மறைவாழ்வுக் கல்விப் பணியாளர்களுக்கான சீருடையும், சான்றிதழும் வழங்கும் நிகழ்வு

மன்னார் மறைமாவட்ட திருவிவிலியம், மறைக்கல்வி, கல்வி அருட்பணிகளுக்கான மையமான புனித வளன் அருட்பணி மையம் மன்னார் மறைமாவட்டத்திலுள்ள பங்குகளிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட புதிய மறைவாழ்வுக் கல்விப் பணியாளர்களுக்கான மூன்றுமாத வதிவிடப் பயிற்சியை ( 16.06.2019 – 20.09.2019) வழங்கியது.

இப் பயிற்சியில் பங்குபற்றி, பயிற்சியினை முழுமையாக நிறைவு செய்த மறைவாழ்வுக் கல்விப் பணியாளர்களுக்கான சீருடையும், சான்றிதழும் வழங்கும் நிகழ்வு 14.10.2019 மன்னார் புனித வளன் அருட்பணிமையத்தில் நடைபெற்றது. புதிய மறைவாழ்வுக் கல்விப் பணியாளர்களினால் நடாத்தப்பட்ட மாலைத் திருப்புகழோடு நிகழ்வுகள் ஆரம்பமாகின. புதிய மறைவாழ்வுக் கல்விப் பணியாளர்களின் பணி அர்ப்பண வாக்குறுதியை மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை அவர்கள் பெற்றுக் கொண்ட பின்னர் அவர்களுக்கான பணிச் சீருடையை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் அவர்களுக்கான பயிற்சி நெறிக்கான சான்றிதழை வழங்கி ஆசீர்வதித்தார்.

இந் நிகழ்வில் இவ் வதிவிடப் பயிற்சியில்
பங்குபற்றியோருக்கான பயிற்சிகளை வழங்கியோரும், கற்பித்தோரும், பயிற்சி பெற்றவர்களின் பெற்றோரும், அருட்பணியாளர்களும், துறவிகளும், மறைவாழ்வுக் கல்விப் பணியாளர்களும் கலந்து சிறப்பித்தனர். அனைத்து நிகழ்வுகளையும் மன்னார் மறைமாவட்ட மறைவாழ்வுக் கல்விப் பணியாளர் ஒன்றியத் தலைவர் திரு.ஜோசவ் கிறிஸ்ரி றெவல் தொகுத்து வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *