ஆட்காட்டிவெளிப் பங்கின் கிளை ஆலயமான சாளம்பன் தூய அடைக்கல அன்னை ஆலய அர்ச்சிப்பும், திறப்பு விழாவும் கடந்த 04.09.2018 புதன் கிழமை மாலை பங்கத் தந்தை அருட்பணி.ச.சத்தியறாஜ் தலைமையில் ஆலய அருட்பணிப் பணிப் பேரவையின் பங்களிப்போடும், ஆலய மக்களின் பங்களிப்போடும் நடைபெற்றது.மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி ப.ல.இம்மானுவேல் பெனாண்டோ அவர்களினால் இவ் ஆலயம் கத்தோலிக்க திரு அவையின் திருவழிபாட்டு திருமரபு ஒழுங்கிற்கொப்ப அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்விற்கு அருட்பணியாளர்கள், துறவிகள், அரச, அரச சார்பற்ற துறைசார் பிரதிநிதிகள் எனப் பலரும் வருகை தந்திருந்தனர்.