மன்னார் மறைமாவட்ட புனித யோசேவ்வாஸ் குடும்பம், பொதுநிலையினர் அருட்பணி மையத்தின் நுழைவாயிலில் இலங்கையின் திருத்தூதரான புனித யோசேவ் வாஸ் அடிகளாரின் திருவுருவம் நேற்று ( 09.06.2019) ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் ஆயர் போருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகை அவர்களால் அரியணை ஏற்றப்பட்டது.மன்னார் மறைமாவட்ட புனித யோசேவ்வாஸ் குடும்பம், பொதுநிலையினர் அருட்பணி மையத்தின் நுழைவாயிலில் இலங்கையின் திருத்தூதரான புனித யோசேவ் வாஸ் அடிகளாரின் திருவுருவம் நேற்று ( 09.06.2019) ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் ஆயர் போருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகை அவர்களால் அரியணை ஏற்றப்பட்டது.
புனித யோசேவ்வாஸ் குடும்பம், பொதுநிலையினர் அருட்பணி மையத்தின் இயக்குனர் அருட்பணி.ச.எமிலியானுஸ்பிள்ளை அடிகளாரின் முயற்சியினால் அமைக்கப்பட்ட புனிதரின் திருவுருவ அமைவிடத்தை ஆசீர்வதித்து, புனிதரின் திருவுருவை ஆசீர்வதித்து, அரியணையேற்றும் திருநிகழ்வின் போது, நேற்றைய நாளில் நடைபெற்ற திருமணஅருட்சாதன முன் ஆயத்த வகுப்பில் கலந்து கொண்ட இளைஞர், இளம் பெண்களும் அவர்களுக்கான வகுப்புக்களை வளங்கும் வளவாளர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
இந் நிகழ்வின் இறுதியில் ஆயர் போருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகை அவர்கள், திருமணஅருட்சாதன முன் ஆயத்த வகுப்பில் கலந்து கொண்ட இளைஞர், இளம் பெண்களையும் அவர்களுக்காக வகுப்புக்களை வளங்கும் வளவாளர்களையும் சந்தித்து அவர்களோடு உரையாடினார்.