மன்னார் மறைசாட்சிகளின் மண்ணில் , கிறிஸ்தவ விசுவாசத்தின் ஆழத்தையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றி நிற்கும் மாந்தை மாதா திருத்தலத்தின் பெருவிழாவைக் சிறப்பாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இம்மாதம் 17ந் திகதி திருவிழாத் திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களின் தலைமையில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படும்.
வரலாற்றச் சிறப்புமிக்க இந்தத் திருத்தலத்தலம் மருதமடுத் திருத்தாயாரின் தொடக்ககால இருப்பிடம் என்பதும், கத்தோலிக்க சமயத்திற்கெதிரான வன்முறையின்போது மடுமாதாவின் அற்புதத் திருவுருவம் மடுத்திருப்பதிக்கு சென்றதென்றும் நமக்கு வரலாற்றுக் குறிப்புக்கள் துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றன.
தற்பொழுது இத் திருத் தலத்திலே ஆயத்த வழிபாடுகள் தினமும் மாலை வேளையில் நடைபெற்று வருகின்றன.