தூய மரிய வியான்னி தியான இல்லம்

மருதமடுத் திருத்தாயாரின் திருத்தலத்தில் அமைந்துள்ள தூய மரிய வியான்னி தியான இல்லம் நிறைவான ஆன்மிக பணியை வழங்கிவருவது மகிழ்ச்சியூட்டும் செய்தியாகும். மேலும் அறிய தூய மரிய வியான்னி தியான இல்லம்

பண்ணிசைப்போம் இறுவெட்டு வெளியீட்டு விழா

ங்காலை தூய ஆனாள் ஆலயப் பங்கைச் சேர்ந்த இளைப்பாறிய ஆசிரியர் திரு.பிரான்சிஸ் பீரிஸ் மற்றும் அவருடைய மகன் செல்வன் செரூபா பீரிஸ் ஆகியோர் இணைந்து உருவாக்கிய கத்தோலிக்கப் பாடல்கள் அடங்கிய பண்ணிசைப்போம் என்னும் இறுவெட்டு வெளியீட்டு விழா இன்று 22.04.2018 ஞாயிற்றுக் கிழமை மாலை வங்காலையில் நடைபெற்றது. மேலும் அறிய பண்ணிசைப்போம் இறுவெட்டு வெளியீட்டு விழா

குருக்களுக்கான வருடாந்தத் தியானம் நிறைவடைந்தது.

மருதமடுத் திருத்தாயாரின் திருத்தலத்தில் அமைந்துள்ள தூய மரிய வியான்னி தியான இல்லத்தில் நடைபெற்ற மன்னார் மறைமாவட்டக் குருக்களுக்கான வருடாந்தத் தியானம் வெள்ளிக்கிழமை 20.04.2018 மாலையில் நிறைவடைந்தது. மேலும் அறிய குருக்களுக்கான வருடாந்தத் தியானம் நிறைவடைந்தது.

ஏப்ரல்:22 – மரியா, சேசு சபையின் அன்னை

ஏப்ரல்:22
மரியா, சேசு சபையின் அன்னை

 

இனிகோ,ஸ்பெயின் நாட்டுக்கும் பிரான்சு நாட்டுக்கும் மத்தியில் நடந்த போரில் ஸ்பெயின் நாட்டு படைத்தளபதியாக பணிபுரிந்த வேளையில் குண்டு காலைத் துளைத்துவிட்டது. அதன்விளைவாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காட்சிகளை இப்போது நினைவு கூர்வோம். 2 நூல்கள் பொழுதுபோக்கிற்காக வாசிப்பதற்கு தரப்பட்டன. அந்நூல்களில் ஒன்று புனிதர்களின் வரலாறு. ஆதை வாசித்ததன் எதிரொலியாக எழுந்த எண்ண அலைகள்: இந்தப் புனிதர்கள் இத்தகைய புனித பாதையில் நடந்து சென்றது போல் னே; நானும் அதே பாதையில் நடந்து செல்லக் கூடாது? இக்கேள்விக் கணைகளின் இறுதியில் தன் பழைய பாவங்களுக்கு தபசு செய்யவும் புனித நாட்டை தரிசிக்கவும் உறுதி பூண்டார் இனிகோ. இந்த சூழ்நிலையில்தான் அநேகமாக ஆகஸ்டு திங்களில் ஒருநாள் 1521ல் மாலைப்பொழுதில் அவரது அறையில் இருக்கும் போது மரியன்னை குழந்தை சேசுவை கையில் தாங்கிக் கொண்டு இனிகோவுக்கு காட்சியளித்தார். இக்காட்சி இனிகோவுக்கு சொல்லண்ணா ஆறுதலைத் தந்நது. இந்த வேளையில் தான் இனிகோவின் மனமாற்றத்தின் தொடக்கத்தை காண முடிகிறது. தனது பாவ வாழ்க்கையின் மீது வெறுப்பும் புனிதர்களின் பாதையில் நடைபோட வேண்டும் என்ற ஆவலும் சுரந்தது.

