Category Archives: இன்றைய தூயவர்

மே:20 – புனித சியென்னா பெர்னர்தீன்

மே:20
புனித சியென்னா பெர்னர்தீன்
குரு – (கி.பி.1380-1444)

இவர் பிரான்சிஸ்கன் துறவற சபையை சீர்திருத்தியவர். இவருடைய நாள்களில் இவரே இத்தாலி நாட்டிலேயே புகழ் வாய்ந்த மறைபேச்சாளர். இவருக்கு 20 வயது ஆனபோது, தமக்கொத்த இளைஞர்களை சேர்த்துக் கொண்டார். இவர்களின் ஒத்துழைப்பினால் சியென்னா நகரில் ஒரு மருத்துவ மனையின் முழுப் பொறுப்பை ஏற்றார். ஆங்கே நாள்தோறும் குறைந்தது 20 பேர்களாவது பிளேக் நோய்க்க பலியானார்கள். ஆவர்களிடையே இவர் தொண்டு புரிந்தார்.

ஈராண்டுகளுக்குப் பின் பிரான்ஸ்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். குரப்பட்டம் பெற்றபின் 12 ஆண்டளவாக தனிமையாக ஜெபத்தில் நாள்களைக் கழித்தார். புpன்னர் பல இடங்களுக்கும் கால்நடையாகவே சென்று, பல மணிநேரம் மறையுரையாற்றினார். சீர்திருத்தம் பெற்ற சபைக்கு தலைவரானார். நூளடைவில் பாப்புவின் அதிகாரம் பெற்று இப்பதவியிலிருந்து விலகினார். மீண்டும் மறையுரையாற்றத் தொடங்கினார். ஊத்தமமனஸ்தாபம், திருப்பாடுகள், புண்ணியங்கள் மற்றும் அவரது சூழ்நிலையில் தாண்டவமாடிய கொடுமைகள் ஆகியவைகளைப் பற்றி மறையுரையாற்றினார். இயேசுவின் திருப்பெயர் என்று சொல்லும் புண்ணிய முயற்சியையும், தாய்மாமரி, தூய வளனார் பக்தியையும் ஏராளமாகப் பரப்பி வந்தார். ஐர்ளு என்பது இயேசு என்னும் திருப்பெயரின் சுரக்கம். இந்த 3 எழுத்துக்களையம் அழகாக ஓர் ஏட்டில் வரைந்து கொள்வார். புpன்னர் அதை மக்கள் மீது வைத்து அவர்களை மந்திரிப்பது இவரது வழக்கம்.

இவரது உருக்கமான மறையுரையைக் கேட்க சில வேளைகளில் 30,000 பேர் கூட ஆலயத்திற்கு வெளியிலும் பேச வேண்டுமென்றும், அவர்களின் குற்றங்களை பொதுநிலையினர் பொது இடங்களில் பேசித் திரியக் கூடாதென்றும் இவர் அறிவுரை தந்துள்ளார். ஐர்ளு என்ற இயேசுவின் பெயருக்கு இவர் காட்டிய சிறப்பு பக்தி விரைவில் மக்களிடம் பரவியது. இந்தச்சின்னம் ஆலயங்களிலும் வீடுகளிலும் பொது இடங்களிலும் வரையப்பட்டு வணக்கம் காட்டப்பட்டது.
மும்முறை இவரைப்பற்றி திருத்தந்தையிடம் குற்றஞ்சாட்டினர். ஆனால் இவரது புனிதம் இந்தக் குற்றச்சாட்டுக்களின் நடுவே முந்திய நிலையைவிட மிகவும் கூடியது. சீர்திருத்தம் பெற்ற இவரது சபையில் தொடக்கத்தில் 300பேர் இருந்தனர். இது ஆல் போல் தழைத்து இவரது இறுதி நாள்களில் 4000 பேராக பொலிவுடன் விளங்கியது. இறைமகன் விண்ணேற்ப்பு அடைந்த நாளன்று கி.பி.1444ல் இவரும் விண்ணகம் சென்றார்.

மே:18 புனித முதலாம் யோவான்

மே:18
புனித முதலாம் யோவான்
திருத்தந்தை, மறைசாட்சி-(கி.பி.526)

இவர்தான் முதன்முதலாக கொன்ஸ்னான்டிநோபிள் நகரில் ஒருதூதுவராக காலடி எடுத்துவைத்த பாப்பரசர். உரோமையில் திருத்தந்தையாக இருந்தபோது ஆரியப் பதிதச் சார்புடைய முதல் தியோடரிக், இத்தாலி நாட்டை ஆட்சி செய்தான். கொன்ஸ்னான்டிநோபிளில் இருந்த ஆரியப்பதிதர், அந்நகரத்து மன்னன் முதல் ஜஸ்டினால் கொடுமைப்படுத்தப்படுகின்றனர் என்று கேள்வியுற்று தியோடரிக், திருத்தந்தையை அனுப்பி ஆரியப்பதிதரை ஜஸ்டின் அன்புடன் நடத்துமாறு தூதுவிடுத்தான்.

திருத்தந்தை இப்பணியை நிறைவேற்றிய பின் இத்தாலி வந்தடைந்தார். அப்போது மன்னன் தியோடரிக்குக்கு ஒரு பெரும் ஜயம் எழுந்தது. மன்னன் ஜஸ்டினும் திருத்தந்தை ஜானும் தனக்கெதிராக சதித்திட்டம் தீட்டுவதாக எண்ணிணான். அதன் விளைவாக இதில் உடந்தையாய் இருந்ததாக ஜயங்கொண்டு முதலில் பொயித்தியஸ் என்பவரைக் கொன்றான். பிறகு ரவென்னா நகரில் திருத்தந்தையை சிறையிலிட்டான். அங்கே அவர் அனுபவித்த கொடிய வேதனைக்குப் பின் உயிர் நீத்தார். மன்னன் தியோடரிக்கும் சில நாட்களுக்குப்பின் இறந்தான். ஆனால் தான்தோன்றித்தனமாக ஒரு திருத்தந்தையை நியமனம் செய்துவிட்டே இறந்தான்.

மே:16 புனித ஆண்ட்ரு பொபோலா, சே.ச.

மே:16
புனித ஆண்ட்ரு பொபோலா, சே.ச.
குரு, மறைசாட்சி-(கி.பி.1591-1657)

இவர் போலந்து நாட்டினர். இவரை “ஆன்மாக்களின் திருடன்„ என்று அழைத்தனர் இவரின் பகைவர்கள். இப்பழிச்சொல்லை, இவருக்கு புனித பட்டமளித்த திருத்தந்தை 9ம் பத்திநாதர் மனமகிழ்வோடு பயன்படுத்தினார். “ஆன்மாக்களை வேட்டையாடுபவர்„ என்று அழைத்தார். இவர் குருத்துவப் பணியில் ஈடுபட்ட நாள்களில் போலந்தில் ஒரே குழப்பம். இவர் லித்துவெனியாவில் தான் பணியாற்றினார். அங்கு கிரேக்கப் பிரிவினை சபையினர், வெறியர்கள் போல நடந்தனர். புனிதர் அஞ்சா நெஞ்சத்துடன் பணிபுரிந்தார். ஏழைகளை அவர்களின் குடிசைகளுக்குச் சென்று சந்தித்தார். முறைக்கல்வியை நுனுக்கமாக கற்றுத் தந்தார். போலந்தில் ஒருமுறை பிளேக் நோய் தோன்றியது. அந்த நேரங்களில் எல்லாம் எல்லாருக்கும் எல்லாமாயிருந்து பணியாற்றியதாக திருத்தந்தை 9ம் பத்திநாதர் இவரைப்பற்றி குறிப்பிடுகிறார்.

அந்நாட்டில் இருந்த கோசாக் என்றழைக்கப்பட்ட குழப்பகாரர்கள் கத்தோலிக்கர்களை வேரோடு அழிக்கத் திட்டமிட்டனர். ஜானேவ் என்ற இடத்தில் இவர்களின் பிடியில் புனிதர் சிக்கிக் கொண்டார். தடிகளால் அடித்தனர். சாட்டையடி கொடுத்தனர். ஒரு குதிரையின் பின் காலில் இவரைக்கட்டி பிணைத்தணர். அந்தக் குதிரையை விரட்டி ஓடவிட்டனர். குதிரை சாலை வழியே இவரை இழுத்துச் சென்றது. கொலைக்களத்தை அடைந்தார். நீ ஒரு கத்தோலிக்க குருவா? ஆம், நான் கத்தோலிக்கனாக விசுவாசத்தில் பிறந்தேன். இதிலே இறக்கவும் விரும்புகிறேன். எனது விசுவாசமே உண்மை விசுவாசம். அதுவே மீட்பளிக்கும். நீங்களோ மனந்திரும்ப வேண்டும். தவம் புரிய வேண்டும். இன்றேல் மீட்பு இல்லை என்றார். இச்சொற்களை அவர்கள் கேட்டபின், அவர்களின் வெறி மென்மெலும் கூடியது. முன்பைவிட பன்மடங்கு வேதனைகள் காத்திருந்தன. மீண்டும் சாட்டையடி, ஒரு கூரிய ஈட்டியால் இவரது தலையில் குத்தி ஈட்டியை நிறுத்தினர். தோலை உரித்தனர். தீப்பந்தம் கொண்டு இவரது நெஞ்சில் காணப்பட்ட காயங்களைச் சுட்டனர். முன்புறமும் பின்புறமும் சுட்டனர். புனிதர் மனத்தளர்ச்சி அடையவில்லை. மாறாக, தமது விசுவாசப்பிரமாணத்தை சொல்லிக் கொண்டிருந்தார்.

காதுகளையும், மூக்கையும் வெட்டினர். நாவைப் பிடுங்கி எறிந்தனர். கண்களையும் பிடுங்கி எறிந்தனர். சாகும் நிலையில் புனிதர் துவண்டாலும் பகைவர் இரங்காமல் அடிகள் கொடுக்கவே இவரது தூய ஆன்மாவை இறைவனிடம் ஒப்படைத்தார். புனிதர் அடைந்த இத்தகைய பெரும் வேதனைகளை திருத்தந்தை 9ம் பத்திநாதர் இவருக்கு புனிதர் பட்டம் அளித்தபோது உலகிற்கு விடுத்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மே:13 – புனித பாத்திமா மரியன்னை

மே:13
புனித பாத்திமா மரியன்னை
(1917)

போர்த்துக்கல் நாட்டில் பாத்திமா என்ற இடத்திற்கருகில் புனித மரியன்னை ஆடு மேய்க்கும் சிறுவர், சிறுமியர், பிரான்சிஸ்கோ, ஜசிந்தா, லூசியாவுக்கு 5 முறையாகிலும் காட்சி அளித்துள்ளார். முதன்முறையாக இவர்களுக்கு காட்சியளித்தது மே மாதம் 13ம் நாள் 1947ம் ஆண்டு. எனவே தான் இதே நாளில் இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் இரண்டு காரியங்களை வேறுபடுத்தி சிந்திப்பது அவசியம். அருங்காட்சிகள் வேறு. மரியன்னை தரும் செய்தி வேறு. இங்கு மரியன்னை தந்ந பரிந்துரைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு தந்த காட்சிகள் என்றே கருதவேண்டும். விண்ணினிண்று இறங்கி வந்து இந்தப் பரிந்துரைகள் தரப்பட்டவை என்பதை உறுதிப்படுத்தவே மரியா பலமுறை தந்த காட்சிகள். இக்காட்சிகள் கதிரவனில் ஏற்படும் அபூர்வ அதிசய மாற்றங்கள். உலகில் எப்போதோ ஒருமுறை நடைபெறக்கூடியவை. இதன் பொருட்டு சோர்ந்திருக்கக் கூடிய நமது விசுவாசத்தை உசுப்ப வேண்டும். மூவிதப் பரிந்துரைகள்: தவமுயற்சி, செபமாலை, கன்னிமரியின் மாசற்ற இருதயத்திற்கு காட்டும் பக்தி.

