கார்த்திகை மாதம் 22ம் திகதி திருவழிபாட்டுப் பாடகர் குழுக்களின் பாதுகாவலியாகத் திகழும் தூய சிசிலியாவின் திருவிழா உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. மன்னார் மறைமாவட்டத்தின் பல பங்குகளிலும் இவ் விழாவினை பங்கு திருவழிபாட்டுப் பாடகர் குழவினர் சிறப்பாகக் கொண்டாடினர்.மன்னார் மறைமாவட்டத்தின் தலைமை ஆலயமாக அமைந்துள்ள தூய செபஸ்தியார் பேராலய திருவழிபாட்டு பாடகர் குழவினர் இவ்விழாவினை மகவும் அர்த்தமுள்ள விதத்திலே கொண்டாடினர். புங்குத் தந்தை அருட்பணி.அ.ஞானப்பிரகாசம் அடிகளார் மற்றும் உதவிப் பங்குத் தந்தை அருட்பணி.பி.றஞ்சன் சேவியர் அடிகளார் ஆகியோர் இவ் வேளையில் பிரசன்னமாகியிருந்து நிகழ்ச்சிகளை மெருகூட்டினர்.