1522 மார்ச் திங்களில் இனிகோவின் வலது காலின் காயம் போதுமான அளவு குணம் அடைந்ததாக உணர்ந்து புனித நாட்டுப் பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டார். தனது குடும்பத்தினர்களின் கண்களுக்கு மறைவாக பார்சலோனா சென்றடைந்தார். அருகிலிருந்த மரியன்னையிக் சிற்றாலயத்தை நோக்கி புறப்படுமுன் மான்செராற் என்ற இடத்தில் திருப்பயகள் அணியும் உடை ஒன்று விலைக்கு வாங்கிக் கொண்டார். இவ்வுடை சாக்குத் துணிபோல் முரடானது. நீளமான அங்கி போன்று காணப்பட்டது. இந்நிலையில் மார்ச் 21ல் அன்னையின் ஆலயத்தை அடைந்தார். அங்கு சென்ற உடன் ஒரு குருவானவரை அணுகி பொதுப் பாவ மன்னிப்ப அருட்சாதனம் பெற்று மனஅமைதி அடைந்தார். பின்னர் மரியன்னையின் மங்கள வார்த்தை திருவிழாவில் தனது உயர்ரக ஆடைகளை ஒரு ஏழைக்கு தானம் அளித்து விட்டு தான் வாங்கியிருந்த திருப்பயணியின் ஆடையை அணிந்து கொண்டார். அதே இரவில் அன்னையின் ஆலயத்திலிருந்த பீடத்தை நோக்கி விரைந்தார். அந்தக் காலத்தில் படைவீரர்கள் தங்களின் வீரத்தில் மேலும் முன்னேற்றமடைய மரியன்னையின் திருப்பீடத்தின் முன் இரவு நேரத்தை செலவழித்த முறையில் மண்டியிட்டும் எழுந்து நின்றும் மாறி மாறி இரவு முழுவதும் செலவிட்டு வைகறையில் தனது படைத்தளபதிக்குரிய அடையாளங்களான போர்வாளை அன்னையின் பாதங்களில் வைத்தார். இப்போது முதல் இனிகோ மரியன்னையின் மாவீரர் என்றே தன்னைப்பற்றி நினைத்துக் கொண்டார்.

அன்னையின் திருநாளன்று காலையில் பார்சலோனா நகரை நோக்கி விரைந்தார். போகும் வழியில் கார்டனேர் ஆற்றங்கரையில் இருந்த மன்ரேசாவில் சுமார் 10 மாதங்கள் தங்கிவிட்டார். இங்கே தான் இனிகோ முழுமையான நிரந்தரமான மனமாற்றம் அடைந்ததோடு ஆன்மீகப் பயிற்சிகள் என்ற நூலுக்கு வடிவமைப்புக் கொடுத்தார்.

சுமார் ஓராண்டு இங்கு தங்கிய பின் புத்தம் புது மனிதனாக பார்சலோனா வழியாக உரோமை நகரை அடைந்து புனிதநாட்டுப் பயணம் செல்ல திருத்தந்தை 4ம் ஏட்ரியனின் உத்தரவையும் பெற்றுக் கொண்டார். புனித நாட்டை அடைந்ததும் அங்கேயே காலமெல்லாம் தங்கிவிட முயன்றார். போர்மேகத்தின் காரணமாக சிலநாட்களுக்குள் புனித நாட்டை தரிசித்து விட்டு வெளியேறினார். இப்போது இனிகோவுக்கு வயது 33. குருத்துவத்தை பெரிதும் விரும்பினார். பார்சலோனாவில் தங்கி பல சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இங்கு பலரது பார்வை இனிகோவை சுட்டெரித்தது. திருப்பயணியின் உடையை நீக்கிக் கொள்ளவும் போதிப்பதை நிறுத்திக் கொள்ளவும் கட்டளையிட்டனர். இதனால் அல்கலாவினின்று சலமான்கா நோக்கி விரைந்தார். அங்கு டொமினிக்கன் துறவியர் இவரது போதிக்கும் பணி தவறானது என்று அவரை கட்டுப்படுத்த முயன்றனர். 22 நாள்கள் இதனிமித்தம் சிறையில் வாழ்ந்தார். பின்பு இவரது போதனை நேர்மையானது என்று சான்று பெற்றுக் கொண்டு பாரிஸ் நோக்கி விரைந்தார்.

