மடுமாதா திருத்தலத்தின் 2020ம் ஆண்டு ஆடித்திருவிழாவின் வேஸ்பர் மாலைப் புகழ் ஆராதனை இன்று 01.07.2020 புதன்கிழமை மாலை அரசாங்கத்தால் மட்டுப்படுத்தப்பட்ட அளவு மக்கள் தொகையோடு சிறப்பாக நடைபெற்றது.
மடுமாதா திருத்தலத்தின் 2020ம் ஆண்டு ஆடித்திருவிழாவின் வேஸ்பர் மாலைப் புகழ் ஆராதனை இன்று 01.07.2020 புதன்கிழமை மாலை அரசாங்கத்தால் மட்டுப்படுத்தப்பட்ட அளவு மக்கள் தொகையோடு சிறப்பாக நடைபெற்றது. மாலைப் புகழ் ஆராதனையின் நற்கருணை ஆசீரை திருகோணமலை ஆயர் பேரருட்கலாநிதி நோயல் இம்மானுவேல் ஆண்டகை வழங்கினார்.
இன்றைய மாலைப்புகழ் வழிபாட்டின்போது மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் ஆண்டகை மற்றும் குருநாகல் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி கரல்ட் அன்ரனி பெரேரா மற்றும் குருக்கள் துறவிகள் பிரசன்னமாகியிருந்தனர்.
தமிழில் வழிபாடுகளை அருட்பணி. ஸ்ரனி அன்ரனி அ.ம.தி அடிகளாரும் சிங்கள மொழியில் அருட்பணி கித்சிறி அ.ம.தி அடிகளாரும் நடாத்தினார்கள்.