குடும்பங்களின் பாதுகாவலரான புனித யோசேப்புப் பற்றிய “ மீட்புத் திட்டத்தில் நல்ல தந்தை புனித யோசேப்பு” என்னும் தலைப்பில் அருட்கலாநிதி அ.கிறிஸ்ரி றூபன் பெனாண்டோ அடிகளாரால் உருவாக்கப்பட்ட நூல் 24.07.2021 சனிக்கிழமை மாலை மடுமாதா திருத்தலத்தில் அமைந்துள்ள புனித ஜோண் மரிய வியான்னி ஆன்மிக அமைதி முன்னெடுப்பு மையத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
குடும்பங்களின் பாதுகாவலரான புனித யோசேப்புப் பற்றிய “ மீட்புத் திட்டத்தில் நல்ல தந்தை புனித யோசேப்பு” என்னும் தலைப்பில் அருட்கலாநிதி அ.கிறிஸ்ரி றூபன் பெனாண்டோ அடிகளாரால் உருவாக்கப்பட்ட நூல் 24.07.2021 சனிக்கிழமை மாலை மடுமாதா திருத்தலத்தில் அமைந்துள்ள புனித ஜோண் மரிய வியான்னி ஆன்மிக அமைதி முன்னெடுப்பு மையத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
உரோமாபுரி ஊர்பானியா திருத்தந்தையின் கல்லூரியிலே திருவிவிலிய இறையியல் துறையிலே தனது முதுகலைமானிப் பட்டப்படிப்பை மிகச் சிறப்பான முறையிலே நிறைவுசெய்து ,சிறப்புத் தேர்ச்சி பெற்று அண்மையில் தாயகம் திரும்பிய அருட்கலாநிதி அ.கிறிஸ்ரி றூபன் பெனாண்டோ அடிகளார் மடுமாதா திருத்தலத்தில் அமைந்துள்ள புனித ஜோண் மரிய வியான்னி ஆன்மிக அமைதி முன்னெடுப்பு மையத்தின் நியமிக்கப்பட்டுப் பணியாற்றிவரும் இவ்வேளையில் மிகவும் பெறுமதி வாய்ந்த “ மீட்புத் திட்டத்தில் நல்ல தந்தை புனித யோசேப்பு” என்னும் நூலை யதார்த்தமான சிந்தனையோடும், அரிய பல புதிய விடயங்களை உள்ளடக்கியதாகவும் எழுதியுள்ளார்.
இப் புத்தக வெளியீட்டு நிகழ்வில் நூலுக்கான அறிமுக உரையை இளைப்பாறிய புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி தேசிய பாடசாலை அதிபரும் புனித டிலாசால் துறவற சபையைச் சேர்ந்தவருமான அருட்சகோ.ஸ்ரனிஸ்லோஸ் அவர்கள் வழங்கினார். இந் நூலுக்கான மதிப்பீட்டுரையை யாழ் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்கலாநிதி ஜோசப் ஜெபரெட்ணம் அடிகளார் வழங்கினார். அருட்கலாநிதி ஜோசப் ஜெபரெட்ணம் அடிகளார் தனது மதிப்பீட்டுரையில் இந் நூலின் தனித்துவத்தையும், புதிய சிந்தனைகளையும், ஆழமான இறையியல் பிற்பிலத்தையும் கேடிட்டுக்காட்டியதோடு, நூலாசிரியரின் விவிலிய இறையியல் புலமையையும் பாராட்டிப் பதிவுசெய்தார். அத்தோடு இந்நூல் இறையியல் கற்கை நெறிக்குக் குறிப்பாக மீட்பின் திட்டத்தில் புனித யோசேப்பின் பங்களிப்பையும், அவரின் பதில் மொழியையும், ஈடுபாட்டையும் நன்கு விளங்கிக்கொள்ள நல்லதொரு நூலாக அமைகின்றது என்றும் சுட்டிக்காட்டினார்.
இவ் வேளையில் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகை அவர்களும் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி நோயல் இம்மானுவேல் ஆண்டகை , மன்னார் மாவட்டச் செயலர் மதிப்புக்குரிய திருமதி ஸ்ரன்லி டிமெல் லெம்பேட்;, வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன், யாழ் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்கலாநிதி ஜோசப் ஜெபரெட்ணம் அடிகளார், மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி பி.கிறிஸ்துநாயகம் அடிகளார், மற்றும் அருட்பணியாளர்கள், சில இறைமக்கள் ஆகியோர் பரசன்னமாகியிருந்தனர். இறுதியில் இந்நூலுக்கான ஏற்புரையையும், நிகழ்விற்கான நன்றியுரையையும் அருட்கலாநிதி அ.கிறிஸ்ரி றூபன் பெனாண்டோ அடிகளார் வழங்கினார்.