தமிழ்க் கத்தோலிக்க மக்களின் விசுவாச வாழ்வின் வளமைக்கு வலுவூட்டுகின்ற கத்தோலிக்க கலை வடிவங்கள் மன்னார் மறைமாவட்டத்தின் பல பங்குகளிலும் அதற்குரிய தனித் தன்மையோடு மேடையேற்றப்பட்டு வருகின்றன. தமிழ்க் கத்தோலிக்க மக்களின் விசுவாச வாழ்வின் வளமைக்கு வலுவூட்டுகின்ற கத்தோலிக்க கலை வடிவங்கள் மன்னார் மறைமாவட்டத்தின் பல பங்குகளிலும் அதற்குரிய தனித் தன்மையோடு மேடையேற்றப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் பெரியபண்டிவிரிச்சான் தூய மரியகொறற்றி கலைக்குழு 22.08.2018 செவ்வாய்க்கிழமை தூய மரிய கொறற்றி ஆலய முன்றலில் தோமையாரின் விசுவாச வீரத்துவ வாழ்வு வரலாற்றை வெளிக் கொணரும் சந்தியோகுமையார் வாசாப்பு என்னும் கலைவடிவத்தை பக்தி எழுச்சியோடு அரங்கேற்றினர்.
இத் திருநிகழ்வுக்கு மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை முதன்மை விருந்தினராகவும், மாந்தை பிரதேசசபை முதல்வர் மதிப்புக்குரிய செல்லத்தம்பு, மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், மடு பிரதேசச் செயலர் திரு.ஜெயகரன், மற்றும் அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், பெருந்தொகையான மக்கள் வருகைதந்திருந்தனர். பங்குத் தந்தை அருட்பணி ரெறன்ஸ் கலிஸ்ரஸ் குலாஸ் அடிகளார் கலைக்குழுவோடும், இணைந்து அனைத்தையும் முன்னின்று நடாத்தினார்.