39ம் ஆண்டு நிறைவு விழா

நீண்டதொரு விசுவாசப் பாரம்பரியத்தை தன்னகத்தே கொண்டுள்ள மன்னார் மறைமாவட்டம், தன்னாட்சிப் பணிக்கான ஒரு மறைமாவட்டமாக உருவாக்கப்பட்டதன் 39ம் ஆண்டு நிறைவு விழா நேற்று 2020.01.25 சனிக்கிழமை தோட்டவெளி புனித மறைசாட்சியர் அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. மேலும் அறிய 39ம் ஆண்டு நிறைவு விழா

செபஸ்தியாரின் திருவுருவப் பவனி

மன்னார் புனித செபஸ்தியார் பேராலய  பாதுகாவலராம் புனித செபஸ்தியாரின் திருவுருவப் பவனி மன்னார் நகரத்தின் பல பகுதிகளுடாக வலம் வந்தபோது. மேலும் அறிய செபஸ்தியாரின் திருவுருவப் பவனி

மறைசாட்சிகள் நமது நம்பிக்கையின் ஆணி வேர்களாக இருக்கின்றார்கள்” -மன்னார் மறைமாவட்ட ஆயர்

மறைசாட்சிகள் நமது நம்பிக்கையின் ஆணி வேர்களாக இருக்கின்றார்கள்”

மறைசாட்சியான புனித செபஸ்தியாரின் திருவிழா இன்று 20.01.2020 திங்கட்கிழமை காலை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில்; ஆன்மிகச் செழுமையோடு பங்குத் தந்தை அருட்பணி அ.ஞானப்பிரகாசம் அடிகளாரின் வழிகாட்டதலிலும் ஒழுங்கமைப்பிலும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மேலும் அறிய மறைசாட்சிகள் நமது நம்பிக்கையின் ஆணி வேர்களாக இருக்கின்றார்கள்” -மன்னார் மறைமாவட்ட ஆயர்

மாலைப்புகழ் ஆராதனையை நடாத்தினர்.

மன்னார் புனித செபஸ்தியார் பேராலய இறைமக்கள் தங்கள் பாதுகாவலராம் புனித செபஸ்தியாரின் திருவிழாவுக்கான ஆயத்த வழிபாடுகளின் இறுதி நாளாகிய நேற்று ( 19.01.2020) ஞாயிற்றுக் கிழமை கத்தோலிக்க திரு அவையின் திருவழிபாட்டு திருமரபைப் பின்பற்றி மாலைப்புகழ் ஆராதனையை நடாத்தினர். மேலும் அறிய மாலைப்புகழ் ஆராதனையை நடாத்தினர்.

அருட்தந்தை றோலண்ட் அ.ம.தி அடிகளார் மன்னாருக்கு

சுமார் 475 ஆண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதற்காகக் கொல்லப்பட்ட , மன்னாரில் வாழ்ந்த கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களாகிய நம் முன்னோர்,தங்கள் எழுச்சிமிகு மரணத்தால் இயேசுவின் சாட்சிகளாய் சான்று பகர்ந்த நிலையை நினைந்து அவர்களை மறைசாட்சியர் என்னும் நிலைக்கு உயர்த்துமாறு வேண்டுதல்களையும், முயற்சிகளையும் முன்னெடுத்துவரும் இவ் வேளையில், மேலும் அறிய அருட்தந்தை றோலண்ட் அ.ம.தி அடிகளார் மன்னாருக்கு

புனிதரின் கொடியை உயர்த்தும் திருநிகழ்வோடு

புனித செபஸ்தியாரைப் பாதுகாவலராகக் கொண்டுள்ள மன்னார் பேராலய மக்கள் தங்கள் பாதுகாவலரின் திருவிழாவைக் கொண்டாடும் ஆன்மிக நிகழ்வின் முதற்கட்டமாக நேற்று (11.01.2020) சனிக்கிழமை புனிதரின் கொடியை உயர்த்தும் திருநிகழ்வோடு ஆயத்த வழிபாடுகளுள் நுழைந்தனர். மேலும் அறிய புனிதரின் கொடியை உயர்த்தும் திருநிகழ்வோடு

மன்னார் புனித சவோரியார் ஆண்கள் கல்லூரி தேசிய பாடசாலை தனது 150ம் ஆண்டு யூபிலி விழாவை

தனது கல்விப் பணிப்பாதைகளிலே 150 வருடங்களைப் பதிவு செய்துள்ள மன்னார் மாவட்டத்தின் முதல் கல்லூரியும், பல கல்விமான்களை உருவாக்கியதுமான மன்னார் புனித சவோரியார் ஆண்கள் கல்லூரி தேசிய பாடசாலை தனது 150ம் ஆண்டு யூபிலி விழாவை இவ்வாண்டு கொண்டாடுகின்றது. இவ் யூபிலி விழாவை வரலாற்றுச் சிறப்போடும் பதிவுகளோடும் கொண்டாடும் முகமாக கல்லூரிச் சமூகம், பழைய மாணவர் குழாம் ஆகியோரின் பங்களிப்போடும், ஒத்துழைப்போடும் கடந்த வருடம் தொடக்கம் பல நிகழ்ச்சித் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுக் கொண்டு வருகின்றன. மேலும் அறிய மன்னார் புனித சவோரியார் ஆண்கள் கல்லூரி தேசிய பாடசாலை தனது 150ம் ஆண்டு யூபிலி விழாவை

அருட்சகோதரர் வினோதன் ஜோண் கிளறீசியன் சபைக்கான அருட்பணியாளராக

மன்னார் மறைமாவட்டத்தின் கற்கிடந்தகுளம் புனித யோசேப்பு ஆலயப் பங்கைச் சேர்ந்த அருட்சகோதரர் பாக்கியநாதன் வினோதன் ஜோண் இலங்கை கிளறீசியன் சபைக்கான அருட்பணியாளராக மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் அருட்பொழிவு செய்யப்பட்டார். மேலும் அறிய அருட்சகோதரர் வினோதன் ஜோண் கிளறீசியன் சபைக்கான அருட்பணியாளராக