ஆலய அருட்பணிப் பேரவை உறுப்பினர்களிடம் வழங்கினார்.

கிறிஸ்தவ அமைச்சினால் மன்னார் மறைமாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட காத்தான் குளம் பங்கின், பாலையடிப் புதுக்குளம் தூய அந்தோனியார் ஆலயம், மன்னார் தூய பேராலப் பங்கின் தூய மரியன்னை ஆலயம், எழுத்தூர்ப் பங்கு தூய மரியன்னை ஆலயம் ஆகியவற்றின் கட்டிடப்பணிகளுக்காக வழங்கப்பட்ட நிதியினை மேலும் அறிய ஆலய அருட்பணிப் பேரவை உறுப்பினர்களிடம் வழங்கினார்.

விசுவாசப் பாரம்பரியங்களை துல்லியமாக எடுத்துக்காட்டும் கத்தோலிக்க அருட்சின்னங்கள்,

மறைசாட்சிகளின் தியாகத்தால் வலுவூட்டப்பட்ட மன்னார் மறைமாவட்டத்தின் தொன்மை வாய்ந்த கத்தோலிக்க விசுவாசப் பாரம்பரியங்களை துல்லியமாக எடுத்துக்காட்டும் கத்தோலிக்க அருட்சின்னங்கள், ஆலயங்கள், கட்டிடங்கள், நினைவிடங்கள், கல்லறைகள் என்பன மன்னார் மறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரந்து கிடப்பதை பலர் அறியாதிருக்கலாம். மேலும் அறிய விசுவாசப் பாரம்பரியங்களை துல்லியமாக எடுத்துக்காட்டும் கத்தோலிக்க அருட்சின்னங்கள்,

பாஸ்கா காலம்-இரண்டாம் வாரம் புதன்

முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 17-26

அந்நாள்களில் தலைமைக் குருவும் அவரைச் சேர்ந்த சதுசேயக் கட்சியினர் அனைவரும் பொறாமையால் நிறைந்து திருத்தூதரைக் கைது செய்து பொதுச் சிறையில் காவலில் வைத்தனர். ஆனால் இரவில் ஆண்டவரின் தூதர் சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து அவர்களை வெளியே அழைத்துச் சென்று, “நீங்கள் போய்க் கோவிலில் நின்று வாழ்வு பற்றிய வார்த்தைகளை யெல்லாம் மக்களுக்கு எடுத்துக் கூறுங்கள்” என்றார். இதைக் கேட்ட அவர்கள் பொழுது விடிந்ததும் கோவிலுக்குச் சென்று கற்பித்தார்கள். தலைமைக் குருவும் அவரைச் சேர்ந்தவர்களும் அனைத்து இஸ்ரயேல் மக்களின் ஆட்சிப் பேரவையாகிய தலைமைச் சங்கத்தைக் கூட்டித் திருத்தூதர்களைச் சிறையிலிருந்து கொண்டுவருமாறு ஆள் அனுப்பினார்கள். அந்த ஏவலர்கள் அங்கு வந்தபோது சிறையில் அவர்களைக் காணவில்லை. எனவே அவர்கள் திரும்பி வந்து, “நாங்கள் சிறைச்சாலை உறுதியாய்ப் பூட்டப்பட்டிருப்பதையும், காவலர் வாயிலருகில் நின்றுகொண்டு இருப்பதையும் கண்டோம். ஆனால் கதவைத் திறந்தபோது உள்ளே எவரையும் காணவில்லை” என்று அறிவித்தார்கள். இவ்வார்த்தைகளைக் கேட்ட கோவில் காவல் தலைவரும், தலைமைக் குருக்களும் அவர்களுக்கு என்னதான் நேர்ந்திருக்கும் என்று மனங்குழம்பி நின்றனர். அப்பொழுது ஒருவர் வந்து, “நீங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்த மனிதர்கள், அதோ! கோவிலில் நின்று மக்களுக்குக் கற்பிக்கின்றனர்” என்று அவர்களிடம் அறிவித்தார். உடனே காவல் தலைவர் ஏவலர்களுடன் கோவிலுக்குச் சென்று அவர்களை அழைத்துச் சென்றார். மக்கள் கல்லெறிவார்கள் என்று அவர் அஞ்சியதால் வன்முறை எதுவும் கையாளவில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திருப்பாடல் 34: 1-2. 3-4. 5-6. 7-8


பல்லவி: ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்.

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்;
அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.
நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்;
எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி

என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்;
அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.
துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்;
அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்;
எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். பல்லவி

அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்;
அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.
இந்த ஏழை கூவியழைத்தான்;
ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்;
அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். பல்லவி

ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர்.
ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்;
அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 16-21

அக்காலத்தில் இயேசு நிக்கதேமிடம் கூறியது: தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை. ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது. தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

 

ஏப்ரல்:11 புனித ஸ்தனிஸ்லாஸ்

ஏப்ரல்:11

புனித ஸ்தனிஸ்லாஸ்
கிராக்கோ நகர் ஆயர், மறைசாட்சி – (கி.பி.1030-1079)

இவர் பிரபு குலத்தில் தோன்றியவர். பெற்றோருக்குப் பல ஆண்டுகளாக குழந்தைப்பேறு இல்லாமலிருந்து ஜெபதப முயற்சிகளின் பயனாகப் பிறந்தவர். பெற்றோர் இவரை ஆழ்ந்த ஞானத்திலும் தெய்வ பயத்திலும் வளர்த்தனர். இவர் குருத்துவத்தை மேற்கொண்டார். ஞானத்துடன் மறையுரை ஆற்றுவதன் மூலம் மக்களைக் கவர்ந்தார். ஆயராக நியமனம் பெற விரும்பவில்லை. எனினும் திருத்தந்தை 2ம் அலைக்சாண்டரின் கட்டாயத்தின் பேரில் இப்பதவியை ஏற்றுக் கொண்டார்.
அப்போது போலந்தை ஆட்சி செய்த மன்னன் 2ம் பொலோஸ்லாஸ் பண ஆசை பிடித்தவனாகவும் தீய செயல்களுக்கு அடிமைப்பட்டவனாகவும் வாழ்ந்தான். ஆயரின் அறிவுரை அவனது மனதை மாற்றியது. ஆனால் மீண்டும் பழைய பாவ நிலைக்கே திரும்பினான். ஒரு பிரபுவின் மனைவி மீது குறி வைத்தான். அவள் இணங்க மறுத்த போது அடியாட்கள் அவளை அரச அரண்மணைக்கு தூக்கிக் கொண்டு வந்தனர்.
ஆயர் பொலஸ்லாவோஸைக் கண்டித்தார். பயனில்லை. திருச்சபைக்கு புறம்பாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த காம அரக்கன் ஆயர் தம் சிற்றாலயத்தில் திருப்பலி நிகழ்த்தும்போது கொலைசெய்ய அடியாட்களை அனுப்பினான். அவர்கள் ஆயரை நெருங்கிய போது அவரைச் சுற்றி பேரொளி நிறைந்திருந்ததைக் கண்டு பின்வாங்கினர். பின்னர் அரசனே வந்து திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்த ஆயரின் தலையைக் கொய்து கொன்றான். நாளடைவில் அரசன் போலந்து நாட்டினின்று விரட்டப்பட்டான். கங்கேரி நாடு சென்று ஒசியாக் என்ற இடத்தில் ஆசீர்வாதப்பர் சபை மடத்தில் தஞ்சம் புகுந்து தன் பாவங்களுக்கு பரிகாரம் செய்து இறந்தான்.

ஆயர் ஸ்தனிஸ்லாஸ் , போலந்து நாட்டின் பாதுகாவலர்.