புனித சகாய அன்னையைப் பாதுகாவலியாகக் கொண்ட அழகிய

சிறப்புக் கரிசனையோடு கூடிய அருட்பணிக்காக ஒப்படைக்கப்பட்டுள்ள மன்னார் மறைமாவட்டத்தின் வவுனியா மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள தரணிக்குளம் பங்கைப் பொறுப்பேற்று பணியாற்றி வரும் கப்புச்சியன் துறவற சபை அருட்பணியாளர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள தரணிக்குளம் பங்கின் அருட்பணி எல்லைக்குள் அமந்துள்ள கோதண்டர் நொச்சிக்குளம் என்னும் கிராமத்தில் வாழும் இறைமக்களுக்காக புனித சகாய அன்னையைப் பாதுகாவலியாகக் கொண்ட அழகிய ஆலயமொன்றினை அமைத்துள்ளனர். மேலும் அறிய புனித சகாய அன்னையைப் பாதுகாவலியாகக் கொண்ட அழகிய

காத்தான்குளம் புனித யோசேப்பு ஆலயத் திறப்பு விழா

 

காத்தான்குளம் புனித யோசேப்பு ஆலயத் திறப்பு விழா. Kaththankulam St.Joseph’s Church opening Ceremony on 27/07/2019 (Mannar Diocese) Blessed and Opened by His Lordship Most Rev.Dr.Emmanuel Fernando, Bishop of Mannar.

 

காத்தான்குளம் பங்கில் புனித யோசப்பு ஆலயத்தின் அர்ச்சிப்பு விழாவும், ஆலயத் திறப்பு விழாவும்

காத்தான்குளம் பங்கில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட  புனித யோசப்பு ஆலயத்தின் அர்ச்சிப்பு விழாவும், ஆலயத் திறப்பு விழாவும் 27.07.2019 மாலை நடைபெற்றது. இத் திரு நிகழ்வுக்கு வருகை தந்திருந்த மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகை அவர்களை ஆலய நுழைவாயிலில் வைத்து பங்கு மக்கள் வரவேற்றனர். பாடசாலை மாணவர்களின் மேலைநாட்டு இசைக் கருவிகளின் மகிழ்வொலியோடு ஆயரும் ஏனை விருந்தினர்களும் ஆலய முகமண்டபம் வரை அழைத்து வரப்பட்டனர். மேலும் அறிய காத்தான்குளம் பங்கில் புனித யோசப்பு ஆலயத்தின் அர்ச்சிப்பு விழாவும், ஆலயத் திறப்பு விழாவும்

வங்காலை புனித ஆனாள் ஆலயத் திருவிழா நேற்று

வங்காலை புனித ஆனாள் ஆலயத் திருவிழா நேற்று (26.07.2019) வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. நேற்றக்காலை இத் திருவிழாத் திருப்பலியைத் தலைமையேற்று ஒப்பக் கொடுக்க வந்திருந்த மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகை அவர்களை ஆலய நுழைவாயிலில் வைத்து பங்கு மக்கள் வரவேற்றனர். வங்காலை புனித ஆனாள் ம.ம.வி. மாணவர்களின் தமிழர் பண்பாட்டு இசைக் கருவிகளின் மகிழ்வொலியோடு ஆயயரும் ஏனை திருவழிபாட்டுப் பரதிநிதிகளும் அழைததுவரப்பட்டனர்.  மேலும் அறிய வங்காலை புனித ஆனாள் ஆலயத் திருவிழா நேற்று

வங்கலைப் பங்குமக்கள் சிறப்பு மாலைப் புகழ் ஆராதனை

வங்காலை புனித ஆனாள் ஆலயத் திருவிழாவின் ஆயத்த நாட்களின் இறுதி நாளான இன்று (25.07.2019) வியாழக்கிழமை, வங்கலைப் பங்குமக்கள் சிறப்பு மாலைப் புகழ் ஆராதனையை தங்கள் பங்கின் தொன்மையான திருவழிபாட்டு மரபினைப் பின்பற்றி நடாத்தினர். மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை  அடிகளாரின் தலைமையில் சிறப்பு மாலைப் புகழ் வழிபாடு நடைபெற்றது.  அதனைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்த வருகைதந்தந்திருந்த வின்சென்சியன் அருட்பணியாளர் சபையின் அருட்பணியாளர் வர்கிஸ் அவர்கள் இன்றைய நற்கருணை வழிபாட்டை நடாத்தி  மறையுரையுரையையும் வழங்கினார். மேலும் அறிய வங்கலைப் பங்குமக்கள் சிறப்பு மாலைப் புகழ் ஆராதனை

பங்கிற்கான புனித பங்குப் பணிமனையும், அருட்பணியாளர்களுக்கான வதிவிடமும்

பெரிய குஞ்சுக்குளம் புனித அங்காமத்து மாதா ஆலயப் பங்கிற்கான புனித பங்குப் பணிமனையும், அருட்பணியாளர்களுக்கான வதிவிடமும் நேற்று (17.07.2019) புதன்கிழமை காலை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. மேலும் அறிய பங்கிற்கான புனித பங்குப் பணிமனையும், அருட்பணியாளர்களுக்கான வதிவிடமும்

வரலாற்றுச் சிறப்பு மிக்க மடுமாதா ஆடித் திருவிழா

மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கையின் ஆன்மிக வரலாற்றுச் சிறப்பு மிக்க மடுமாதா ஆடித் திருவிழா 02.07.2019 செவ்வாய்க்கிழமை நலம் செறிந்த ஆன்மிகச் செழுமையோடு கொண்டாடப்பட்டது. மேலும் அறிய வரலாற்றுச் சிறப்பு மிக்க மடுமாதா ஆடித் திருவிழா