அமரத்துவமடைந்த மன்னார் மறைமாவட்டத்தின் மூத்த அருட்பணியாளரும் சிறந்ததொரு சமூகநலத் தொண்டருமாகிய அருட்பணியாளர் ஜோ.பெ.தேவறாஜா அடிகளாரின் வித்துடல் இன்று 12.08.2020 காலை மன்னார் ஆயர் இல்லத்திலிருந்து பவனியாக மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்கு எடுத்துவரப்பட்டது.
அமரத்துவமடைந்த மன்னார் மறைமாவட்டத்தின் மூத்த அருட்பணியாளரும் சிறந்ததொரு சமூகநலத் தொண்டருமாகிய அருட்பணியாளர் ஜோ.பெ.தேவறாஜா அடிகளாரின் வித்துடல் இன்று 12.08.2020 காலை மன்னார் ஆயர் இல்லத்திலிருந்து பவனியாக மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்கு எடுத்துவரப்பட்டது.
இன்று காலை மன்னார் ஆயர் இல்லச் சிற்றாலயத்தில் மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி .அ.விக்ரர் சோசை தலைமையில் நடைபெற்ற கூட்டுத் திருப்பலியைத் தொடர்ந்து அருட்பணியாளர் ஜோ.பெ.தேவறாஜா அடிகளாரின் வித்துடல் தாங்கிய பேழையை ஆயர் இல்ல பிரதான நுழை வாயில் வரை மறைமாவட்டக் குருக்கள் எடுத்து வந்தனர். அலங்கரிக்கப்பட்ட ஊர்தியிலே அருட்பணியாளர் ஜோ.பெ.தேவறாஜா அடிகளாரின் வித்துடல் வைக்கப்பட்டு அருட்பணியாளர்கள் பொதுமக்கள் அணிவகுத்துச் செல்ல மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதி வழியாக இப்பவனி புனித செபஸ்தியார் பேராலயத்தை வந்தடைந்தது.
போராலத்திற்கு அண்மையிலே வைத்து பங்குத்தந்தை அருட்பணி.அ.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையிலே பேராலயப் பணியாளர்கள் அருட்பணியாளர் ஜோ.பெ.தேவறாஜா அடிகளாரின் வித்துடல் தாங்கிய பேழையை பேராலத்திற்குள் தூக்கிச் சென்றனர். இப்பொழுது மன்னார் புனித செபஸ்தியார் பேராலயப் பணிக்குழுக்களும் இறைமக்களும் வழிபாடுகளை தொடர்ந்து நடாத்திக் கொண்டிருக்கின்றனர். இன்று மாலை மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களின் தலைமையில் இடம் பெறும் இரங்கல் கூட்டுத் திருப்பலியைத் தொடர்ந்து மன்னார் கத்தோலிக்கக் கல்லறைத் தோட்டத்தின் குருக்கள் துறவியருக்கான பகுதியிலே அருட்பணியாளர் ஜோ.பெ.தேவறாஜா அடிகளாரின் வித்துடல் நல்லடக்கம் செய்யப்படும்.
அருட்பணியாளர் ஜோ.பெ.தேவறாஜா அடிகளார் அண்மையில் தனது 90வது அகவையை நினைவு கூர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.