மன்னார் மறைமாவட்டத்தின் கற்கிடந்தகுளம் புனித யோசேப்பு ஆலயப் பங்கைச் சேர்ந்த அருட்சகோதரர் பாக்கியநாதன் வினோதன் ஜோண் இலங்கை கிளறீசியன் சபைக்கான அருட்பணியாளராக மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் அருட்பொழிவு செய்யப்பட்டார்.மன்னார் மறைமாவட்டத்தின் கற்கிடந்தகுளம் புனித யோசேப்பு ஆலயப் பங்கைச் சேர்ந்த அருட்சகோதரர் பாக்கியநாதன் வினோதன் ஜோண் இலங்கை கிளறீசியன் சபைக்கான அருட்பணியாளராக மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் அருட்பொழிவு செய்யப்பட்டார்.
07.01.2020 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு அருட்பொழிவு திருச்சடங்குத் திருப்பலியின்போது அருட்சகோதரர் பாக்கியநாதன் வினோதன் ஜோண் அருட்பணியாளராக அருட்பொழிவு செய்யப்பட்டார். இவ்வேளையில் கிளறீசியன் சபையின் இலங்கைக்கான முதல்வர் அருட்பணி ஜெயசீலன் அடிகளாரும் ஏனைய கிளறீசியன் சபை அருட்பணியாளர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
இதுவரை காலமும் ஜேர்மன் நாட்டில் உள்ள கிளறீசியன் துறவற இல்லத்தின் நிர்வாகத்தோடு இணைக்கப்பட்டு செயற்பட்ட வந்த இலங்கையில் பணியாற்றும் கிளறீசியன் துறவற சபை கடந்த சில மாதங்;களுக்கு முன் தன்னாட்சி நிர்வாக அலகாச் செயற்படுவதற்கான அங்கீகாரத்தைத்தைப் பெற்றுக் கொண்டது. அதன்பின் முதலாவதாக அருட்பொழிவு செய்யப்படும் அருட்பணியாளர் இவராவார். ஏறத்தாழ 36 அருட்பணியாளர்களோடு இலங்கையில் இயங்கிவரும் கிளறீசியன் துறவற சபையின் 37வது அருட்பணியாளராக கிளறீசியன் துறவற சபை அருட்பணியாளர் பாக்கியநாதன் வினோதன் ஜோண் அவர்கள் இணைந்து கொள்கின்றார். அத்தோடு மன்னார் மறைமாவட்டத்திலிருந்து கிளறீசியன் துறவறசபை பெற்றுக்கொள்ளும் பத்தாவது அருட்பணியாளாராகவும் இவர் பதிவாகின்றார்.
இவ் அருட்பொழிவுத் திருப்பலியில் அருட்பணியாளர்கள் துறவிகள் இறைமக்கள் எனப் பலர் கலந்து செபித்தனர்.