தனது 90வது வயதில் இறைபதமடைந்த அருட்பணியாளர் ஜோ.பெ.தேவறாஜா அடிகளாரின் இறுதி நல்லடக்க வழிபாடுகள் 12.08.2020 புதன்கிழமை மாலை 03.00 மணிக்கு மன்னார் புனித செபஸ்தியார் ஆலய இயேசுவே ஆண்டவர் வழிபாட்டு மண்டபத்திலே நடைபெற்றது. மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களின் தலைமையில் நடைபெற்ற நல்லடக்கத் திருப்பலியில்
தனது 90வது வயதில் இறைபதமடைந்த அருட்பணியாளர் ஜோ.பெ.தேவறாஜா அடிகளாரின் இறுதி நல்லடக்க வழிபாடுகள் 12.08.2020 புதன்கிழமை மாலை 03.00 மணிக்கு மன்னார் புனித செபஸ்தியார் ஆலய இயேசுவே ஆண்டவர் வழிபாட்டு மண்டபத்திலே நடைபெற்றது. மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களின் தலைமையில் நடைபெற்ற நல்லடக்கத் திருப்பலியில் திருமலை மட்டுநகர் ஓய்வு நிலை மற்றும் முன்னைநாள் மன்னார் மறைமாவட்டத்தின் திருத்தூதுப்பணி நிர்வாகி பேரருட்கலாநிதி ஜோ.கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி .அ.விக்ரர் சோசை யாழ் மறைமாவட்டக்குருமுதல்வர் அருட்பணி. ஜோ.ஜெபரெட்ணம் இலங்கை கரித்தாஸ் தேசிய செயலகத்தின் இயக்குனர் அருட்பணி மகேந்திரா திருவுளப்பணியாளர் அருட்பணியாளர் சபையின் இலங்கைக்கான முதல்வர் அருட்பணி லொ.சாந்திக்குமார் மன்னார் மற்றும் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த நூற்றுக்கும் அதிகமான அருட்பணியார்கள் இரங்கல் கூட்டுத்திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர். துறவிகள் மற்றும் பெருந்தொகையான இறைமக்களும் இந்தத் திருப்பலியில் கலந்து கொண்டனர்.
திருப்பலியின் முடிவில் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியிலே அருட்பணியாளர் ஜோ.பெ.தேவறாஜா அடிகளாரின் வித்துடல் வைக்கப்பட்டு அருட்பணியாளர்கள் பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் அணிவகுத்துச் செல்ல மன்னார் கத்தோலிக்கக் கல்லறைத் தோட்டத்தின் குருக்கள் துறவியருக்கான பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அருட்பணியாளர் ஜோ.பெ.தேவறாஜா அடிகளாரின் வித்துடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.