இக்காட்சிகள் தோன்றிய சூழ்நிலையை புரிந்து கொள்வது அவசியம். கத்தோலிக்க விசுவாசம் ஊறிக்கிடந்த போர்த்துக்கல் நாட்டில் விசுவாச வாழ்வுக்கு எதிராக ஏற்ப்பட்ட கொந்தளிப்பு, அவலங்கள், அலங்கோலங்கள் கத்தோலிக்க நிறுவனங்களுக்கே மூடுவிழா என்று அறிவிக்கப்படாமல் தரப்பட்ட தொல்லைகள். அன்றுபோல் இன்றும் ஏன் அதற்கு மேலாக பாவ அக்கிரமங்கள் உலகின் மூலைமுடுக்கெல்லாம் சீரழித்து வருகின்ற கொடுமை. ஆண்களும் பெண்களும் வரலாறு காணாத முறையில் காம இச்சைக்கு இடங்கொடுத்து தீராத வியாதிகளால் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலை. ஏற்கனவே தங்களின் ஆன்ம வாழ்வுக்கு சாவுமணி அடித்துவிட்டு உலகமீட்பரை தூக்கி எறிந்துவிட்ட பரிதாப நிலை.

மனிதச் சமுதாயம் தானே உண்டாக்கிக் கொண்ட இந்தச் சீர்கேட்டினை புரிந்து கொண்டு கடவுள் பக்கம் திரும்பினால் மட்டுமே விமோசனம் உண்டு. இவ்வாறு தான் 1942ம் ஆண்டு மிலான் நகர் கர்தினால் சூஸ்டர் அனுப்பிய ஆயரின் சுற்றுமடலில் குறிப்பிடுகிறார். பாத்திமா அன்னை அப்போது தந்த காட்சிகளையும் அப்போது கிடைக்கப்பெற்ற செய்தியினையும் வைத்து ஆராய்ந்து பார்த்து அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார். “பாத்திமா மரியன்னை தந்த காட்சிகளில் குறிப்பிட்ட கட்டளைகளை நிறைவேற்றினால் மட்டுமே மன அமைதியும் உலக அமைதியும் பெற்று மகிழ முடியும். ருஸ்யா மனந்திரும்ப முடியும். புதிய சகாப்தம் தோன்றவும் கத்தோலிக்க திருச்சபை வெற்றி நடைபோடவும் முடியும்.”

மே:12 புனித பங்கிராஸ்

மே:12

புனித பங்கிராஸ்
மறைசாட்சி-(கி.பி.304)

14 வயது நடக்கும் போது இந்த இளைஞர் டயக்ள{சியன் காலத்தில் சித்திரவதைக்கும் கொடிய சாவுக்கும் உள்ளானார். இவரின் மாமன் டெனிஸ் என்பவர் இவரை வளர்த்து வந்தார். ஆவர் கிறிஸ்துவுக்காக சிறையில் தள்ளப்பட்டிருந்தார். பங்கிராஸ் தலை துண்டிக்கப்பட்டு இறந்தார். கி.பி. 508ம் ஆண்டு திருத்தந்தை சிம்மக்கியஸ் இவரது கல்லறை மீது ஒரு பேராலயம் எழுப்பினார். உரோமையில் இன்று வரை இந்த ஆலயம் காட்சியளிக்கிறது!

இளைஞர் பங்கிராஸ் இன்று எந்த அளவுக்கு சிறப்புப் பெற்றவரெனில் லண்டனில் புனித பங்கிராஸ் பெயரில் புகைவண்டி நிலையம் ஒன்று இன்றும் காட்சியளிக்கிறது. புனித பெரிய கிரகோரியார் மறைபரப்புப் பணிக்கென இங்கிலாந்து சென்றபோது இப்புனிதர் பெயரால் ஆசீர்வாதப்பர் சபைத் துறவிகளுக்குத் துறவுமடம் கட்டினார். அடுத்து இந்த சபையைச் சேர்ந்த துறவியும் ஆயருமான அகஸ்டின் பதவிக்கு வந்தபோது அவர் அந்த நாட்டில் எழுப்பிய முதல் ஆலயத்திற்கு புனித பங்கிராஸ் பெயர் சூட்டினார்.

கர்தினால் வைஸ்மன் பபியோலா என்ற பெயரில் எழுதிய புதினம் பங்கிராசின் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து எழுதியது. பங்கிராசின் வாழ்க்கை வரலாற்றில் நமக்குக் கிடைக்கும் தகவல் மிக மிகக் குறைந்ததே ஆயினும், விசுவாசத்தில் வீரச்சாவு வரைக்கும் அவர் காட்டிய பற்றுறுதி அன்று முதல் இன்றுவரை ஓர் உயர்ந்த எடுத்துக்காட்டு என்பதில் எள்ளளவும் ஜயமில்லை.

