பிப்ரவரி:03 புனித ஆன்ஸ்கர்

பிப்ரவரி:03
புனித ஆன்ஸ்கர்
ஆயர்-(கி.பி.865)

 

இவர் ஸ்காண்டிநேவியாவின் மறைப் போதகர். பெனடிக்டின் சபை துறவி. ஸ்காண்டிநேவியன் மறைபரப்புப் பணிக்கு திருத்தந்தையின் தூதுவராக நியமனம் பெற்றவர். கோர்வி(ஜேர்மனி) என்ற நகருக்கு இளந்துறவியாக வந்தவர். இங்கு இவர் தொடங்கிய துறவு மடம் தான் வடக்கு ஜேர்மனியில் வளர்ந்து வந்த கிறிஸ்தவ பண்பாட்டிற்கு ஓர் தொட்டிலாக அமைந்தது. இவர் சிறந்த மறையுரையாளர். ஏழைகளுக்கு மிகுந்த இரக்கச் செயல்கள் புரிவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். மறைசாட்சியாக இறக்கும் வாய்ப்பை விரும்பினார். ஆனால் 65வது வயதில் ப்ரமென் என்ற இடத்தில் புனிதராக காலம் சென்றார். ஸ்வீடனில் இவர் செய்த மறைபோதக அரும்பணிக்கு பயன் கிட்டாமல் அவரது மறைவுக்குப் பிறகு அந்த நாடு விசுவாச சிதைவில் சிக்குண்டது. ஒன்றரை நூற்றாண்டுகளுக்குப் பின்னரே புத்துயிர் பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *