கடும் கருத்து மோதல் நடந்தது. பசிக்கு உணவும் பருக நீரும் கொடுக்காமல் துன்புறுத்தினர். வுpரைவில் இவர்கள் கியூகனாட் என்ற படைத்லைவனிடம் கையளிக்கப்பட்டனர். கொலைத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. பொது இடம் ஒன்றிற்கு இழுத்துச் செல்லப்பட்டனர். ஜேம்ஸை துப்பாக்கியால் சுட்டு பின்னர் அடித்துக் கொண்டனர். இவரை காப்பாற்ற முயன்று இவரை கட்டித் தழுவினார் துணைச் சகோதரர் வில்லியம். ஆவரை 18 முறை கத்தியால் குத்திக் கொன்றனர்.