மருத மடுத் திருத்தாயாரின் 2018ம் ஆண்டின் ஆவணிப் பெருவிழாவிற்கான அரச பணியகங்களின் பங்களிப்பை மீளாய்வு செய்யும் கூட்டமொன்று இன்று ( 09.08.2018) வியாழக் கிழமை பகல் 11.00 மணிக்கு மடுத்திருப்பதி பணியகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மன்னார் மாவட்ட செயலர் உயர்திரு மோகன்றாஸ் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் மன்னார் ஆயர் பேரருட் கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ, குருமுதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை, தற்போதைய மடுத் திருத்தலப் பரிபாலகர், அருட்பணி.ச.எமிலியானுஸ்பிள்ளை, மருதமடுத் திருப்பதிக்கான புதிய பரிபாலகர் அருட்பணி ச.ஜொய்சி பெப்பி சோசை மடுப் பிரதேச் செயலர் திரு.ஜெயகரன், மற்றும் அரச பணிநிலை முக்கிய தலைவர்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.