Let us Pray for the Beatification of Martyrs of Mannar. கிறிஸ்துவுக்காக தம் இன்னுயிர் ஈந்த நம் இறை விசுவாசிகள் மறைசாட்சிகள் என்னும் பேறு பெறச் செபிப்போம்.
The Official Webpage of the Diocese of Mannar மன்னார் மறைமாவட்டத்தின் இணையதளம்.

தனிநாயகம் அடிகளாரின் நினைவுப் பேருரை

தமிழ்த்தூது அருட்பணி சேவியர் தனிநாயகம் அடிகளாரின் நினைவுப் பேருரை, மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையமான கலையருவியின் ஏற்பாட்டில் இன்று 18.02.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 03.00 மணிக்கு மன்னார் தூய செபஸ்தியார் பேராலய கேட்போர் மண்டபத்திலே நடைபெற்றது. மேலும் அறிய தனிநாயகம் அடிகளாரின் நினைவுப் பேருரை

மாந்தை தூய லூர்து அன்னை திருத்தலப் பெருவிழா

மருதமடுத் திருத்தாயாரின் தொடக்ககால இருப்பிடமும் , வரலாற்றச் சிறப்புமிக்கதுமான மாந்தை தூய லூர்து அன்னை திருத்தலப் பெருவிழா, இன்று (17.02.2018) சனிக்கிழமை  காலை பல ஆயிரம் இறைமக்கள் ஒன்று கூடி நிற்க மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மேலும் அறிய மாந்தை தூய லூர்து அன்னை திருத்தலப் பெருவிழா

பிப்ரவரி: 17 புனித மரியாயின் ஊழியர் சபை நிறுவியவர்கள்

புனித மரியாயின் ஊழியர் சபை நிறுவியவர்கள்
(கி.பி.13ம் நூற்றாண்டு)

இந்த எழுவரில் இருவர் திருமணமானவர். இருவர் விதவையர். மூவர் திருமணமாகாதவர். இவர்கள் எல்லாரும் தங்கள் நாடான இத்தாலியில் பிளாரன்ஸ் நகரில் தனிமையான இடத்தில் ஒன்று கூடினர். தங்களின் உடமைகள் யாவற்றையும் துறந்து விட்டு செப தவ வாழ்வை மேற்கொள்ள முடிவு செய்தனர் என்றால் வியப்பாக இல்லையா? 1233ல் முழுவீச்சில் உலகை துறந்தனர் இந்த அபூர்வ சகோதரர்கள் . பிளாரன்ஸ் நகர ஆயரின் வேண்டுகோளின் படி தங்கெளுக்கென சபை ஒழுங்குகளை அமைத்துக் கொண்டனர். நாளடைவில் வேறு பலரையும் இந்தச் சபையில் சேர்த்தனர். இவர்கள் மரியாயின் ஊழியர்கள்; என்றே அன்றும் இன்றும் அழைக்கப்படுகின்றனர். புனித டோமினிக் சபையினரின் உடையைப் போல் ஆனால் கறுப்பு நிறத்தில் அணிந்து கொண்டனர். இந்த சபையைச் சேர்ந்த கன்னியர்களும் நாளடைவில் பல மடங்களை நிறுவியுள்ளார்கள். 3ம் சபையினரும் உண்டு. 16வது நூற்றாண்டு முதல் வியாகுல அன்னைக்கு சிறப்பான வணக்கம் காட்டுவதுதான் இந்தச் சபையின் தனிச் சிறப்பு.

சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

மன்னார் மறைசாட்சிகளின்  மண்ணில் வரலாற்றுச் சிறப்பு மிக்க மருதமடுத் திருத்தாயாரின் ஆரம்ப இடமாகிய மாந்தையில் அமைந்துள்ள மாந்தை மாதா பெருவிழா நாளை (17.02.2018) சனிக்கிழமை  நடைபெறவுள்ள நிலையில், இன்று (16.02.2018) வெள்ளிக்கிழமை இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மேலும் அறிய சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஆட்காட்டிவெளிப் பங்கு அளிக்கும் வரவேற்பு

மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகைக்கு ஆட்காட்டிவெளிப் பங்கு அளிக்கும் வரவேற்பும், பரப்புக்கடந்தான் கர்த்தர் ஆலயத்தில் திருவுருவம் திறந்து வைத்தலும் 13/02/2018.

ஆட்காட்டிவெளிப் பங்குச் சமூகம் வரவேற்பளித்தது.

மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களுக்கு ஆட்காட்டிவெளிப் பங்குச் சமூகம் இன்று (13.02.2018) செவ்வாய்க்கிழமை மாபெரும் வரவேற்பளித்தது. மேலும் அறிய ஆட்காட்டிவெளிப் பங்குச் சமூகம் வரவேற்பளித்தது.