இலங்கையின் மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள ஆன்மிக வரலாற்றுச் சிறப்புமிக்க மருதமடுத் திருத்தாயாரின் ஆடி மாதத் திருவிழா இம்மமாதம் ( 23.06.2017 சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் நற்கருணை ஆசீர்வாதமும், தமிழ் – சிங்களம் ஆகிய மொழிகளில் நடைபெற்று வருவதோடு நாள் முழுவதும் பல்தரப்பட்ட ஆன்மிகச் செயற்பாடுகளும் நடைபெற்ற வருகின்றன.
திருவிழாவுக்கான அனைத்து ஒழுங்குகளும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு, மருதமடுத் திருத் தாயாரின் திருத்தலத்திற்கு வருகின்ற திருப்பயணிகளின் அடிப்படைத் தேவைகள், சேவைகள் சிறப்பாக வழங்கப்பட்டு வருகின்றன.
இத்திருவிழா வருகின்ற மாதம் 02ந் திகதி (02.07.2018) திங்கட்கிழமை நிறைவடையும். இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் பெருந்தொகையான மக்கள் இத் திருவிழாவுக்கு வருகை தந்து ஆயத்த வழிபாடுகளில் அர்த்தமுள்ள விதத்தில் பங்கேற்று வருகின்றனர்.