குருத்தோலை ஞாயிறு தின நிகழ்வுகளோடு ஆரம்பமாகியது.

கத்தோலிக்கத் திரு அவையின் வழிபாடுகளில் முதன்மை இடம் பெறுகின்ற நம் ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவின் பவனி, நற்கருணையை ஏற்படுத்தியது, பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவற்றை நினைவூட்டும் தூய வார வழிபாடுகள் நேற்றைய தினம் 14.04.2019 ஞாயிற்றுக் கிழமை குருத்தோலை ஞாயிறு தின நிகழ்வுகளோடு ஆரம்பமாகியது. உலகெங்கும் வாழும் கத்தோலிக்க திருஅவை மிகவும் ஆன்மிக உள்ளாழத்தோடு இந் தூய நாட்களை நினைவூ கூர்ந்து பாஸ்கா மறைபொருளை தியானிக்கின்றது.கத்தோலிக்கத் திரு அவையின் வழிபாடுகளில் முதன்மை இடம் பெறுகின்ற நம் ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவின் பவனி, நற்கருணையை ஏற்படுத்தியது, பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவற்றை நினைவூட்டும் தூய வார வழிபாடுகள் நேற்றைய தினம் 14.04.2019 ஞாயிற்றுக் கிழமை குருத்தோலை ஞாயிறு தின நிகழ்வுகளோடு ஆரம்பமாகியது. உலகெங்கும் வாழும் கத்தோலிக்க திருஅவை மிகவும் ஆன்மிக உள்ளாழத்தோடு இந் தூய நாட்களை நினைவூ கூர்ந்து பாஸ்கா மறைபொருளை தியானிக்கின்றது.

இவ் வகையில் மன்னார் மறைமாவட்ட திரு அவையின் தலை மை ஆயலமாகத் திகழும் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்றைய தினம் 14.04.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 06.30 மணிக்கு மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தலைமையில் ஆண்டவரின் திருப்பாடுகளின் ஞாயிறு என அழைக்கப்படும் குருத்தோலை ஞாயிறு தின திருவழிபாடும், திருப்பலியியும் நடைபெற்றது.

இந்தியா, தமிழ்நாடு கப்புச்சியன் துறைவற சபை அருட்பணியாளர்களின் அனுக்கிரகா தியான இல்லத்தில் பணிபுரியும அருட்பணி லோறன்ஸ் அடிகளார் குருத்து ஞாயிறு திருப்பலிக்கான மறையுரையை வழங்கினர். பேராலயப் பங்குத் தந்தை அருட்பணி.அ.ஞானப்பிரகாசம் அவர்களின் வழிகாட்டலில் பேராலயப் பங்கில் பணிபுரியும் ஏனை அருட்பணியாளர்கள், துறவிகள், பணிக்குழுக்கின் பங்களிப்போடு இத் திருவழிபாடு அர்த்தமுள்ள விதத்திலே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. புல அருட்பணியாளர்கள், துறவிகள், இறைமக்கள் இவ்வழிபாட்டில் பங்கேற்றுச் செபித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *