Let us Pray for the Beatification of Martyrs of Mannar. கிறிஸ்துவுக்காக தம் இன்னுயிர் ஈந்த நம் இறை விசுவாசிகள் மறைசாட்சிகள் என்னும் பேறு பெறச் செபிப்போம்.
The Official Webpage of the Diocese of Mannar மன்னார் மறைமாவட்டத்தின் இணையதளம்.

மருதமடுத் திருத்தாயாரின் ஆவணி திருவிழாவிற்கான ஆயத்த வழிபாடுகள்

இலங்கை வாழ் மக்களால் ஆழமாக அன்பு செய்யப்படுகின்ற மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள மருதமடுத் திருத்தாயாரின் ஆவணி மாதத்(அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா) திருவிழாவிற்கான ஆயத்த வழிபாடுகள் இன்று 06.08.2018 திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின. மேலும் அறிய மருதமடுத் திருத்தாயாரின் ஆவணி திருவிழாவிற்கான ஆயத்த வழிபாடுகள்

பெரியகட்டு தூய அந்தோனியார் திருவிழா

செட்டிகுளம் பங்கின் அருட்பணி எல்லைக்குள் அமைந்துள்ள பெரியகட்டு தூய அந்தோனியார் திருவிழா இன்று 05.08.2018 ஞாயிற்றுக் கிழமை காலையில் நடைபெற்றது. முதன் முதலாக இத்திருத்தலத்திற்கு அருட்பணிக்காக வருகை தந்த மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ அவர்களை: அருட்பணியாளர்கள், துறவிகள், இறைமக்கள் பாரம்பரிய முறையில் வரவேற்றதோடு, ஆயர் அவர்கள் பாடசாலை மாணவர்களின் மேலைநாட்டு இசைக்கருவிகளின் மகிழ்வொலியோடு அழைத்து வரப்பட்டார். இதன் பின் திருப்பலி ஆரம்பமாகியது. மேலும் அறிய பெரியகட்டு தூய அந்தோனியார் திருவிழா

நிலையான அர்ப்பணத் திருப்பொழிவு.

மன்னார் மறைமாவட்டத்தின் முருங்கன் பங்கைச் சேர்ந்த திரு, திருமதி மிக்கேல் பிலிப் ,சுசீலா பேணடேற் ஆகியோரின் மகன் அருட்சகோதரர் பேணாட் ஷா பிரான்சிஸ்கன் சிறிய துறவற சபையில் இணைந்து தனது முதல் அர்ப்பணத்தை 24.05.2014 அன்று எடுத்துக் கொண்டார். அதன் பின் ஆழ் நிலைப் பயிற்சியின்பின் இன்று 02.08.2018 வியாழக்கிழமை தனது நிலையான அர்ப்;பணத்தை எடுத்துக் கொண்டார். மேலும் அறிய நிலையான அர்ப்பணத் திருப்பொழிவு.

மன்னார் மறைமாவட்டத்தின் 45வது

மன்னார் மறைமாவட்டத்தின் 45வது பங்கு இன்று 11.07.2018 புதன் கிழமை உதயமாகியுள்ளது. இது வரை காலமும் சிலாவத்துறைப் பங்கின் அருட்பணி எல்லைக்குள் உள்ளடக்கப்பட்டிருந்த முள்ளிக்குளம், காயாக்குளி, மன்னார் புத்தளம் எல்லையில் அமைந்துள்ள பூக்குளம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாக முள்ளிக்குளம் தூய பரலோக மாதா பங்கு உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் அறிய மன்னார் மறைமாவட்டத்தின் 45வது

மன்னார் மறைமாவட்டத்தின் 44வது பங்காகாக

ன்னார் மறை மாவட்டத்தின் 44வது பங்காகாக மடுறோட் தூய சிந்தாத்திரை மாதா ஆலயப் பங்கு இன்று (08.07.2018) ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் மன்னார் ஆயராகப் பெறுப்பேற்றதின் பின்னார் முதன் முதலாக உருவாக்கப்பட்ட பங்கு இதுவாகும். மேலும் அறிய மன்னார் மறைமாவட்டத்தின் 44வது பங்காகாக

பள்ளகண்டல் தூய அந்தோனியார் திருத்தல விழா

சிலாபம் மறைமாவட்டத்தின் அருட்ப்பணிப் பரப்பெல்லைககுள் அமைந்துள்ள வில்பத்து வனவிலங்கு பாதுகாப்பிடக் காட்டின் நடுவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளகண்டல் தூய அந்தோனியார் திருத்தல விழா இன்று (08.07.2018) ஞாயிற்றுக்கிழமை காலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மேலும் அறிய பள்ளகண்டல் தூய அந்தோனியார் திருத்தல விழா

மருதமடுமாதா திருத்தலத் திருவிழா இன்று

வேதசாட்சிகளின் நிலமாம் மன்னார் மண்ணின் ஆன்மிக வரலாற்றுச் சிறப்பு மிக்க மருதமடுமாதா திருத்தலத் திருவிழா இன்று 02.07.2018 திங்கட்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மேலும் அறிய மருதமடுமாதா திருத்தலத் திருவிழா இன்று