ஒவ்வொரு வருடமும் 3ம் ஆண்டு தொடக்கம் 11ம் ஆண்டுவரை கல்விகற்கும் கத்தோலிக்க மாணவர்களுக்கான மறைக்கல்வித் தேர்வு கடந்த 03.11.2018 சனிக்கிழமை நடைபெற்றது. மன்னார் மறைமாவட்டத்தின் அருட்பணி எல்லைக்குள் அடங்கும் மன்னார், வவுனியா மாவட்டங்களிலுள்ள 180 பாடசாலைகளில் உள்ள 14000 மாணவர்கள் இத்; தேர்வை எழுதினர்.
பங்குத்தந்தையர்களின் நேரடிக்கண்காணிப்பில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள்,மறைவாழ்வுக் கல்விப் பணியாளர்களின் ஒத்துழைப்புடன் இத்தேர்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இத் தேர்வின் விடைத்தாள்களைத் திருத்தும் பணி 04.11.2018 ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தொடாந்து நடைபெற்று வருகின்றது. கல்வித் திணைக்கள கத்தோலிக்க சமயபாட ஆசிரிய ஆலோசகர்கள்,கத்தோலிக்க சமய பாட விரிவுரையாளர்கள்,பாடசாலைகளில் கத்தோலிக்க சமய பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள், பங்குகளில் பணியாற்றும் உயர் நிலை மறையாசிரியர்கள் இப்பணியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து கால நேரம் பாராது உதவி செய்து வருகின்றனர்.