பிப்ரவரி : 02 இயேசுவைக் காணிக்கையாக்கும் விழா

பிப்ரவரி : 02
இயேசுவைக் காணிக்கையாக்கும் விழா
மெழுகுவர்த்தி திருநாள்

 

இந்தத் திருநாள் முதலில் எருசலேம் நகரில் தொடங்கப்பட்டதென கி.பி. 400ம் ஆண்டில் எஜேரியா என்ற ஒரு துறவி (அங்கு திருப்பணியாகச் சென்றவர்) குறிப்பிடுகின்றார். அந்த நகரத்தைக் குறித்து இவ்வாறு எழுதுகிறார். குpறிஸ்து பிறப்பு பெரு விழாவிற்குப் பின் 40 நாள்கள் கழித்து நடைபெறும் இவ்விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஊயிர்த்த ஆண்டவரின் ஆலயத்திற்கு ஒரு மாபெரும் ஊர்வலம் வந்தடைகின்றது. மக்கள் திருவழிபாட்டிற்கு தயாராகிக் கொள்கின்றனர். ஆயர்களும் குருக்களும் எவ்வாறு 40ம் நாள் கன்னித்தாயும் சூசையும் குழந்தையெசுவை காணிக்கையாய் ஒப்புக் கொடுத்தனர் என்ற நற்செய்தி பகுதியை வாசித்து மறையுரை ஆற்றுகின்றனர். இறைவாக்குரைத்த சிமியோனும் அன்னாவும் சொன்ன சொற்களை முன்வைத்து மறையுரையாற்றுகின்றனர். ஆலயத்தில் காணிக்கை செலுத்தி குழந்தையை அர்ப்பணித்து மீண்டும் பெற்றக் கொண்டணர் என்ற நிகழ்ச்சியை விரித்துரைத்து விளக்கம் அளிக்கின்றனர்.
இந்தக் காலத்தில் இத்தகைய தூய்மை பெறும் சடங்கு மறைந்து விட்டது. குழந்தையை பெற்றெடுக்கும் தாய் எந்த வகையிலும் மாசுபடுவதில்லை என்ற புதிய விளக்கமெ இதற்கு காரணம். 526ம் ஆண்டு இந்தத் திருநாள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கொன்ஸ்நாந்துநோபிள் நகரில் மாபெரும் பிளேக் நோய் அடியோடு நீங’கியதற்கு நன்றியறிதலாக முதலாம் ஜஸ்டினீயன் மன்னால் தோற்றவிக்கப்பட்டது.
கிரேக்க திருச்சபையில் இவ்விழா “ஆண்டவரும் அவர் தம் தாயும், சிமியோனையும், அன்னாவையும் சந்தித்த விழா” என்றும் அழைக்கப்படுகிறது. மெழுகுவர்த்தி தருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. “குரு பிடித்திருக்கும் எரிகின்ற திரி உலகின் இருளை நீக்க வந்த உலகின் ஒளியாம் கிறிஸ்துவைக் குறிக்கிறது என்றும், நாம் வைத்திருக்கும் எரிகின்ற திரி, கிறிஸ்துவை வாழ்வின் இறுதியில் எதிர்கொள்ளப் போகும்போது நற்செயல்களின் மூலம் ஒளிமயமாய் இருக்க வேண்டும் என்பதையும் குறிக்கிறது.” என்கிறார் புனித சொப்பரோனியூஸ்.
திருத்தந்தை 2-ம் ஜான்போல் “மீட்பரின் தாய்” என்ற சுற்று மடலில் சிமியோன் கன்னி மரியிடம் அறிவித்ததை ‘மீட்பு வரலாற்றின் 2வது அறிவிப்பு’ என்று குறிப்பிடுகின்றார். முதலில் மங்கள வார்த்தை அறிவிப்பு.
திருத்தந்தை 6-ம் பவுல் என்பவர் ஆண்டவர் ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கபட்ட போது சிமியோன் உரைத்த இறைவாக்கையும் அது கல்வாரி மலையில் நிறைவேறிற்று என்பதையும் இணைத்துக் காட்டுகின்றார். “உலகளாவிய மீட்பின் தன்மையை சிமியோன் முன்னறிவிக்கின்றார். என்பதை திருச்சபை காண்கிறது” எனக் குறிப்பிடுகின்றார். ஏனெனில் சிமியோன் “இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போருக்கு ஒளிதரவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும், இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மை தேடி வருகிறது” என்று கூறுவதன் மூலம் அனைவரின் மீட்பராம் இயேசு என்று அடையாளம் கண்டு கொள்கின்றார்.
அதேவேளை இவரது இறைவாக்கில் கிறிஸ்துவின் பாடுகளுடன் உள்ள தொடர்பையும் திருச்சபை புரிந்து கொள்கிறது. “இதோ, அக் குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும், எழுச்சிக்கும் காரணமாய் இருக்கும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” (லூக் 2, 34, 35). இதன் ஒளியில் புனித பெர்னாந்து உறுதிப்படுத்துகின்றார். “தூய கன்னியே உமது வயிற்றின் கனியை ஆண்டவருக்கு ஒப்புக்கொடும். இறைவனுக்கு உகந்ததாகவுள்ள அந்தப் புனித மிகு பலிப் பொருளை எம் மீட்புக்காக ஒப்புக்கொடும்.”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *