சுமார் 475 ஆண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதற்காகக் கொல்லப்பட்ட , மன்னாரில் வாழ்ந்த கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களாகிய நம் முன்னோர்,தங்கள் எழுச்சிமிகு மரணத்தால் இயேசுவின் சாட்சிகளாய் சான்று பகர்ந்த நிலையை நினைந்து அவர்களை மறைசாட்சியர் என்னும் நிலைக்கு உயர்த்துமாறு வேண்டுதல்களையும், முயற்சிகளையும் முன்னெடுத்துவரும் இவ் வேளையில், சுமார் 475 ஆண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதற்காகக் கொல்லப்பட்ட , மன்னாரில் வாழ்ந்த கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களாகிய நம் முன்னோhர்,தங்கள் எழுச்சிமிகு மரணத்தால் இயேசுவின் சாட்சிகளாய் சான்று பகர்ந்த நிலையை நினைந்து அவர்களை மறைசாட்சியர் என்னும் நிலைக்கு உயர்த்துமாறு வேண்டுதல்களையும், முயற்சிகளையும் முன்னெடுத்துவரும் இவ் வேளையில், சுமார் 475 ஆண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதற்காகக் கொல்லப்பட்ட , மன்னாரில் வாழ்ந்த கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களாகிய நம் முன்னோர்,தங்கள் எழுச்சிமிகு மரணத்தால் இயேசுவின் சாட்சிகளாய் சான்று பகர்ந்த நிலையை நினைந்து அவர்களை மறைசாட்சியர் என்னும் நிலைக்கு உயர்த்துமாறு வேண்டுதல்களையும், முயற்சிகளையும் முன்னெடுத்துவரும் இவ் வேளையில், அசாதாரண வாழ்க்கையினால் கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்தவர்களை மறைசாட்சிகள், இறையடியார், அருளாளர் போன்ற நிலைகளுக்கு உயர்த்துவதற்கான சான்றுகளைத் திரட்டி அதற்காகப் பரிந்துரை செய்யும் வத்திக்கானில் உள்ள குழவில் பணியாற்றும் அருட்தந்தை றோலண்ட் அ.ம.தி அடிகளார் மன்னாருக்கு வருகைதந்து மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தலைமையில் நடைபெற்ற கூட்டுத்திருப்பலியில் கலந்து கொண்டார்.
இன்று (14.01.2020) செவ்வாய்க்கிழமை காலை 07.00 மணிக்கு தோட்டவெளி மறைசாட்சியரின் அன்னை திருத்தலத்தில் இச் சிறப்புத் திருப்பலி இடம் பெற்றது.பல அருட்பணியாளர்களும், துறவிகளும், இறைமக்களும் இத் திருப்பலியில் கலந்து செபித்தனர். இத் திருப்பலியில் செபமாலைத் தாசர் சபையின் இலங்கைக்கான மேலாளர் அருட்பணி ஜெயசீன் அடிகாளாரும் இணைந்து கொண்டார். முக்கியமாக செபமாலைச் தாசர் சபையின் நிறுவுனரான அருட்பணி தோமஸ் அ.ம.தி. அடிகளாரைப் புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்காக முன்வைக்கப்பட்டு வரும் பரிந்துரையின் அனுகூலங்களை ஆய்வு செய்வதற்காக அருட்பணி றோலண்ட் அடிகளார் இங்கு இலங்கைக்கு வந்திருப்பது குறிப்பிடத் தக்கது.