மே:06 புனித டோமினிக் சாவியோ

மே:06
புனித டோமினிக் சாவியோ
துறவி, இளைஞர்களின் பாதுகாவலர்-(கி.பி.1842-1857)

வடஇத்தாலியில் கி.பி.1842ல் முரியால்டோ நகரில் தோன்றிய டோம்னிக் புனித டொன்பொஸ்கோவின் முதல் மாணவர்களில் ஒருவர். இவரது குடும்பத்தில் குழந்தைப் பருவ முதல்; புனிதத்தில் வளரும் சூழ்நிலை எப்பக்கத்தில் திரும்பினாலும் நிலவியது. ஆலயம் சென்றால் அங்கே பங்குத்தந்தை ஜான், இளைஞரின் புனித களங்கமற்ற உள்ளத்தைக் கண்டு அதில் தெய்வீக நெருப்புப் பற்றியெரிந்து கொண்டிருக்க வழிவகைகளைக் காண்பித்தார். அன்னை மரியிடம் கொண்டிருந்த பக்தியை வளர்க்க எங்கும் நல்ல சூழ்நிலை அமைந்திருந்தது. இளவயதிலிருந்தே காற்றோ, குளிரோ, மழையோ எதையும் பொருட்படுத்தாமல் அதிகாலை 5 மணிக்கே ஆலயம் செல்வதும் தவறாது பூசைக்கு உதவி செய்வதும் இயல்பாகவே அவருக்கு இருந்த ஆசை, இது அவரது ஆன்மீகத்தின் ஆழத்தை வெளிக்கொணர்ந்தது.

டோம்னிக் என்ற ஓர் இளைஞர் தமது திருமுழுக்கு நாளன்று பெற்றுக்கொண்ட புனிதத்தை பழுதின்றி காப்பாற்ற தெரிந்து கொண்டவர். இவர் உண்மையிலேயே ஒரு புனிதர். என்று குறிப்பிட்டார் திருத்தந்தை 10ம் பத்திநாதர், தூய்மை, பக்தி, ஆன்மவேட்கை இம் மூன்றினின்றும் இவர் அடைந்த ஆற்றல் – இவரது கிறிஸ்தவ வாழ்வுக்கு ஊற்றுக்கண்ணாக அமைந்தது என்று 11ம் பத்திநாதர் குறிப்பிடுகிறார்.

1857ம் ஆண்டு மார்ச் திங்கள் 9ம் நாள் இவர் இறக்கும் வேளையில் ஆகா, என்ன இன்பமயமான அற்புதக்காட்சி என்று விண்ணகக் காட்சி பற்றி பவரவச வார்த்தைகள் கூறி உயிர்துறந்தார். 1954 ஜீன் 12ம் நாள் திருத்தந்தை 12ம் பத்திநாதர் இந்த இளைஞருக்கு புனிதர் பட்டம் அளித்தபோது இவ்வாறு கூறினார்: இந்த 15 வயது இளைஞர் டோம்னிக் சாவியோவை பீடங்களில் ஏற்றலாம் என்று இந்தத் திருச்சடங்கு மூலம் பிரகடனப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைய இளைஞர்கள் இவரின் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மிகக் குறிப்பாக தீய சக்திகள் காட்டுத்தீ போல பரவிக் கொண்டிருக்கும் கால கட்டத்தில் புனிதத்தை இளம் உள்ளங்களிலிருந்து கருவறுப்பது மட்டுமின்றி நஞ்சையும் புகுத்திக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் சாவியோவின் புனித வாழ்க்கை நம் இளைஞர்களுக்கு அறைகூவலாக அமையட்டும்.

மே:03 – புனித பிலிப்பு

மே:03

புனித பிலிப்பு
திருத்தூதர்

பிலிப்பு, கலிலேயாலில் பெத்சாயிதா என்ற ஊரில் தோன்றியவர். யோவான் நற்செய்தியாளர் மட்டுமே மீண்டும் மீண்டும் பிலிப்பைக் குறிப்பிடுகிறார். அதுவும் இறைமகன் இயேசு பேதுருவையும் ஆண்ட்ருவையும் முதலில் தேர்ந்து கொண்ட மறுநாளே, “என்னைப்பின் செல்”; என்று கூறி பிலிப்பைத் தேர்ந்து கொண்டார் என்று குறிப்பிடுகிறார். இறை அழைத்தலுக்கு உடனே செவிமடுத்தார் பிலிப்பு என்பது இதிலிருந்து புலனாகிறது. ஏனெனில் அவர் உடனே தம் நண்பர் நத்தனேயலிடம் இது குறித்து தெரிவிக்கின்றார். நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வரமுடியுமோ? என்று கேட்ட நத்தனேயலிடம் வந்து பாரும் என்று பதிலளிக்கிறார் பிலிப்பு. நீர் இயேசுவிடம் திறந்த உள்ளத்துடன் வந்து பாரும் அப்போது உம் ஜயங்கள் எல்லாம் அடிபட்டு விடும் என்று பிலிப்பு மறைமுகமாக குறிப்பிடுகின்றார்.

கள்ளங்கபடமின்றி திறந்த உள்ளத்துடன் பேசுபவர் பிலிப்பு என்பது ஆண்டவரிடம் அவர் அளித்த பதிலில் இருந்தும் புலனாகிறது. 200 தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறுதுண்டும் கிடைக்காதே என்றார் அவர். (யோவான்.6,7) ஒரு முறை வழிபாட்டுக்காக கிரேக்கர் யெருசலேம் நகரை வந்தடைகின்றனர். இவர்கள் தற்செயலாக பிலிப்பைச் சந்திக்கின்றார்கள். ஜயா இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று பிலிப்பிடம் கேட்க பிலிப்பு தான்தோன்றித்தனமாக செயல்படவில்லை என்பதை இங்கு அவர் நடந்து கொண்ட விதத்திலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. புpலிப்பு அந்திரேயாவிடம் வந்து அது பற்றிச் சொன்னார். அந்திரேயாவும் பிலிப்பும் கலந்துபேசி பின்னர் இயேசுவிடம் சென்று அதைத் தெரிவித்தனர். இவ்வாறு பல உயர்ந்த பண்புகள் கொண்டவர் பிலிப்பு.

தியோடரற், யுசிபியஸ் ஆகிய பழங்காலத்து வரலாற்று ஆசிரியர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்: தூயஆவியாரின் வருகைக்குப் பிறகு பிலிப்பு தம்முடைய திருமணமாகாத பெண்மக்களுடன் ஆசியா மைனர் சென்று மறைபரப்புப்பணியில் நாள்களைச் செலவிட்டார். இறதியில் பிலிப்பு பிரிஜியாவில் ஹியராப்போலிஸ் என்ற நகரில் சிலுவைச் சாவு அடைந்தார் என்று சொல்லப்படுகிறது.

மே:03 – புனித யாக்கோப்பு

மே:03

புனித யாக்கோப்பு
திருத்தூதர்

இவர் யூதா ததேயுவின் சகோதரர், ஆண்டவரின் உறவினர். இவரின் தாய்க்கும், இயேசுவின் தாய்க்கும், அக்காள் தங்கை முறை. இவர் செபதேயுவின் மகன் அல்லர். அல்பேயுவின் மகன். பக்தியில் சிறந்து விளங்கியவர். எருசலேம் நகரின் முதல் ஆயராக விளங்கியவர். (தி.ப.21,18) யூத மரபுகளைக்காத்து எருசலேம் ஆலயத்தில் திருப்பணிகளையும் திறம்பட நடத்தி வந்தவர். ஏரோது அக்ரிப்பா இழைத்த கொடுமைகளை பொறுமையுடன் தாங்கிக் கொண்டார்.

நற்செய்தியில் இவர் சிறப்பிடம் பெறாவிடினும் நமதாண்டவர் விண்ணேற்பு அடையும்முன் இவருக்கு சிறப்பான முறையில் காட்சி தந்தார் என்று புனித பவுல் குறிப்பிடுகிறார். மேலும் பவுல் மனந்திரும்பிய பிறகு 3 ஆண்டுகள் கழித்து பேதுருவுடன் எருசலேம் சென்றடைந்த போது கிறிஸ்தவர்கள் பொதுவாக பவுலை சந்தேக கண்கொண்டு பார்த்தாலும் யாக்கோப்பு இவரை இருகரம் விரித்து வரவேற்றார். யெருசலேமில் கூடிய முதல் பொதுச்சங்கத்தில் பிற இனத்தவர் விருத்தசேதனமின்றி திருமுழுக்குடன் மட்டும் சேர்த்துக்கொள்ளப்படுவர் என்று ஒரே மனதாக முடிவெடுத்தபோது யாக்கோப்பு சகோதரரே கடவுளிடம் திரும்பும் பிறஇனத்தாருக்கு நாம் தொல்லை கொடுக்கலாகாது என்ற முடிவை அரங்கேற்றினார்.

