நானாட்டான் மண்ணில் தங்களது மூன்றாவது இல்லத்தை

சுமார் 350 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப் பட்ட, அதாவது 1680ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட டிலாசால் அருட்சகோதரா் களின் சபை இலங்கை மண்ணில் 1867ம் ஆண்டு கால் பதித்தது. 1951ம் ஆண்டு மன்னார் மண்ணில் தங்களது சேவையைத் தொடங்கிய இவ் அருட்சகோதரர்கள் 1999ம் ஆண்டு வரை மன்னார் நகரில் மாத்திரம் தங்களது பணியை தொடர்ந்தனர்.ஆனால் காலத்தின் தேவையைக் கருத்திற் கொண்ட இவர்கள் 1999ம் ஆண்டு அடம்பனில் தங்களது பணியை விசாலப்படுத்திக் கொண்டனர். தொடந்து இன்றைய நாளில் (12.02.2018) நானாட்டான் மண்ணில் தங்களது மூன்றாவது இல்லத்தை ஆரம்பித்ததன் வழியாக மன்னார் மறைமாவட்டத்திற்கள் தங்களது பரப்பெல்லையை விசாலப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இன்று 12.02.2018 திங்கட்கிழமை நானாட்டானில் டிலாசால் அரட்சகோதரர்களின் புதிய இல்லம் மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் ஆசீர்வதித்துத் திறந்து வைக்கப்பட்டது. ஆயர் அவர்கள் நமது தமிழ் பண்பாட்டு இசை முழக்கத்தோடும், சாரணர்களின் அணிவகுப்போடும் வரவேற்கப்பட்டார்.

இந் நிகழ்வில் டிலாசால் அருட்சகோதரர்களின் இலங்கைக்கான சபை முதல்வர் அருட்பணி கிறிஸ்ரி குரூஸ் அவர்களும், மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை அவர்களும், மன்னாரில் இவ் அருட்சகோதரர்களின் நிர்வாகத்தில் இயங்கும்; புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் பழைய மாணவர் மேதகு நீதிபதி திருவாளர் பிரபாகரன் அவர்கள், கொழும்பு தூய பெனடிக்ற் கல்லூரியின் பழைய மாணவரும் தற்போதைய மன்னார் இராணுவ 51வது படைப்பிவின் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜி.ஜே.ஏ.டபிள்யு.கலகமகே, மன்னார் பிரதேசச் செயலர் திரு.ம.பரமதாசன், மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. சுகந்தி செபஸ்ரியன், ஓய்வு பெற்ற பிரதேசச் செயலர் திரு.கஸ்மிர் சந்திரையா மற்றும் பெருந்தொகையான குருக்கள் துறவிகள், துறைசார் வல்லுனர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *