வழமையாக நடைபெறும் தவக்காலம் 6ம் வெள்ளி மன்னார் தூய செபஸ்தியார் பேரால பங்கின் பெரிய சிலுவைப்பாதை கடந்த 23.03.2018 வெள்ளிக்கிழமை மாலை தூய செபஸ்தியார் பேராலயத்திலிருந்து ஆரம்பமாகி மன்னார் தூய மரியன்னை ஆலயத்தில் திருப்பலியைத் தொடர்ந்து இடம்பெற்ற ஆசந்தியோடு முடிவுற்றது. பெருந்தெகையான மக்கள் இத் தூய நிகழ்வில் அர்த்தமுள்ள முறையில் பங்கேற்றனர்.



























































