பொதுக்காலம் பதினோரம் ஞாயிறு

2018.06.17

முன்னுரை.

ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று: உன்னதரே! உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று. காலையில் உமது பேரன்பையும் இரவில் உமது வாக்குப் பிறழாமையையும் எடுத்துரைப்பது நன்று

அன்புமிக்க சகோதரரே சகோதரிகளே! பேரன்பு உடையவரும், தாம் வாக்களித்த அனைத்தையும் நமக்கெனச் செய்து முடிப்பவருமான  நம் இறைத் தந்தையின் திருப்பெயரால் நல்வாழ்த்துக்கள் கூறி பொதுக்காலம் பதினோராம் ஞாயிறு; திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம்..

ஆண்டவருடைய கட்டளைகளைகஇ கடைப்பிடித்து, நேர்மையாளராய் வாழுவோர் பெறும் பேரின்பத்தை இன்றைய இறைவாக்குச் செய்தி மகிழ்வின் செய்தியாக நமக்குத் தருகின்றது. அதாவது: நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்: லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர். ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர்: அவர்கள் முதிர் வயதிலும் கனிதருவர்: என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்: என்பதே அப்பேரின்பமாகும்.

எனவே, ஆண்டவருக்கு உகந்தவராயிருப்பதையே நம் முக்கிய நோக்கமாகக் கொண்டு,  நாம் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, அவருடைய நெறிமுறைகளைப் பின்பற்றி, அவருடைய வார்த்தையின்படி வாழ உறுதி கொண்டவர்களாய் இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்

தாழ்ந்த மரத்தை ஓங்கச் செய்துள்ளேன்

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம். 17: 22-24

அந்நாள்களில்

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உயர்ந்த கேதுரு மரத்தின் நுனிக்கிளை ஒன்றை எடு த்து நானே நடுவேன். இளங்கொழுந்து ஒன்றை அதன் நுனிக் கொப்புகளிலிருந்து கொய்து, ஓங்கி உயர்ந்ததொரு மலை மேல் நான் நடுவேன்.

இஸ்ரயேலின் மலையுச்சியில் நான் அதை நடுவேன். அது கிளைத்து, கனி தந்து, சிறந்த கேதுரு மரமாகத் திகழும். அனைத்து வகைப் பறவைகளும் அதனைத் தம் உறைவிடமாகக் கொள்ளும். அதன் கிளைகளின் நிழல்களில் அவை வந்து தங்கும்.

ஆண்டவராகிய நான் ஓங்கிய மரத்தைத் தாழ்த்தி, தாழ்ந்த மரத்தை ஓங்கச் செய்துள்ளேன் என் றும், பசுமையான மரத்தை உலரச் செய்து, உலர்ந்த மரத்தைத் தழைக்கச் செய்துள்ளேன் என்றும், அப்போது வயல்வெளி மரங்களெல்லாம் அறிந்து கொள்ளும். ஆண்டவராகிய நானே உரைத்துள் ளேன்: நான் செய்து காட்டுவேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல் திபா. 92: 1-2, 12-15

பல்லவி: உமது பெயரைப் பாடுவது உன்னதரே நன்று.

ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று: உன்னதரே! உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று.காலையில் உமது பேரன்பையும் இரவில் உமது வாக்குப் பிறழாமையையும் எடுத்துரைப்பது நன்று. பல்லவி

நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்: லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர். ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர்.பல்லவி

அவர்கள் முதிர் வயதிலும் கனிதருவர்: என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்: ‘ஆண்டவர் நேர்மையுள்ளவர்: அவரே என் பாறை: அவரிடம் அநீதி ஏதுமில்லை’ என்று அறிவிப்பர்.பல்லவி

இரண்டாம் வாசகம்.

எனவே நாம் இவ்வுடலில் குடியிருந்தாலும் அதிலிருந்து குடிபெயர்ந்தாலும் அவருக்கு உகந்தவரா யிருப்பதே நம் நோக்கம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம். 5: 6-10

சகோதரர் சகோதரிகளே,

ஆகவே நாங்கள் எப்போதும் துணிவுடன் இருக்கிறோம்.  இவ்வுடலில் குடியிருக்கும் வரையில் நாம் ஆண்டவரிடமிருந்து அகன்று இருக்கிறோம் என்பது நமக்குத் தெரியும். நாம் காண்பவற்றின் அடிப் படையில் அல்ல, நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாழ்கிறோம். நாம் துணிவுடன் இருக்கி றோம்.  இவ்வுடலை விட்டகன்று ஆண்டவரோடு குடியிருக்கவே விரும்புகிறோம்.

எனவே நாம் இவ்வுடலில் குடியிருந்தாலும் அதிலிருந்து குடிபெயர்ந்தாலும் அவருக்கு உகந்தவராயி ருப்பதே நம் நோக்கம். ஏனெனில் நாம் அனைவருமே கிறிஸ்துவின் நடுவர் இருக்கை முன்பாக நின்றாக வேண்டும்.  அப்போது உடலோடு வாழ்ந்தபோது நாம் செய்த நன்மை தீமைக்குக் கைம் மாறுபெற்றுக் கொள்ளுமாறு ஒவ்வொருவரின் செயல்களும் வெளிப்படும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி.

அல்லேலூயா, அல்லேலூயா  இறைவாக்கு வித்தாகும்: கிறிஸ்துவே விதைப்பவர்: அவரைக் கண்டடைகிறவன் என்றென்றும் நிலைத்திருப்பான்.  அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

எல்லா விதைகளையும்விடச் சிறியது, எல்லாச் செடிகளையும் விடப் பெரிதாகிறது.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 26-34

தொடர்ந்து இயேசு, ;இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலத்தில் ஒருவர் விதைக் கிறார்.  அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன.  அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்: ஏனெ னில் அறுவடைக் காலம் வந்துவிட்டது ; என்று கூறினார்.

மேலும் அவர், ;இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்? அது கடுகு விதைக்கு ஒப்பாகும்.  அது நிலத்தில் விதைக்கப் படும்பொழுது உலகிலு ள்ள எல்லா விதைகளையும்விடச் சிறியது. அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும் விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக் கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள்விடும் ; என்று கூறினார்.

அவர்களது கேட்டறியும் திறமைக்கு ஏற்ப, அவர் இத்தகைய பல உவமைகளால் இறைவார்த் தையை அவர்களுக்கு எடுத்துரைத்து வந்தார்.உவமைகள் இன்றி அவர் அவர்களோடு பேசவி ல்லை.  ஆனால் தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மன்றாட்டுக்கள்.

  1. நல்லாயனான தந்தையே இறைவா! நீர் எமக்குக் கொடுத்துள்ள திருத் தந்தை அவர்களின் தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில்: திருத்தந்தை அவர்களை மென்மேலும் உமது ஞானத்தால் நிரப்பி, எல்லா ஆபத்துக்களிலும் , நோயகளிலிருந்தும் அவரைக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  2. நீதியுள்ள தந்தையே இறைவா! எம் ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும்; உம்மீது நம்பிக்கை கொண்டு உம்முடைய நெறிமுறைகளைப் பின்பற்றி, உம்மீது விசுவாசம் கொண்டு, உம்முடைய வார்த்தையின்படி நீதிமான்களாக வாழும் நன் மனதை அவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  3. எம் பாறையாகிய தந்தையே இறைவா! உம்முடைய மக்களாகிய நாங்களும்: உம்முடைய நெறிமுறைகளைப் பின்பற்றி, உம்மீது விசுவாசம் கொண்டு, உம்முடைய வார்த்தையின்படி நீதிமான்களாக வாழும் நன் மனதை  எமக்கு அளித்தருள வேண்டுமென்று இறைவா உம் மை மன்றாடுகின்றோம்.

  4. அடையாளங்கள், அருஞ்செயல்கள் மூலம் அனைத்தையும் வெளிப்படுத்துகின்ற தந்தையே இறைவா! இந் நாட்களில் உலகில் ஏற்படும் நிகழ்வுகள் ஒவ்வோன்றின் மூலமாகவும் நீர் வெளிப்படுத்தும் செய்திகளைப் பரிந்து கொண்டு உமது விருப்பப் படி எமது வாழ்வை மாற்றி யமைத்துக் கொள்வதற்கு வேண்டிய மனப் பக்குவத்தை எமக்கு தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடு கின்றோம்.

    சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும்      OSUNDAY11th2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *