இயேசுவைப்போல் வாக்குறுதிகளை நிறைவேற்றித் தூய்மையில் வாழுங்கள்.
தியோக்கோன்களுக்கான அருட்பொழிவு நிகழ்வில் மன்னார் ஆயர்.
மன்னார் மறைமாவட்டத்தின் பேராலயமாகத் திகழும் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் 05.12.2019 வியாழக்கிழமை மன்னார் மறைமாவட்டத்திற்கென ஐந்து அருட்சகோதரர்களும் திருவுளப் பணியாளர் சபைக்கென இரண்டு அருட்சகோதரர்களும், கப்புச்சியன் துறவற சபைக்கென ஒரு அருட்சகோதரரும் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி.பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் தியாக்கோன்களாக அருட்பொழிவு செய்யப்பட்டனர்.
இயேசுவைப்போல் வாக்குறுதிகளை நிறைவேற்றித் தூய்மையில் வாழுங்கள்.
தியோக்கோன்களுக்கான அருட்பொழிவு நிகழ்வில் மன்னார் ஆயர்.
மன்னார் மறைமாவட்டத்தின் பேராலயமாகத் திகழும் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் 05.12.2019 வியாழக்கிழமை மன்னார் மறைமாவட்டத்திற்கென ஐந்து அருட்சகோதரர்களும் திருவுளப் பணியாளர் சபைக்கென இரண்டு அருட்சகோதரர்களும், கப்புச்சியன் துறவற சபைக்கென ஒரு அருட்சகோதரரும் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி.பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் தியாக்கோன்களாக அருட்பொழிவு செய்யப்பட்டனர்.
கட்டக்காடு பங்கு காத்தான்குளம் புனித காணிக்கை அன்னை ஆலயத்தைச் சேர்ந்த திரு. அருளப்பு தமியோஸ், திருமதி. செபமாலை ஞானப்பு தம்பதியினரின் மகன் அருட்சகோதரர் ஜொலிமன்.
வஞ்சியன்குளம் பங்கு மாதிரிக்கிராமம் புனித அன்னை வேளாங்கன்னி ஆலயத்தைச் சேர்ந்த திரு. ஜோசப் எமில் இன்னாசி மொத்தம், திருமதி. சிந்தாத்துரை மேரி சஜிலா தம்பதியினரின் மகன் அருட்சகோதரர் ஜோர்ஜ் கரன்.
வங்காலைப் பங்கு புனித ஆனாள் ஆலயத்தைச் சேர்ந்த திரு. பெனடிக்ற் செபஸ்ரியன் குரூஸ், சுவக்கீன் பிலோமினா குலாஸ் தம்பதியினரின் மகன் அருட்சகோதரர் அருண்தாஸ் குரூஸ்.
அடம்பன் பங்கு நெடுங்கண்டல் புனித அந்தோனியார் ஆலயத்தைச் ;சேர்ந்த திரு. சந்தியோகு பிலிப் நேரிஸ், செபஸ்ரியாம் பி;ள்ளை இமல்டா தம்பதியினரின் மகன் அருட்சகோதரர் பிரசாந்தன்.
கட்டக்காடு பங்கு காத்தான்குளம் புனித காணிக்கை அன்னை ஆலயத்தைச் சேர்ந்த திரு. கிறகோரி குணசேகரன், திருமதி சந்தான் சவிரி மரியபிலிப்பா தம்பதியினரின் மகன் அருட்சகோதரர் கிருஷாந்.
பண்டிவிரிச்சான் பங்கு புனித மரிய கொறற்ரி ஆலயத்தைச் சேர்ந்த திரு. ஆசீர்வாதம் மனுவேல்பிள்ளை, திருமதி அந்தோனிப்பிள்ளை லூர்துபுஸ்பம் தம்பதியினரின் மகன் அருட்சகோதரர் உதயன்.( கப்புச்சியன் சபை)
நானாட்டான் பங்கு புனித அடைக்கலமாதா ஆலயத்தைச் சேர்ந்த திரு. செபஸ்ரியாம்பிள்ளை சந்தாம்பிள்ளை, திருமதி. தொம்மாம்பிள்ளை பற்றிமா நவநாயகி தம்பதியினரின் மகன் அருட்சகோதரர் யூட் ரவீந்திரன். ( திருவுளப் பணியாளர் சபை)
முள்ளிக்குளம் பங்கு புனித பரலோக அன்னை ஆலயத்தைச் சேர்ந்த திரு. என்றி அலோசியஸ் குரூஸ், திருமதி ஸ்ரிபன் மரியறோசா கூஞ்ஞ தம்பதியினரின் மகன் அருட்சகோதரர் அன்ரனி மரியதாஸ் குரூஸ். ஆகியோரே தியாக்கோன்களாகத் அருட்பொழிவு செய்யப்பட்ட அருட்சகோதரர்களாவர். ( திருவுளப் பணியாளர் சபை)
இத் திருநிகழ்வின்போது அருளுரை வழங்கிய மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி.பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் “இறைவன் உங்களை அழைக்கும் நிலையைக் கருத்திற்கொண்டு நீங்கள் யாரிடம் அனுப்பப்படுகின்றீர்களோ அவர்களுக்கு தூய்மையான உள்ளத்தோடும பற்றுறுதியோடும் பணியாற்றுங்கள். இயேசுவைப்போல் இறைவனுடைய கட்டளைகளை நிறைவேற்றி, வாக்குறுதிகளைப் பிரமாணிக்கமாய்க் கடைப்பிடித்து தூய்மையில் வாழுங்கள்” என்று புதிய தியாக்கோன்களுக்கு அறிவுரை கூறியதோடு நமது மறைமாவட்டத்திற்கு பணயாளர்கள் இன்னும் அதிகமாகத் தேவைப்படுகின்றார்கள் என்றும் இதற்காக அனைவரும் செபிக்கவேண்டமென்றும், பணியாளர்களுக்கு இறைமக்கள் செபத்தால் வலுவூட்ட வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தார். ஆத்தோடு இத் தியான்கோன்களின் பெற்றோர் சகோதர சகோதரிகள், இவர்களை உருவாக்கியவர்கள் அனைவருக்கும் நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் இறைமக்கள், துறவியர், குருக்கள் எனப் பலர் கலந்து செபித்து, புதிய தியாக்கோன்களை வாழ்த்தினர்.