தூய ஆரோக்கிய அன்னைக்கான புதிய ஆலயம்

நானாட்டான் பங்கின் தூய ஆரோக்கிய அன்னைக்கான புதிய ஆலயம் அமைக்கப்பட்டு ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது. முன்னர் இருந்த ஆலயம், யுத்தத்தின் கொடுமைக்குள்ளாகி பாதிப்படைந்திருந்ததனாலும், பழைய ஆலயத்தில் இடப் பற்றாக்குறை இருந்ததனாலும், புதிய ஆலயம் கட்டப்படவேண்டிய அவசிய தேவை இருந்தது. மேலும் அறிய தூய ஆரோக்கிய அன்னைக்கான புதிய ஆலயம்

பிப்ரவரி:06 புனிதர்களான பால் மீக்கி, கொன்சாலோ கார்சியா தோழர்கள்

புனிதர்களான பால் மீக்கி, கொன்சாலோ
கார்சியா தோழர்கள்
சேசு சபை, பிரான்சிஸ்கன் சபை மறைசாட்சிகள்-(கி.பி.1597)

ஜப்பான் நாட்டில் நாகசாயில் 1592ம் ஆண்டு பால், ஜான், ஜேம்ஸ் ஆகிய மூவரும் மற்றும் 23 பேரும் மறைசாட்சிகளாய் இறந்தார்கள். இவர்களில் 3 பேர் இயேசு சபையினர். 6 பேர் பிரான்சிஸ்கன் சபையினர். 17 பேர் புதிதாக மனந்திரும்பிய ஜப்பான் நாட்டினர். இவர்கள் புனித அசிசியாரின் 3ம் சபையைச் சேர்ந்தவர்கள். இவர்களில் மூவர் இளைஞர்கள். ஒருவருக்கு 12 வயதும் மற்றொருவருக்கு 12 வயது மட்டுமே. இவர்களின் இறுதிநாளில் நடந்தது இதுதான்.
நாகசாகி மலைக்குன்றின்மீது 26 சிலுவைகள் தயாராகி வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் ஒவ்வொன்றிற்கும் அருகில் அதை மறைசாட்சிகளுடன் சேர்த்துக் கட்டி நிருத்துவதற்கு குழிகள் தோன்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு வேதசாட்சியின் உடலிலும் ஈட்யைப் பாய்ச்ச ஒரு கொலையாளி நியமிக்கப்பட்டிருந்தான். ஒவ்வொரு மறைசாட்சியின் உடலும் 2 ஈட்டிகளால் மார்பு வழியாக (ஒ வடிவில்) துளைக்கப்பட வேண்டியிருந்தது. ஒருபுறம் துளைக்கப்பட்டு மறுபுறம் ஈட்டி வரவேண்டும்.
மறைசாட்சிகள் இந்த குன்றிற்குப் பீடுநடை போட்டுக்கொண்டும் “தெதேயும்” என்ற நன்றிப் பாடலை பாடிக் கொண்டும் மிகத் தெம்பாக வந்தடைந்தார்கள். பின்னர் இவர்கள் ஒவ்வொருவராக சிலுவையில் கட்டப்பட்டனர். இயேசு சபை குரு மாணவரான பால்மீக்கி தமது இறுதி மறையுதையை ஆற்றினார். எங்களை கொல்வதற்கான ஆணையில் நாங்கள் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து ஜப்பான் நாடு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால்நான் வேற்று நாட்டினர் அல்லேன் எனது தாய்நாடு ஜப்பான். நான் சாவதற்கு ஒரே ஒரு காரணம் நான் கிறிஸ்துவின் கொள்கைகளை போதித்ததுதான். கிறிஸ்துவை போலவே நானும் என்னைக் கொல்போரை மன்னிக்கின்றேன். எனது குருதி சிந்தப்படும் பொழுது அது எனது நாட்டு மக்களுக்கு பயன்தரும் பனிமழையாக அமையும் என்பது எனது துணிவு என்று கூறினாh.
1860ம் ஆண்டு வேத போதகர்கள் மிண்டும் ஜப்பான் நாட்டிற்கு வந்தபோது முதலில் கிறிஸ்தவர் எவரையும் பார்க்க முடியாததுபோல் காணப்பட்டது. ஆனால் நாளடைவில் நாகசாகியை சுற்றினும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் வாழ்வதைக் கண்டனர். இவ்மறைசாட்சிகள் அனைவரும் சிலுவையில் பிணைக்கப்பட்டு, ஈட்டியினால் குத்தப்பட்டு கொல்லப்பட்ட போது 15து நூற்றாண்டுகளுக்கு முன்னர் கல்வாரியில் பலியான கிறிஸ்துவின் பெயருக்காக குருதியைச் சிந்தினார்கள் என்பது யாரால் மறுக்க இயலும்.

பொதுக்காலம், வாரம் 5 செவ்வாய்

முதல் வாசகம்

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 8: 22-23, 27-30

அந்நாள்களில் சாலமோன் ஆண்டவரின் பலிபீடத்தை நோக்கி நின்றுகொண்டு, இஸ்ரயேல் சபையார் அனைவர் முன்னிலையில் வானத்திற்கு நேரே தம் கைகளை உயர்த்தி மன்றாடியது: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே! மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் உம்மைப் போன்ற வேறு கடவுள் யாரும் இல்லை. உமது முன்னிலையில் முழு உள்ளத்தோடு உமக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் உம்முடைய அடியார்க்கு உமது உடன்படிக்கையின்படி தவறாது பேரன்பு காட்டி வருகிறீர். கடவுள் உண்மையில் இந்த மண்ணுலகில் தங்கியிருப்பாரா? வானமும் வான மண்டலங்களும் உம்மைக் கொள்ள இயலாதிருக்க, நான் கட்டியுள்ள இக்கோவில் எப்படி உம்மைக் கொள்ளும்? என் கடவுளாகிய ஆண்டவரே! உம் அடியான் செய்கிற வேண்டுதலையும் விண்ணப்பத்தையும் கேட்டருளும்; உம் அடியான் இன்று உம் முன்னிலையில் எழுப்பும் கூக்குரலுக்கும் செய்யும் வேண்டுதலுக்கும் செவிசாய்த்தருளும்! “என் பெயர் இவ்விடத்தில் விளங்கும்” என்று இக்கோவிலைப்பற்றி நீர் சொல்லியிருக்கிறீர்! இவ்விடத்தில் உம் அடியான் செய்யும் வேண்டுதலைக் கேட்டருள்வதற்காக, இரவும் பகலும் உமது கண்கள் இதனை நோக்கி இருப்பனவாக! உம் அடியானின் விண்ணப்பத்திற்கும் இவ்விடத்தை நோக்கிச் செய்கிற உம் மக்கள் இஸ்ரயேலர் வேண்டுதலுக்கும் செவிசாய்ப்பீராக! உமது உறைவிடமாகிய விண்ணகத்திலிருந்து கேட்டு அருள்வீராக! கேட்டு மன்னிப்பு அருள்வீராக!”

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 84: 2-3. 4,9. 10. 11


பல்லவி: ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது
!

என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது; என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது.
படைகளின் ஆண்டவரே! என் அரசரே! என் கடவுளே! உமது பீடங்களில் அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்துள்ளது;
தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச் சிட்டுக் குருவிகளுக்குக் கூடும் கிடைத்துள்ளது.பல்லவி

உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.
எங்கள் கேடயமாகிய கடவுளே, கண்ணோக்கும்! நீர் திருப்பொழிவு செய்தவரின் முகத்தைக் கனிவுடன் பாரும்! பல்லவி

வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும் உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒரு நாளே மேலானது;
பொல்லாரின் கூடாரங்களில் குடியிருப்பதினும், என் கடவுளது இல்லத்தின் வாயிற்காவலனாய் இருப்பதே இனிமையானது. பல்லவி

ஏனெனில், கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கதிரவனும் கேடயமுமாய் இருக்கின்றார்;
ஆண்டவர் அருளையும் மேன்மையையும் அளிப்பார்; மாசற்றவர்களாய் நடப்பவர்களுக்கு நன்மையானவற்றை வழங்குவார். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, நீர் உம் நியமங்களைத் தந்தீர்; உம் ஒழுங்கு முறைகளில் என் இதயம் நாட்டங்கொள்ளச் செய்யும். அல்லேலூயா. : (மாற்கு 7:1-13 )

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-13

ஒரு நாள் பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும் இயேசுவிடம் வந்து கூடினர். அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள். பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை; சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன. ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, “உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?” என்று கேட்டனர். அதற்கு அவர், “வெளிவேடக்காரர்களாகிய உங்களைப் பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார். `இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னைவிட்டு வெகு தொலையில் இருக்கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்’ என்று அவர் எழுதியுள்ளார். நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்” என்று அவர்களிடம் கூறினார். மேலும் அவர், “உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணித்துவிட்டீர்கள். `உன் தந்தையையும் தாயையும் மதித்து நட’ என்றும் `தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும்’ என்றும் மோசே உரைத்திருக்கிறார் அல்லவா! ஆனால் ஒருவர் தம் தாயையோ தந்தையையோ பார்த்து, `நான் உமக்குத் தரக் கடமைப்பட்டிருக்கிறது `கொர்பான்’ ஆயிற்று; அதாவது `கடவுளுக்குக் காணிக்கையாயிற்று’ என்றால், அதன்பின் அவர் தம் தாய் தந்தைக்கு எந்த உதவியும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை. இவ்வாறு நீங்கள் பெற்றுக் கொண்ட மரபின் பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள். இதுபோல நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள்” என்று அவர்களிடம் கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.