கொக்குப்படையான் புனித யாக்கோப்பு ஆலயத் திறப்பு விழா

மன்னார் மறைமாவட்டத்தின் சிலாவத்துறைப் பங்கு அருட்பணி எல்லைக்குள் இருக்கும் கொக்குப்படையான் கிராமத்தில் புதிதாக ஆலயம் அமைக்கப்பட்டு 2021.08.07 சனிக்கிழமை மாலை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் கத்தோலிக்கத் திரு அவையின் திருவழிபாட்டு திருமரபு ஒழுங்கிற்கமைய ஆசீர்வதித்துத் திறந்து வைக்கப்பட்டது.மன்னார் மறைமாவட்டத்தின் சிலாவத்துறைப் பங்கு அருட்பணி எல்லைக்குள் இருக்கும் கொக்குப்படையான் கிராமத்தில் புதிதாக ஆலயம் அமைக்கப்பட்டு 2021.08.07 சனிக்கிழமை மாலை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் கத்தோலிக்கத் திரு அவையின் திருவழிபாட்டு திருமரபு ஒழுங்கிற்கமைய ஆசீர்வதித்துத் திறந்து வைக்கப்பட்டது.

கத்தோலிக்க மக்கள் செறிந்து வாழும் கொக்குப்படையான் கிராமம் நிண்டகால இறைவிசுவாசப் பாரம்பரியத்தைக் கொண்டதொரு கிராமம். புனித யாக்கோப்பு திருத்தூதரைத் தங்களின் பாதுகாவலராகக் கொண்டு வாழும் இம் மக்கள் மிகவும் அழகிய ஆலயமொன்றினைத் தற்போது இறையருளோடு கட்டி முடித்துள்ளனர். ஏற்கனவே இங்கு இருந்த மிகவும் பழமை வாய்ந்த ஆலயம் உள்நாட்டுப்பேரினால் மிகவும் சேதடைந்திருந்த நிலையிலே புதிய ஆலயம் அக்கிராம மக்களினது முயற்சியினாலும், தியாகத்தினாலும், பங்குத்தந்தையாகப் பணியாற்றிய பங்குத் தந்தையர்களின் ஊக்குவிப்பினாலும், தியாத்தினாலும், ஆயர் அவர்களின் வழிநடாத்தலினாலும் கட்டிமுடிக்கப்பட்டு அருட்பொழிவு செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டுகாலப் பகுதியில் இப் பங்கில் பணியாற்றிய அருட்பணி ச.அன்ரன் தவறாஜா அடிகளாரின் பணிக்காலத்தில் புதிய ஆலயத்திற்கான அடிக்கல் 22.01.2017 முன்னைநாள் குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை அடிகளாரால் இடப்பட்டு தற்போது பணிமாற்றலாகிச் செல்லும் பங்குத்தந்தை அருட்பனி.எ.டெஸ்மன் அஞ்சலோ அடிகளாரின் அயரா உழைப்பினால் இவ் வாலயம் நிறைவாக்கப்பட்ளது. இத் திருநிகழ்வுகள் அனைத்தும் பங்குத்தந்தை அருட்பனி.எ.டெஸ்மன் அஞ்சலோ அடிகளாரின் வழிகாட்டுதலில் இக் கிராம மக்களின் ஒத்துழைப்போடு நடைபெற்றது.

இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களோடு மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி பி;.கிறிஸ்துநாயகம் அடிகளார், அன்பிய இயக்குனர் அருட்பணி ச.சவுல்நாமன் அடிகளார், மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்புகள் அருட்பணி மைய இயக்குனர் அருட்பணி அ.செல்வநாதன் அடிகளார்அரிப்புப் பங்குத் தந்தை அருட்பணி ச.சத்தியறாஜ் அடிகளார், தேன்பிட்டிப் பங்குத் தந்தை அருட்பணி.எ.டெனி கலிஸ்ரஸ் அடிகளார் ஆகியோர் இணைந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *