Category Archives: இன்றைய தூயவர்

ஏப்ரல்:24 புனித சிக்மரிங்கன் பிதேலிஸ்

ஏப்ரல்:24
புனித சிக்மரிங்கன் பிதேலிஸ்

குரு, மறைசாட்சி – (கி.பி.1577-1622)

இவர் ஜெர்மனி நாட்டில் சிக்மரிங்கன் என்ற நகரில் கல்விக் கலைகளைக் கற்று மிகத்திறறமையுடன் வழக்கறிஞர் தொழில் செய்து வந்தார். இப்பணியாற்றும் போது ஏழைகளின் கொடுமைகளை நீக்க பணம் எதுவும் எதிர்பாராமல் நீதிமன்றங்களில் வழக்காடுவார். இதனால் இவருக்கு ஏழைகளின் வழக்கறிஞர் என்ற பெயர் சூட்டப்பட்டது.

தேவபக்தியினால் தூண்டப்பட்டு அடிக்கடி ஒப்பரவு அருட்சாதனம் செய்து நாள்தோறும் திருப்பலியிலும் திருவிருந்திலும் பங்கேற்ப்பார். ஏழைகளிடம் இரக்கம் காட்டி பல உதவிகள் புரிந்து வந்தார். பின்னர் கப்புச்சின் சபையில் சேர்ந்தார். அடிக்கடி கண்ணீருடன் ஜெபித்து கொடுமையாய்த்தன்னை அடித்துக் கொள்வவார். மடத்தின் தலைவராய் இருக்கும்போது கூட தாழ்ந்த வேலையைத் தேடி மகிழ்வுடன் செய்வார்.

ஆன்ம வேட்கை கொண்டு ஸ்விட்சர்லாந்து நாட்டுக்குச் செல்ல இசைவு பெற்றார். அங்கு ஸ்விங்கிளியன் பதிதரை தமது பக்தியுள்ள ஜெபத்தாலும் உருக்மான போதனையாலும் கடுந்தவத்தினாலும் மனந்திருப்பினார். இதனால் பதிதர் அவரை வதைத்துக் கொல்ல முயன்றனர். அவ்வண்ணமே இவர் ஒருநாள் பயணம் செய்யும் போது பதிதன் ஒருவன் இவரைச் சுட்டான். புதுமையாய் தப்பித்துக் கொண்டார். வேறொருமுறை இவர் இரவில் நடந்து போகையில் 20 பதிதர்களும் அவர்களுடைய பாதிரியாரும் படைக்கலன்களுடன் இவரைக் கொடுமையாய் அடித்துக் கொன்றனர். ஆயினும் பதிதப் பாதிரியார் பிதேலிஸ் இறந்த 5 மாதங்களுக்குப் பிறகு மனந்திரும்பினார். பிதேலிஸ் கப்புச்சின் துறவற சபையில் முதல் வேதசாட்சி.

ஏப்ரல்:22 – மரியா, சேசு சபையின் அன்னை

ஏப்ரல்:22
மரியா, சேசு சபையின் அன்னை

 

இனிகோ,ஸ்பெயின் நாட்டுக்கும் பிரான்சு நாட்டுக்கும் மத்தியில் நடந்த போரில் ஸ்பெயின் நாட்டு படைத்தளபதியாக பணிபுரிந்த வேளையில் குண்டு காலைத் துளைத்துவிட்டது. அதன்விளைவாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காட்சிகளை இப்போது நினைவு கூர்வோம். 2 நூல்கள் பொழுதுபோக்கிற்காக வாசிப்பதற்கு தரப்பட்டன. அந்நூல்களில் ஒன்று புனிதர்களின் வரலாறு. ஆதை வாசித்ததன் எதிரொலியாக எழுந்த எண்ண அலைகள்: இந்தப் புனிதர்கள் இத்தகைய புனித பாதையில் நடந்து சென்றது போல் னே; நானும் அதே பாதையில் நடந்து செல்லக் கூடாது? இக்கேள்விக் கணைகளின் இறுதியில் தன் பழைய பாவங்களுக்கு தபசு செய்யவும் புனித நாட்டை தரிசிக்கவும் உறுதி பூண்டார் இனிகோ. இந்த சூழ்நிலையில்தான் அநேகமாக ஆகஸ்டு திங்களில் ஒருநாள் 1521ல் மாலைப்பொழுதில் அவரது அறையில் இருக்கும் போது மரியன்னை குழந்தை சேசுவை கையில் தாங்கிக் கொண்டு இனிகோவுக்கு காட்சியளித்தார். இக்காட்சி இனிகோவுக்கு சொல்லண்ணா ஆறுதலைத் தந்நது. இந்த வேளையில் தான் இனிகோவின் மனமாற்றத்தின் தொடக்கத்தை காண முடிகிறது. தனது பாவ வாழ்க்கையின் மீது வெறுப்பும் புனிதர்களின் பாதையில் நடைபோட வேண்டும் என்ற ஆவலும் சுரந்தது.

1522 மார்ச் திங்களில் இனிகோவின் வலது காலின் காயம் போதுமான அளவு குணம் அடைந்ததாக உணர்ந்து புனித நாட்டுப் பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டார். தனது குடும்பத்தினர்களின் கண்களுக்கு மறைவாக பார்சலோனா சென்றடைந்தார். அருகிலிருந்த மரியன்னையிக் சிற்றாலயத்தை நோக்கி புறப்படுமுன் மான்செராற் என்ற இடத்தில் திருப்பயகள் அணியும் உடை ஒன்று விலைக்கு வாங்கிக் கொண்டார். இவ்வுடை சாக்குத் துணிபோல் முரடானது. நீளமான அங்கி போன்று காணப்பட்டது. இந்நிலையில் மார்ச் 21ல் அன்னையின் ஆலயத்தை அடைந்தார். அங்கு சென்ற உடன் ஒரு குருவானவரை அணுகி பொதுப் பாவ மன்னிப்ப அருட்சாதனம் பெற்று மனஅமைதி அடைந்தார். பின்னர் மரியன்னையின் மங்கள வார்த்தை திருவிழாவில் தனது உயர்ரக ஆடைகளை ஒரு ஏழைக்கு தானம் அளித்து விட்டு தான் வாங்கியிருந்த திருப்பயணியின் ஆடையை அணிந்து கொண்டார். அதே இரவில் அன்னையின் ஆலயத்திலிருந்த பீடத்தை நோக்கி விரைந்தார். அந்தக் காலத்தில் படைவீரர்கள் தங்களின் வீரத்தில் மேலும் முன்னேற்றமடைய மரியன்னையின் திருப்பீடத்தின் முன் இரவு நேரத்தை செலவழித்த முறையில் மண்டியிட்டும் எழுந்து நின்றும் மாறி மாறி இரவு முழுவதும் செலவிட்டு வைகறையில் தனது படைத்தளபதிக்குரிய அடையாளங்களான போர்வாளை அன்னையின் பாதங்களில் வைத்தார். இப்போது முதல் இனிகோ மரியன்னையின் மாவீரர் என்றே தன்னைப்பற்றி நினைத்துக் கொண்டார்.

அன்னையின் திருநாளன்று காலையில் பார்சலோனா நகரை நோக்கி விரைந்தார். போகும் வழியில் கார்டனேர் ஆற்றங்கரையில் இருந்த மன்ரேசாவில் சுமார் 10 மாதங்கள் தங்கிவிட்டார். இங்கே தான் இனிகோ முழுமையான நிரந்தரமான மனமாற்றம் அடைந்ததோடு ஆன்மீகப் பயிற்சிகள் என்ற நூலுக்கு வடிவமைப்புக் கொடுத்தார்.

சுமார் ஓராண்டு இங்கு தங்கிய பின் புத்தம் புது மனிதனாக பார்சலோனா வழியாக உரோமை நகரை அடைந்து புனிதநாட்டுப் பயணம் செல்ல திருத்தந்தை 4ம் ஏட்ரியனின் உத்தரவையும் பெற்றுக் கொண்டார். புனித நாட்டை அடைந்ததும் அங்கேயே காலமெல்லாம் தங்கிவிட முயன்றார். போர்மேகத்தின் காரணமாக சிலநாட்களுக்குள் புனித நாட்டை தரிசித்து விட்டு வெளியேறினார். இப்போது இனிகோவுக்கு வயது 33. குருத்துவத்தை பெரிதும் விரும்பினார். பார்சலோனாவில் தங்கி பல சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இங்கு பலரது பார்வை இனிகோவை சுட்டெரித்தது. திருப்பயணியின் உடையை நீக்கிக் கொள்ளவும் போதிப்பதை நிறுத்திக் கொள்ளவும் கட்டளையிட்டனர். இதனால் அல்கலாவினின்று சலமான்கா நோக்கி விரைந்தார். அங்கு டொமினிக்கன் துறவியர் இவரது போதிக்கும் பணி தவறானது என்று அவரை கட்டுப்படுத்த முயன்றனர். 22 நாள்கள் இதனிமித்தம் சிறையில் வாழ்ந்தார். பின்பு இவரது போதனை நேர்மையானது என்று சான்று பெற்றுக் கொண்டு பாரிஸ் நோக்கி விரைந்தார்.

மறு ஆண்டு இங்கு கல்லூரிப்படிப்பை தொடங்கும்போது பீற்றர்,ஃபேபர், பிரான்சிஸ் சவேரியார் தங்கி இருந்த அறையில் இனிகோ தங்கிப் படிக்க இடம் கிடைத்தது. படிப்புக்குப் பலருடைய பண உதவியை நாடிப் பெற்றுக் கொண்டார். இங்கு தங்கிக் கற்றுக் கொண்டிருந்த சமயம் ஃபேபர், பிரான்சிஸ் சவேரியாரை ஆன்மீகப் பயிற்சிகளின் மூலம் தன் வயப்படுத்தி முதல் வெற்றி கண்டார்.

அடுத்து இதேபாணியில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஜேம்ஸ் லெயினசயும், அல்போன்சஸ் சால்மரோன், நிக்கொலாஸ் பொபடில்லா, சைமன் ரொட்ரிகுவஸ் ஆகியோரையும் கவர்ந்திழுப்பதில் முழு வெற்றி கண்டார். ஆக இவர்கள் 6 பேரும் இனிகோவின் இணைபிரியா சீடர்களாகிவிட்ட சூழ்நிலையில் அனைவருமே குருத்துவ நிலை அடைந்து மக்களை இறைவன் பால் ஈர்க்கும் ஒரே குறிக்கோளை எடுத்துக் கொண்டணர். ஆகஸ்டு 1534ல் 7 பேரும் கற்பு, ஏழ்மை ஆகிய 2 வார்த்தை பாடுகளை எடுத்துக் கொள்ளவும் தீர்மானித்தனர். பின்னர் புனித நாட்டுப் பயணத்தை மேற்கொள்ளவும் அது இயலாமல் போனால் உரோமை நகர் சென்று திருத்தந்தையின் பொறுப்பில் தங்களை ஒப்படைக்கவும் உறுதி பூண்டனர். இந்த எழுவரில் ஏற்கனவே ஃபேபர் கருத்துவத்தைப் பெற்றிருந்தார். மறைசாட்சியான புனித டென்னிஸின் ஆலயத்தின் கீழ் பகுதியில் தந்தை ஃபேபர் திருப்பலி நிகழ்த்தினார். இந்த எழுவரும் தங்களின் புனிதம்,ஏழ்மை என்ற 2 வித வார்த்தைப்பாடுகளையும் கொடுத்தபின் திவ்ய நன்மை உட்கொண்டனர்.

இதுவரை ஒரு துறவற சபையாக எதிர் காலத்தில் திகழ வேண்டும் என்ற திட்டம் இல்லாவிட்டாலும் இவ்வாறு 7 பேரும் ஒருமனப்பட்டவர்களாக கூடி வந்து திருப்பலி வேளையில் இறைவனிடம் சமர்ப்பித்த வார்த்தைப்பாடுகளின் மூலமாக தோன்ற இருந்த சேசுசபைக்கு வித்திடப்பட்டது. இவர்கள் தங்களின் வார்த்தைப்பாட்டை சமர்ப்பிக்க குறித்த நாள் ஆகஸ்டு 15, 1534 அன்னை விண்ணேற்றம் அடைந்த மாபெரும் விழா என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அன்னையின் தரிசனம் பெற்ற இனிகோ மனமாற்றம் அடைவதற்கும் புதிய சேசுசபை தோற்றுவிக்க அடித்தளம் அமைப்பதற்கும் நல்லாலோசனை கொடுத்து நடத்தி வந்த மரியன்னையை சேசு சபையின் அன்னை என்று அழைப்பதில் எத்துணை அர்த்தம் மிளிர்கின்றது!

ஏப்ரல்:21 – புனித ஆன்செல்ம்

ஏப்ரல்:21
புனித ஆன்செல்ம்
ஆயர்,மறைவல்லுனர் – (கி.பி.1033-1109)

லாம்பர்டி நாட்டில் பியட்மென்ட் என்ற ஊரில் ஆன்செல்ம் பிறந்தார். அறிவு நுட்பமுடையவரானதால் கல்விக் கலைகளைக் பயின்று 27ம் வயதில் நார்மண்டியில் பெக் என்ற நகரில் இருந்த புனித ஆசீர்வாதப்பர் சபையில் சேர்ந்தார். சேரும்போதே லான்பிராங் என்ற புகழ் பெற்ற ஆசிரியரின் இடத்தில் கற்றுத்தரவும் மடத்தின் தலைவராகவும் கட்டாயமாக இருத்தப்பட்டார். அதுமட்டுமல்லாமல் காண்டர்பரி நகரின் பேராயராகப் பணிபுரியவும் வற்புறுத்தப்பட்டார்.

இவர் கடவுளின் சிறப்பான அருள்வரங்கள் பெற்றவர். எல்லாருடைய நன்மதிப்பையும் பெற்றிருந்தார். இவரது தாழ்ச்சி மற்றும் இயல்பாக காணப்பட்ட இனிய குணங்களின் மூலம் கல் மனத்தினரையும் நல்வழிப்படுத்த முடிந்தது. திருச்சபை அரசாங்கம் இவற்றிற்குரிய தனித்தன்மையை முகத்தாட்சனியத்திற்கு இடமின்றி சுட்டிக்காட்டி திருச்சபையின் சுதந்திரத்தை நிலைநாட்டினார். இவரின் நூல்களைப்பற்றி கூறும்போது அவை முழந்தாற்படியிட்டு ஆழ்ந்த வணக்கத்துடன் எழுதப்பட்ட இறையியல் என்பார். திருமறையைப் பொறுத்தவரை அவர் அரச ஆணைக்கு கட்டுப்படவில்லை என்ற காரணத்தால் இருமுறை நாடுகடத்தப்பட்டார்.

ஏப்ரல்:11 புனித ஸ்தனிஸ்லாஸ்

ஏப்ரல்:11

புனித ஸ்தனிஸ்லாஸ்
கிராக்கோ நகர் ஆயர், மறைசாட்சி – (கி.பி.1030-1079)

இவர் பிரபு குலத்தில் தோன்றியவர். பெற்றோருக்குப் பல ஆண்டுகளாக குழந்தைப்பேறு இல்லாமலிருந்து ஜெபதப முயற்சிகளின் பயனாகப் பிறந்தவர். பெற்றோர் இவரை ஆழ்ந்த ஞானத்திலும் தெய்வ பயத்திலும் வளர்த்தனர். இவர் குருத்துவத்தை மேற்கொண்டார். ஞானத்துடன் மறையுரை ஆற்றுவதன் மூலம் மக்களைக் கவர்ந்தார். ஆயராக நியமனம் பெற விரும்பவில்லை. எனினும் திருத்தந்தை 2ம் அலைக்சாண்டரின் கட்டாயத்தின் பேரில் இப்பதவியை ஏற்றுக் கொண்டார்.
அப்போது போலந்தை ஆட்சி செய்த மன்னன் 2ம் பொலோஸ்லாஸ் பண ஆசை பிடித்தவனாகவும் தீய செயல்களுக்கு அடிமைப்பட்டவனாகவும் வாழ்ந்தான். ஆயரின் அறிவுரை அவனது மனதை மாற்றியது. ஆனால் மீண்டும் பழைய பாவ நிலைக்கே திரும்பினான். ஒரு பிரபுவின் மனைவி மீது குறி வைத்தான். அவள் இணங்க மறுத்த போது அடியாட்கள் அவளை அரச அரண்மணைக்கு தூக்கிக் கொண்டு வந்தனர்.
ஆயர் பொலஸ்லாவோஸைக் கண்டித்தார். பயனில்லை. திருச்சபைக்கு புறம்பாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த காம அரக்கன் ஆயர் தம் சிற்றாலயத்தில் திருப்பலி நிகழ்த்தும்போது கொலைசெய்ய அடியாட்களை அனுப்பினான். அவர்கள் ஆயரை நெருங்கிய போது அவரைச் சுற்றி பேரொளி நிறைந்திருந்ததைக் கண்டு பின்வாங்கினர். பின்னர் அரசனே வந்து திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்த ஆயரின் தலையைக் கொய்து கொன்றான். நாளடைவில் அரசன் போலந்து நாட்டினின்று விரட்டப்பட்டான். கங்கேரி நாடு சென்று ஒசியாக் என்ற இடத்தில் ஆசீர்வாதப்பர் சபை மடத்தில் தஞ்சம் புகுந்து தன் பாவங்களுக்கு பரிகாரம் செய்து இறந்தான்.

ஆயர் ஸ்தனிஸ்லாஸ் , போலந்து நாட்டின் பாதுகாவலர்.

ஏப்ரல் 07- புனித ஜான் பாப்டிஸ்ட் டெலாசால்

ஏப்ரல் 07
புனித ஜான் பாப்டிஸ்ட் டெலாசால்
(கி.பி. 1651-1719)

 

“காலத்திற்கேற்ற கல்விமுறைத் தந்தை” என்று அழைக்கப்படும் இவர் பிரான்சில் ரீம்ஸ் நகரில் நகர மன்ற உறுப்பினர் மகனாய் தோன்றியவர். 16ம் வயதிலேயே ரீம்ஸ் நகரின் பேராலயத்தில் பெரிய பொறுப்பு வகித்தவர். 27 வயதில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். தாழ்ச்சியிலும் பக்தி முயற்சிகளிலும் சிறந்து விளங்கினார். அதே வேளையில் ஏழைகளின் மீது கொண்ட பரிவு நாளுக்கு நாள் இவரிடம் மிகந்து வந்தது. இதுவே இவரது வாழ்நாள் எல்லாம். ஏழை மாணவர்களின் கல்வி முன்னேற்றதுக்காக தம்மை முற்றிலும் கையளிக்க உதவியாக இருந்தது.

இவர்தம் நாட்களில் ஜான்சனிசம் என்ற நச்சுக்கலந்த கொள்கை பிரான்ஸ் நாட்டை அதிர வைத்தது. பற்றாக்குறைக்கு அண்டை நாடுகளுடன் ஓயாத போர். இவை எல்லாம் நாட்டில் கடுமையான பஞ்சத்தையும் பல்வேறு இன்னல்களையும் கொண்டு வந்துவிட்டன. மேலும் கல்வியறிவு அறவே இல்லாது போயிற்று. இத்தகைய சூழலில் தான் ரீம்ஸ் நகரில் ஏழைமாணவர்களுக்கு இவர் இரு பள்ளிக்கூடங்கள் நிறுவினார். நாள்தோறும் கற்றுக் கொடுக்கும் யுக்திகள் பற்றி ஆசிரியர்களிடம் கலந்துரையாடுவார். அவர்களை எல்லா வழிகளிலும் ஊக்குவித்தார். தங்க இல்லம் அளித்து தம்மோடு உணவருந்த வைத்தார்.
இந்தப் புதிய முறையை கையாண்டதன் பயனாகத்தான் நாளடைவில் “கிறிஸ்துவப் பள்ளிகளின் சகோதரர்கள்” என்ற நிறுவனத்தை தோற்றுவித்தார். 1680ல் தொடங்கப்பட்ட நிறுவனம் முற்றிலும் தேவ பேணுதலின் அடிப்படையில் அமைய வேண்டுமென்றே திட்டம் தீட்டினார். பல நெருக்கடிகளையும் இன்னல் இடையூறுகளையும் சந்தித்த பின்னர் நாளடைவில் அது உலகளாவிய நிறுவனமாக காட்சியளிக்கத் தொடங்கியது.

காலத்தின் அறிகுறிகளிற்கு ஏற்ப தொடக்க மேல்நிலைக் கல்வி புகட்டுவதில் பல புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி கண்டதால் “கல்வித் தந்தை” என்று உலகம் போற்றுகிறது. இந்த நிறுவனத்தில் அனைவருமே சகோதரர்களாகவே இருக்க வேண்டும். குருக்களுக்கு இடமில்லை. சகோதரர்கள் அனைவரும் இளைஞர்களின் ஞானக் கண்களை திறந்து விடுவதற்கென முற்றிலும் தங்களையே இறைவனுக்கு அர்ப்பணித்தவர்கள் என்ற குறிக்கோளோடு இன்றுவரை இந்தத் துறவற சபை இயங்கி வருகிறது. தாய்மொழியில் மட்டுமே கற்றுக் கொடுத்தல் வேண்டும் என்பதை வலியுறுத்தினார். ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகளையும் தோற்றுவித்தார். இத்தகைய முயற்சிகளுக்கு ஒரே குறிக்கோள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. “கல்விப் பணியின் மூலம் நேர்மையான கிறிஸ்தவர்களை உருவாக்குதல்.”

இந்தப் பணிகள் எல்லாம் முடிவுக்கு வந்த வேளையில் முழுப் பொறுப்பையும் சபை சகோதரர் ஒருவரிடம் ஒப்படைத்தார். 1719ம் ஆண்டு அவரைத் தாக்கிய ஆஸ்துமா உச்சநிலையை அடைந்தது. அத்துடன் மூட்டு வலியும் சேர்ந்து கொண்டது. இருப்பினும் இதுவரை கடைப்பிடித்து வந்த கடுமையான தவ முயற்சிகளை அவர் விட்டுவிடவில்லை. இந்த வேளையில் ஒரு சிறு விபத்தில் இவர் சிக்கிக்கொண்டது இவரது வேதனைகளை பல மடங்காக்கியது. இந்தத் சூழலில் ஏப்ரல் 7ல் பெரிய வெள்ளிக்கிழமையன்று இறைவன் இவரது தூய ஆன்மாவை ஏற்றுக் கொண்டார். கி.பி.1950ல் புனிதர் பட்டம் கொடுத்த திருத்தந்தை இவரை “பள்ளி ஆசிரியர்களின் பாதுகாவலர்” என்று அறிவித்தார்.

ஏப்ரல் 05 – புனித வின்சென்ட் ஃபெரர்

ஏப்ரல் 05
புனித வின்சென்ட் ஃபெரர்
குரு – (கி.பி.1350-1419)

இவர் தம் தந்தை ஆங்கிலேயர். தாய் ஸ்பெயின் நாட்டினர். வலன்சியாவில் டொமினிக்கன் சபையில் சேர்ந்தார். திருச்சபையில் இதுவரை தோன்றிய சிறந்த மறைபோதகர்களில் இவரும் ஒருவராக கருதப்படுகிறார். 21 ஆண்டுகளாக ஸ்பெயின், சுவிஸ்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் தம் பாவ நிலையை முற்றிலும் விட்டகலும் முறையில் போதித்தார். 10,000 பேர் மனந்திரும்பிய நிலையில் இவரை பின் தொடர்ந்தனர் என்று கூறப்படுகிறது.
அப்போது தலைவிரித்தாடிய தீமைகளான சூதாட்டம், இறைப்பழிப்பு, குடிவெறி இவற்றுக்கு முற்றுப்புள்ளி இடும் அளவுக்கு அவருடைய போதனைகள் அமைந்திருந்தன. அவர் குணப்படுத்தும் வரமும் பெற்றிருந்தார். ஏராளமான யூதர்களையும், மூர் வகுப்பினரையும் கிறிஸ்தவ விசுவாசத்திற்கு கொண்டு வந்தார். இவர் காலத்தில் திருச்சபையில் ஒரு பிளவு ஏற்படும் ஆபத்து இருந்தது. பீற்றர் டே லூனா என்பவர் திருத்தந்தை 13ம் ஆசீர்வாதப்பர் என்ற பெயரை தெரிந்து கொண்டு அவிஞான் என்ற நகரில் தான்தோன்றித்தனமாக திருச்சபையின் தலைவர் நான் என்று கூறி வந்தார். வின்சென்ட் இதில் மிகத் திறமையாக பீற்றர் டே லூனாவை விட்டு விலகினார். ஓராண்டுக்குப் பின் கொண்ஸ்டான்ஸ் பொதுச்சங்கம் 5ம் மார்ட்டின் என்பவரை திருத்தந்தையாக தேர்ந்தெடுத்தது.

ஏப்ரல்:04 புனித இசிதோர்

ஏப்ரல்:04
புனித இசிதோர்
செவில் நகரின் ஆயர், மறைவல்லுநர்- (கி.பி.560-636)

ஸ்பெயின் நாட்டில் கார்த்தஜீனா என்பது இவர் பிறந்த நகரம். இவர் உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவர். இவரின் சகோதரர்கள் லியாண்டர், ஃபுல்ஜென்சியஸ் என்பவருக்கும், சகோதரி ஃபுளோரன்டீனாவுக்கும் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது எனில்,இவரின் குடும்பத்தில் இருந்த ஆன்மீகத்தின் ஆழம் என்னவென்று புரிந்து கொள்ளலாம்.

புனித இசிதோர் இளமையிலேயே ஒரு பெரிய அறிவாளி என்ற மதிப்புப் பெற்றிருந்தார். இவர் எழுதிய பற்பல நூல்கள் பல நூற்றாண்டுகளாக மேலை நாடுகளில் பள்ளிக்கூடங்களில் பஙன்படுத்தப்பட்டன. லத்தீன் ரீதி மறைவல்லுனர்களில் இவர் கடைசியாகத் தோற்றினார்.
தொடக்க நாட்களில் இவருக்கு படிப்பு சலிப்பாக தோன்றியிருக்கும் போலும். அதோடு இவரது ஆசிரியர் கடுமையான உழைப்பை எதிர்பார்த்ததால் இவர் பள்ளியை விட்டு ஓடிப் போய்விட்டார். பின்னர் தனிமையாக பாறையின் மீது உட்காந்திருக்கும் போது பாறையொன்றில் மழைத்துளிகள் விழுந்து விழுந்து துளைகள் ஏற்ப்பட்டிருப்பதை உற்று நோக்கினார் என்றும் அதன் பின்னரே இவர் விடாமுயற்சியென்றால் என்ன எனப் புரிந்து கொண்டு மீண்டும் அவரது ஆசிரியரை அணுகிப் பணிந்து கற்றுப் புலமை பெற்றார் என்றும் சொல்லப்படுகிறது. கி.பி.599ம் ஆண்டு செவில் நகரின் ஆயராகப் இவர் தம் அண்ணன் இறந்த பிறகு நியமனம் பெற்றார். 37ஆண்டுகள் ஆயராகப் பணியாற்றினார். இவரது நாட்களில் 200 ஆண்டுகள் ஆரியப்பதிதத்தில் ஊறிக் கிடந்து ஸ்பெயினை ஆட்டிப்படைத்த விசிகாத் என்ற மக்களை முற்றிலும் மனந்திருப்பினார்.

மார்ச் :25 – ஆண்டவரின் பிறப்பு அறிவிப்பு

மார்ச் :25
ஆண்டவரின் பிறப்பு அறிவிப்பு

இந்தத் திருநாள் தொடக்கத்திலிருந்தே “மனிதவதாரத்தின் பெருவிழா ” என்றும் “மீட்பின் தொடக்கம்” எனவும், “கிறிஸ்துவின் உற்பவம்” எனவும் பொருத்தமாக அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. இந்தத் திருநாள் 430ம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறதென்பதிலிருந்து இதன் பெருமை புலனாகிறது. இந்தத் திருநாள் கொண்டாடத்தில் அதிதூதர் கபிரியேல் கன்னிமரியிடம் “கிறிஸ்து, மனிதகுல மீட்பர், உம் வயிற்றில் கருவுற்றுத் தோன்றுவார்.” என்ற மாபெரும் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்ததைக் கொண்டாடுகிறது. “இதோ ஆண்டவரின் அடிமை நான். உமது வார்த்தையின்படி ஆகட்டும்” என்று சொன்ன உடனே மரியா கருவுற்றார். மரியா கருவுற்ற குழந்தை 9 மாதங்கழித்து டிசம்பர் 25ல் உலகின் மீட்பராகப் பிறந்தது. இந்தப் புனித சம்பவம் மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே கிப்போலிட்டஸ் என்ற வரலாற்று ஆசிரியரால் குறிப்பிடப்பட்டுள்ளது.
மரியாவின் “ஆகட்டும்” என்ற சொல் எத்துணை ஆற்றல் வாய்ந்தது! “உண்டாகட்டும்” என்றார் எல்லாம் வல்லவர். “ஒளி உண்டாயிற்று. விண்ணும் மண்ணும் தோன்றின” என்கின்றார் புனித தாமஸ் வில்லனோவா.
“இறைவனின் தாயாகத் திகழ்வதைவிட மிக்க மேலான நிலையை இறைவன் ஏற்படுத்தி இருக்க இயலாது.”
புனித பெர்னாடின் சியென்னா, “படைப்புக்கள் அனைத்தும் அமைதி காத்து நடுக்கமுறட்டும். இறைவன் தூய கன்னியிடம் வருகின்றார். கன்னியின் மனிதத் தன்மையில் பங்கேற்கின்றார். இந்த மகிமையை ஆழமாக சிந்தனை செய்வோம்.”
புனித பீட்டர் டேமியன், “இதோ ஆண்டவரின் அடிமை” என்று நான் உதிர்த்த சொற்களை என்னிடம் யாரெல்லாம் நினைவூட்டுகிறார்களோ அவர்களுக்கு எப்போதும் நான் தாயாக இருந்து அவர்களின் தேவையை நிறைவு செய்ய விரைந்து வருகிறேன்” – மரியன்னை
“ஓர் அடிமையின் சாயலை இறைவன் எடுத்துக் கொண்டார். ஆனால் பாவ மாசு அவரைத் தீண்டவில்லை. நமது மனிதத் தன்மைக்கு பெருமை தேடித் தந்தார். அதனால் தமது இறைமகத்துவத்தைக் குறைத்துக் கொள்ளவில்லை. அடிமையின் உருவெடுத்து தம்மை வெறுமையாக்கினார். இவ்வாறு மனித குடும்பத்தில் ஓர் உறுப்பினராகக் காட்சியளித்தார்.”
“இந்நிலை அவரது பரிவிரக்கத்தை காட்டுகிறதேயன்றி, அவரது வலிமையை இழந்துவிட்டார் என்று குறிப்பதில்லை. இவ்வாறு மனிதனை உண்டாக்கிய அவரே, அடிமையின் உருவத்தில் மனிதனாக உண்டாக்கப்பட்டார். தெய்வீக மகத்துவத்திலிருந்து இறங்கி நம்மிடையே வருகின்றார். உண்மையிலேயே கடவுளானவர், உண்மையாகவே மனுஉரு எடுத்தார். இந்த ஒருங்கிணைப்பில் ஏமாற்றம் எதுவும் இல்லை.” இன்றைய திருத்தம் பெற்ற ‘பிரிவியரி’ வாசகத்தில் புனித பெரிய சிங்கராயர் எழுதிய மடல்களிலிருந்து இப்பகுதி எடுக்கப்பட்டுள்ளது.

மார்ச்:23 – புனித மாங்கிரோவேகா துரிபியுஸ்

மார்ச்:23
புனித மாங்கிரோவேகா துரிபியுஸ்
ஆயர் – (கி.பி.1538-1606)

இவர் ஸ்பெயின் நாட்டில் மயோர்கா நகரில் பிறந்தவர். அறிவுக் கூர்மை உடையவர். சலமான்கா பல்கழைக்கழகத்தில் சட்டக்கலை வல்லுனர் பட்டம் பெற்றிருந்தார். தென் அமெரிக்காவில் பெரு மாநிலத்தின் பாதுகாவலர் புனித சூசையப்பர் என்றாலும், தென் அமெரிக்கா முழுவதிலும் இப்புனிதர் நாட்டின் பாதுகாவலராகவே போற்றப்படுகிறார். புனித லீமாரோஸ் இவரின் தோழமையைப் பெற்றிருந்ததாகவும், இவரிடம் உறுதிப்பூசுதல் பெற்றதாகவும் குறிப்பு ஒன்று கூறுகிறது.

மார்ச்: 19 – புனித வளனார்

மார்ச்: 19
புனித வளனார்

“சான்றோர்” என்று புனித வளனாருக்கு திருமறைநூல் மிக உயர்ந்த பட்டம் சூட்டுகிறது. இதன் பொருள்: இறைவன் தனக்கு உகந்தவரைத் தனது புனிதத்தில் சிறந்த முறையில் பங்கேற்கச் செய்கின்றார். மேலும் வளனாரை நீதிமான் என்று அழைப்பதன் மூலம் இறைதிருஉள்ளத்திற்கு எப்போதும் பணிந்து நடப்பவர் என்றும் பொருள் கொள்ள வேண்டும். இயேசுவின் வளர்ப்புத் தந்தை, கன்னி மரியின் கணவர், திருச்சபை முழுவதுக்கும் பாதுகாவலர். கற்ப்புக்கு பாதுகாவல். நல்ல படிப்புக்கும் பாதுகாவலர். நல்ல இறப்புக்கும் பாதுகாவல். புனித பெர்னாந்து, புனித அவிலா தெரேசாள். சியென்னா நகர் புனித பெர்னாடின் ஆகியோர் புனித வளனாரின் பக்தியைப் பரப்புவதில் தலைசிறந்து விளங்கினார்.
எந்த ஒரு வரமும் எப்பொழுதாகிலும் நான் புனித வளனாரிடம் மன்றாடிக்கேட்டு கிடைக்காது போனதென்று என்னால் சொல்ல இயலாது என்றார் புனித அவிலா தெரேசாள். இவர் கார்மேல் சபை ஒழுங்குகளை திருத்தி அமைத்த பின் சீர்திருத்தப்பட்டு தொடங்கிய மடங்களில் முதல் மடத்திற்கு புனித சூசையப்பரை பாதுகாவலராகத் தேர்ந்து கொண்டார். கனடா நாடு இந்தப் புனிதரின் பாதுகாவலில் வைக்கப்பட்டுள்ளது. புனித 23ம் அருளப்பர் 2ம் வத்.சங்கத்தை புனித வளனாரின் பாதுகாப்பில் வைத்திருப்பதாக உலகிற்கு அறிக்கை விடுத்தார். மேலும் 23ம் அருளப்பர் அடிக்கடி கூறுவார்: “கீழ்படியக் கற்றுக் கொள்வது, அமைதி காக்க கற்றுக் கொள்வது, பேசத் தேவைப்படும் போது, குறைவாகவும் அடக்கமாகவும் பேசுவது. இவற்றைத் தான் புனித வளனார் நமக்கு கற்றுத் தருகிறார்”.
தேன் சொட்டும் மறையுரை ஆற்றும் ஆற்றல் வாய்ந்த புனித பெர்னாந்து புகழ்ந்துரைப்பதைப் பாருங்கள். அவர் வளனாரை பழைய ஏற்பாட்டில் காணும் சூசையுடன் ஒப்பிடுகின்றார். “தனது வஞ்சக சகோதரர்களால் விற்கப்பட்டு எகிப்து நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட சூசை, சீடன் ஒருவனால் காட்டிக் கொடுக்கப்பட்டு புறவினத்தாரிடம் கையளிக்கப்பட்ட கிறிஸ்துவுக்கு உவமை. புதிய ஏற்பாட்டில் நாம் காணும் வளனார் ஏரோதின் சீற்றத்திற்கு தப்பித்து ஓடி கிறிஸ்துவுக்கு எகிப்து நாட்டில் அடைக்கலம் தந்தார். முன்னைய சூசை அரசனுக்கு உகந்தவராய் நடந்தார். அந்த மன்னனுடைய மனைவியின் பசப்பு மொழிகளால் மதி இழக்கவில்லை. வளனாரோ தம் துணைவியை இறைவனின் தாய் என உரிய மதிப்படன் நடத்தினார். அவரது கன்னிமையை உணர்ந்தார். அவரது கன்னிமைக்கு பழுதேற்படாமல் பாதுகாத்தார். முன்னைய சூசை கனவுகளை தெளிவுபடுத்தும் திறமை பெற்றிருந்தார். வளனாரின் கனவில் தேவ தூதர் தோன்றி குழந்தையை காத்துக் கொள்ளும் முறையை அறிவித்தார். முன்னைய சூசை உணவுப் பொருட்களை தனக்கென திரட்டவில்லை. வளனாரோ, “நானே வானின்று இறங்கி வந்த வாழ்வின் உணவு ” என்று வானின்று இறங்கிய, எம் பெருமான் இயேசுவை தமது அடைக்கலத்தில் வைத்து பார்த்து மகிழ்ந்தார்.”