மன்னார் மறைமாவட்டத்தின் பல பங்குகளில் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவை மையப்படுத்தியதான ஒளிவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. நமது இணையதளச் செய்திப்பரிவிற்கு கிடைத்த பங்கு ஒளிவிழாத் தொகுப்புக்கள் இங்கு பிரசுரிக்கப்படுகின்றன.

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயப் பங்கின் ஒளிவிழா கடந்த 28.12.2018 வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணிக்கு பேராலயத்தின் தூய பவுல் கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. பங்குத் தந்தை அருட்பணி.அ.ஞானப்பிரகாசம் அடிகளாரின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை; மன்னார் மாவட்டச் செயலர் திரு.மோகன் றாஸ் மற்றும் அருட்பணியாளர்கள், துறவிகள், மக்கள் பலர் கலந்து இவ் ஒளிவிழா நிகழ்வுகளைக் கண்டு களித்தனர்.