யூத வரலாற்று ஆசிரியர் கி.பி.62ல் யாக்கோப்பு கல்லால் எறியப்பட்டு கொல்லப்பட்டார் என்று உறுதிபடக் கூறுகிறார். திருமுகம் ஒன்று இவரால் எழுதப்பட்டுள்ளது. இந்தத் திருமுகம் பற்றி 23ம் யோவான் தாம் பாப்புவாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சரியாக 10 ஆண்டுகளுக்கு முன் தமது ஆண்டுத் தியான குறிப்பேட்டில் குறிப்பிட்டு வைத்துள்ளார்.

ஏப்ரல்:30 – புனித ஜந்தாம் பத்திநாதர்

ஏப்ரல்:30
புனித ஜந்தாம் பத்திநாதர்
பாப்பு –(கி.பி.1504-1572)

இவர் இத்தாலி நாட்டில் அலைக்சாண்டிரியா நகருக்கருகில் கி.பி. 1504ம் ஆண்டு பிறந்தார். தொமினிக்கன் குருத்துவ சபையில் சேர்ந்து குருப்பட்டம் பெற்றபின் மறைக்கலைகளைக் கற்றுத்தந்தார். அடுத்து ஆயராகவும் பின்னர் கர்தினாலாகவும் கி.பி.1566ம் ஆண்டில் பாப்புவாகவும் உயர்த்தப் பெற்றார்.

16ம் நூற்றாண்டு திருச்சபையின் மாபெரும் நிகழ்ச்சியாக வரலாற்று புகழ்பெற்றது திரிதெந்தீன் பொதுச்சங்கம். இச்சங்கம் நிறைவேற்றிய தீர்மானங்களை செயல்படுத்துவதில் இவர் பெரியதோர் பொறுப்பினை ஏற்றார். இன்று 2ம் வத்திக்கான் சங்க தீர்மானங்களை செயல்படுத்துவதில் ஏற்படும் விளைவுகள் எப்படியோ,அப்படியே திரித்தெந்தின் சங்கம் முடிந்த பின்னும் இருந்தன. மேலும் துருக்கியரின் சீற்றத்தையும் வெறியையும் இவர் சந்திக்க வேண்டியிருந்தது. குருமடங்களுக்குள் பெரிய சீர்திருத்தங்களை இவர் கொண்டு வந்தார். திருத்தம் பெற்ற புதிய திருப்பலி நூலை இவர் வெளியிட்டார். புதிய திருத்தெந்தின் மறைக்கல்வி நூல் ஒன்றினையும் வெளியிட்டார். திருச்சபையில் தோன்றிய குறைபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மருத்துவமனைகள் பல கட்டுவதற்கு காரணமாயிருந்தார். உணவின்றித் தவித்தோருக்கு உதவியளித்து வந்தார்.

இங்கிலாந்து அரசி முதல் எலிசபெத்திடமிருந்தும் இத்தாலி நாட்டு அரசன் 2ம் மாக்ஸிமில்லியனிடமிருந்தும் கடும் எதிர்ப்புக்களைச் சந்தித்தார். பிரான்சில் கொந்தளிப்பு ஹாலாந்து நாட்டில் போர்க்குரல் ஆகியவற்றினிடையில் துருக்கியரின் தாக்குதலையும் எதிர்கொண்டார். ஒரு பெரிய கடற்படையைத் திரட்டினார். லெப்பான்றோ என்ற வளைகுடாவில் துருக்கியர் மீது வெற்றி கண்டார். திருச்சபையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர பாடுபட்ட இத்திருத்தந்தை நாள்தோறும் பலமணிநேரம் இறைவனுடன் ஒன்றிப்பதன் மூலம் அனைத்திலும் வெற்றி பெற்றார். இவர் கடுமையான உண்ணா நோன்புகள் இருப்பார். பாப்பவாயிருந்தும் தமது தொமினிக்கன் சபை ஒழுங்குகளை விடாமல் கடைப்பிடித்தார்.

ஏப்ரல்:28 புனித பீற்றர் ~hனல் ஒசியானாத் தீவின் திருத்தூதர், மறைசாட்சி

ஏப்ரல்:28

புனித பீற்றர் ~hனல்
ஒசியானாத் தீவின் திருத்தூதர், மறைசாட்சி-(கி.பி.1803-1841)

பிரான்ஸ் நாட்டில் கெயே நகரில் 1803ம் ஆண்டு இவர் பிறந்தார். புதுநன்மை வாங்கிய நாளன்றே மறைபரப்புப் பணியில் ஈடுபட மாளாத ஆவல் கொண்டார். ஆனால் நாளடைவில் படிப்பதில் ஏற்பட்ட இடையூறுகளினால் அவ்வெண்ணத்தை உதறித்தள்ள முயன்றார். ஆனால் மரியன்னையிடம் மன்றாடினார். எண்ணத்தில் மீண்டும் பற்றுறுதி கொண்டார். 18ம் வயதில் குருமடத்தில் சேர்ந்தார். குருப்பட்டம் பெற்று 4 ஆண்டுகள் கழிந்தபின் மேரிஸ்ட் குருக்கள் துறவற சபையில் சேர்ந்தார். 33ம் வயதில் தம் சபைத் தோழர் ஒருவருடன் ஒசியானியாத் தீவுக்கு மறைரப்புப் பணிக்காக புறப்பட்டார். பசுபிக் பெருங்கடலை ஒட்டிய புத்தானாத் தீவை அடைந்தார். அங்கே கடுமையான வெயிலின் கொடுமைக்கு உள்ளானார். உணவின்றி வருந்தினார். மறைபரப்புப் பணிக்குப் பின் வீடு திரும்பும்போது முற்றிலும் வலிமையிழந்தவராகக் காணப்பட்டார். ஆனால் எப்போதும் மகிழ்ச்சியாகவும் புன்முறுவலுடனும் இருந்தார்.
இவரை அனுகி வந்த அனைவருக்கும் இவரை கடுமையாக துன்புறுத்தியவருக்கும் கூட நன்மை செய்ய சலிக்க மாட்டார் என இவர் தம் தோழர் புகழ்ந்துரைக்கிறார். இதனால் இவரை அறிந்த புத்தானா தீவினர் அனைவரும் “உயர்ந்த உள்ளம்” என்றே அழைத்தனர். இவர் செய்த முயற்சிகளுக்கு ஏற்றவாறு ஞான அறுவடை சிறிதும் கிட்டவில்லை. ஆனால் தம் தலைவர் கிறிஸ்துவை முன்வைத்து அதிகமாக முயன்றார். “விதைப்பவன் ஒருவன், அறுப்பவன் மற்றொருவன்” என்று அடிக்கடி கூறுவார். தான் விதைத்தது பயனளிக்காமல் போகாது என்பது அவரது நம்பிக்கை.
மரியன்னை பக்தியின் மாசற்ற வடிவம் இவர். மணிக்கணக்காக மரியன்னையின் மலரடிகளின் முன்னே மண்டியிட்டு இருப்பார். தீவின் தலைவனுடைய மகன் அருள் தந்தை பீற்றரிடம் நெருங்கிய தோழமை கொண்டிருந்ததன் பயனாக திருமுழுக்குப் பெற விரும்பினான். எனவே தீவின் தலைவன் அடியாட்களை அனுப்பி தடிகளால் தந்தை பீற்றரை கடுமையாக தாக்கி அடித்துக் கொன்றான். போதகரைக் கொல்லும் போது கிறிஸ்தவ வேதமும் கொல்லப்படும் எனக் கருதினான். இவர் இறந்த 2 ஆண்டுகளுக்குப் பின் பத்தானா தீவு முழுவதும் கிறிஸ்தவ மறையைத் தழுவியது. இப்போது ஒசியானியாத் தீவுகள் அனைத்திலும் கிறிஸ்தவ மறை செழித்து வளர்ந்து வருகிறது. இப்புனிதரை இப்பகுதியினர் தங்களின் முதல் மறைசாட்சி என்று கூறி வாழ்த்துகின்றனர்.