மறு ஆண்டு இங்கு கல்லூரிப்படிப்பை தொடங்கும்போது பீற்றர்,ஃபேபர், பிரான்சிஸ் சவேரியார் தங்கி இருந்த அறையில் இனிகோ தங்கிப் படிக்க இடம் கிடைத்தது. படிப்புக்குப் பலருடைய பண உதவியை நாடிப் பெற்றுக் கொண்டார். இங்கு தங்கிக் கற்றுக் கொண்டிருந்த சமயம் ஃபேபர், பிரான்சிஸ் சவேரியாரை ஆன்மீகப் பயிற்சிகளின் மூலம் தன் வயப்படுத்தி முதல் வெற்றி கண்டார்.

அடுத்து இதேபாணியில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஜேம்ஸ் லெயினசயும், அல்போன்சஸ் சால்மரோன், நிக்கொலாஸ் பொபடில்லா, சைமன் ரொட்ரிகுவஸ் ஆகியோரையும் கவர்ந்திழுப்பதில் முழு வெற்றி கண்டார். ஆக இவர்கள் 6 பேரும் இனிகோவின் இணைபிரியா சீடர்களாகிவிட்ட சூழ்நிலையில் அனைவருமே குருத்துவ நிலை அடைந்து மக்களை இறைவன் பால் ஈர்க்கும் ஒரே குறிக்கோளை எடுத்துக் கொண்டணர். ஆகஸ்டு 1534ல் 7 பேரும் கற்பு, ஏழ்மை ஆகிய 2 வார்த்தை பாடுகளை எடுத்துக் கொள்ளவும் தீர்மானித்தனர். பின்னர் புனித நாட்டுப் பயணத்தை மேற்கொள்ளவும் அது இயலாமல் போனால் உரோமை நகர் சென்று திருத்தந்தையின் பொறுப்பில் தங்களை ஒப்படைக்கவும் உறுதி பூண்டனர். இந்த எழுவரில் ஏற்கனவே ஃபேபர் கருத்துவத்தைப் பெற்றிருந்தார். மறைசாட்சியான புனித டென்னிஸின் ஆலயத்தின் கீழ் பகுதியில் தந்தை ஃபேபர் திருப்பலி நிகழ்த்தினார். இந்த எழுவரும் தங்களின் புனிதம்,ஏழ்மை என்ற 2 வித வார்த்தைப்பாடுகளையும் கொடுத்தபின் திவ்ய நன்மை உட்கொண்டனர்.

இதுவரை ஒரு துறவற சபையாக எதிர் காலத்தில் திகழ வேண்டும் என்ற திட்டம் இல்லாவிட்டாலும் இவ்வாறு 7 பேரும் ஒருமனப்பட்டவர்களாக கூடி வந்து திருப்பலி வேளையில் இறைவனிடம் சமர்ப்பித்த வார்த்தைப்பாடுகளின் மூலமாக தோன்ற இருந்த சேசுசபைக்கு வித்திடப்பட்டது. இவர்கள் தங்களின் வார்த்தைப்பாட்டை சமர்ப்பிக்க குறித்த நாள் ஆகஸ்டு 15, 1534 அன்னை விண்ணேற்றம் அடைந்த மாபெரும் விழா என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அன்னையின் தரிசனம் பெற்ற இனிகோ மனமாற்றம் அடைவதற்கும் புதிய சேசுசபை தோற்றுவிக்க அடித்தளம் அமைப்பதற்கும் நல்லாலோசனை கொடுத்து நடத்தி வந்த மரியன்னையை சேசு சபையின் அன்னை என்று அழைப்பதில் எத்துணை அர்த்தம் மிளிர்கின்றது!