மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி தேசியப் பாடசாலை தனது 149வது அகவையில் தடம் பதித்து 150வது ஆண்டை எட்டவிருக்கும் இந்நிலையில் ( 1870 – 2020) 150வது யூபிலி ஆண்டுக்கான கால்கோள் விழா கடந்த திங்கட்கிழமை 10.06.2019 காலை 08.00 மணிக்கு
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி தேசியப் பாடசாலை தனது 149வது அகவையில் தடம் பதித்து 150வது ஆண்டை எட்டவிருக்கும் இந்நிலையில் ( 1870 – 2020) 150வது யூபிலி ஆண்டுக்கான கால்கோள் விழா கடந்த திங்கட்கிழமை 10.06.2019 காலை 08.00 மணிக்கு கல்லூரியின் முதல்வர் அருட்சகோ. றெஜினோல்ட் அவர்களின் தலைமையில்,மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களின் தலைமையிலான மகிழ்வு கூட்டுத் திருப்பலியோடு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
150வது ஆண்டு யூபிலி தொடக்க விழா இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. திங்கட்கிழமை 10.06.2019 காலை 08.00 மணிக்கு திருப்பலியும் அதனைத் தொடந்து ஏனைய நிகழ்வுகளும் இடம் பெற்றன. கல்லூரியின் நுழைவாயிலிருந்து விருந்தினர்கள் பாடசாலையின் இசைக்குழுவினரின் மகிழ்வொலியோடும், மற்றும் சாரணர், சென்.ஜோண்ஸ் குழு மற்றும் கடேற் குழு ஆகியோரின் அணிவகுப்புடன் விழா மேடையை நோக்கி அழைத்து வரப்பட்டனர். அதன் பின் பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்றன.