சலேசியன் சபை அருட்பணியாளர்களால் மன்னார் மறை மாவட் டத்தில், முருங்கனில் நடாத்தப்படும் தூய டொன்பொஸ்கோ தொழிற்கல்வி நிறுவன த்தின் பாதுவலர் தூய டொன் பொஸ்கோ திருவிழா இன்று இந் நிறுவனத்தில் இன்று காலை (03.02.2018) சனிக்கிழமை கொண்டாடப்பட்டது,இவ்விழாவிற்கு வருகை தந்த மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் பிரதான நுழைவாயில் வைத்து மாணவர்கனின் மேற்கத்திய இசை முழக்கத்துடன் மாணவர்களாலும், அவர்களின் பெற்றோராலும் வரவேற்று அழைத்துச் செல்லப்பட்டார்.
அதன் பின்னர் இந் நிறுவனத்தின் மண்டபத்திலே ஆயர் அவர்களால் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. அவ் வேளையில் ஆயர் தனது மறையுரையின் போது: இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் இங்கு வழங்கப்படும் நல் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி நமது எதிர்காலத்திற்காக இன்றே தயாராக வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
திருப்பலியைத் தொடர்ந்து மாணவர்களுக்கான சான்றிதழ்களை ஆயர் வழங்கினார். அனைத்து நிகழ்வுகளும் இந் நிறுவனத்தின் இயக்குனர் அருட்பணி போல் அவர்களின் தலைமையில் நடைபெற்றன.