தமிழ்த்தூது அருட்பணி சேவியர் தனிநாயகம் அடிகளாரின் நினைவுப் பேருரை, மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையமான கலையருவியின் ஏற்பாட்டில் இன்று 18.02.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 03.00 மணிக்கு மன்னார் தூய செபஸ்தியார் பேராலய கேட்போர் மண்டபத்திலே நடைபெற்றது.கலையருவி இயக்குனர் அருட்பணி.பா.கி.நேசரெட்ணம் தலைமையில் நிகழ்வுகள் யாவும் நடைபெற்றன. இந்தியா தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்திருந்த தமிழறிஞர் அருட்பணி அமுதன் அடிகளார் தமிழ்தூது தனிநாயகம் அடிகளாரின் நினைவுப் பேருரையை வழங்கினார். தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் தமிழ் ஆர்வம், தமிழ்ப்புலமை, தமிழ்த்தொண்டு,தமிழ் ஆராட்சி, பன்மொழிப் புலமை என்பனவற்றை உள்ளடக்கிய மிகச் சிறப்பான தொரு உரையைப் பதிவு செய்தார்.
தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நினைவுப் பேருரையை இலங்கையின் பல்வேறு இடங்களிலும் நடாத்துவதற்கு கனடாவில் வசிக்கும் தமிழ் மொழி ஆர்வலர் திரு. அன்ரன் பிலிப் சின்னராசா அடிகளார் அனைத்து ஒழுங்குகளையும் மேற்கொண்டு வருகின்றார்.
இவ் நினைவுப் பேருரை நிகழ்வுக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களும், மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை அடிகளாரும் வருகை தந்திருந்தனர்.
இந்நிகழ்வில் குருக்கள், துறவிகள், தமிழ் மொழி ஆர்வலர்கள் எனப் பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். இறுதியில் திருமதி.விக்ரர் பெப்பி சோசை நிகழ்வு ஏற்பாட்டு குழு சார்பாக நன்றியுரை வழங்கினார்.