சிலுவையின் அடியில் நம் அனைவரையும்

ன்னை மரியா சிலுவையின் அடியில் நம் அனைவரையும் மற்றும் திரு அவையை யும் பெற்றெடுத்தார், வியாகுல அன்னை பற்றிய பேருண்மை, சிந்திக்கவேண்டியதைவிட  தியானிக்க வேண்டி யதாகும் என்று, இவ்வெள்ளி காலை திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தூய மரியாவின் துயரங்கள் விழா அல்லது புனித வியாகுல அன்னை விழாவான செப்டம்பர் 15, இவ்வெள்ளியன்று, சாந்தா மார்த்தா இல்லத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்விழாத் திருப்பலியின் நற்செய்தியை மையப்படுத்தி சிந்தனைகளை வழங்கினார்.

இயேசு கல்வாரியில் சிலுவையில் உயிர்விடுவதற் குமுன், சிலுவையின் அடியில் நின்ற தம் அன்புச் சீடரைக் கண்டு, தம் தாயிடம், அம்மா இதோ உம் மகன் என்றார். பின் தம் சீடரிடம், இவரே உம் தாய் என்றார் (யோவா.19,25-27).

இந்த நற்செய்திப் பகுதியை மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை,  எதிர்க்கப்படு வதன் அடையாளமாகக் கருதப்பட்ட சிலுவையில் இயேசு வெற்றி கண்டார் என்றும், இயேசுவின் தாயையும், எதிர்க்கப்படுவதன் அடையாளத்தையும் நாம் தியானிக்க வேண்டுமென்றும் கூறினார்.

இந்த எதிர்க்கப்படுதலை நம்மால் புரிந்துகொள்ள முடியாது, இதற்கு விசுவாசம் அவசியம் என்றுரைத்த திருத்தந்தை, மரியா, தம் மகன் இயேசுவை இறுதி வரை பின்தொடர்ந்தார், அதனாலே அவர் இயேசு வின் முதல் சீடர் என அழைக்கப்படுகிறார் என்றும் கூறினார்.

இன்றைய நற்செய்தி தியானிப்பதற்கு நமக்கு அழைப்பு விடுக்கின்றது, இந்த வரத்தை தூய ஆவியார் நமக்குத் தருவாராக என்றுரைத்து, மறையுரையை நிறைவுசெய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *