பிப்ரவரி:04 புனித அருளானந்தர்

பிப்ரவரி:04
புனித அருளானந்தர்
மறவ மண்ணில் மலர்ந்த மறைசாட்சி-(கி.பி.1693)

இவர் போர்ச்சுக்கல் நாட்டின் லிஸ்பென் நகரில் உயர் குலத்தில் தோன்றியவர். சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். இவரும் இவர் தம் சகோதரர்களும் அரச அவையில் உள்ள குழந்தைகளுடன் விளையாடும் அளவுக்கு அவர்களின் குலப்பெருமை விளங்கியது. சிறுவன் ஜான் தொடக்கத்திலிருந்தே உடல் நிலையில் ஏற்ற தாழ்வு அடைந்து வந்தார்.
11 வயதில் உயிர் பிரிந்துவடும் என அஞ்சும் அளவிற்கு நோய் தாக்கியது. தாய் புனித பிரான்சிஸ் சவேரியாரை நோக்கி தன் பிள்ளைக்கு குணம் பெற்றுத் தர வேண்டும் என்று மன்றாடினர். புதுமையாக ஜான் பிழைத’துக் கொண்டார்.
பின்னர் 1662-ல் இவர் இயேசு சபையில் சேர்ந்தார். குருப்பட்டம் பெற்றபின் இந்தியாவுக்கு கிறிஸ்துவின் ஒளியைக் கொண்டு வந்தார். முதலில் கோவாவில் தங்கி இறுதிப் படிப்புகளை முடித்துக் கொண்டார். பிறகு மதுரை மறைபரப்புத் தளத்திற்கு வந்தார். தமிழை திறம்படக் கற்றுக் கொண்டார். இன்று போற்றப்படுகின்ற தாயகமாக்குதல், பண்பாட்டு மயமாக்குதல் என்ற முறைகளை ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே எவரின் தூண்டுதலும் இல்லாமலேயே செயல்படுத்தினார். இதனால் இயேசு சபை மாநிலத் தலைவர்கள் உட்பட பலரும் வெகுண்டு எழுந்தனர். மீண்டும் இவரை இத்தாலிக்கு அனுப்பிவிடவும் எண்ணிணர். இவரோ இந்தியத் துறவி போல் காவி உடை அணிந்து இந்தியனாகவே வாழ்ந்து தமிழக மக்களின் அன்பையும் வணக்கத்தையும் பெற்றார். இதன் வழியாக ஆயிரக்கணக்கானவர்கள் மெய்மறையைத் தழுவினர்.
இராமநாதபரத்தில் மறவர் குலத்தைச் சேர்ந்த அரச குடும்பத்தினர்கள் கூட இவரால் மெய்மறையில் சேர்க்கப்பட்டனர். இதன் பொருட்டே இவர் உயிர் துறக்க வேண்டியதாயிற்று. ஆனால் இவரது கடைசி நாள்களில் இவர் புதுமை வரமும் பெற்றிருந்தார். இவரது செபத்தின் பயனாக கொடிய நோயுற்றோர் பலரும் புதுமையாக நலம் பெற்றனர். இதைப் பார்த்த அந்தணர்கள் இவர் பேய் வித்தையின் காரணமாக குணப்படுத்துகின்றார் என்று குற்றஞ்சாட்டினர். குறு மன்னர் தடியத் தேவர் கொடிய நோயினால் அல்லலுற்ற வேளையில் அருளானந்தரின் செபத்தினால் நலமடைந்து திருமுழுக்குப் பெற்றார். இந்த சிற்றரசனுக்கு 5 மனைவிகள் இருந்தனர். இவர் மெய்மறையைத் தழுவும் போது முதல் மனைவியை மடடும் வைத்துக் கொண்டு மற்றவர்களை அனுப்பிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த கடலை என்பவள் இரகுநாதனை அனுகினாள். ஓரியூரிலிருந்த தன் தம்பி உடையத் தேவரிடம் சுவாமி அருளானந்தரைப் பற்றிய குற்றச்சாட்டை கவனிக்க கேட்டுக் கொண்டான். இந்த உடையத் தேவரின் ஆணைப்படி கி.பி.1693ம் ஆண்டு பிப்ரவரி 4ம் நாள் ஒரு மணல் மேட்டில் புனிதர் தலைவெட்டப்பட்டு விண்ணகம் சென்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *