Category Archives: எமது மறைமாவட்ட செய்திகள்

ஜோ.பெ.தேவறாஜா அடிகளாரின் இறுதி நல்லடக்க வழிபாடுகள்

தனது 90வது வயதில் இறைபதமடைந்த அருட்பணியாளர் ஜோ.பெ.தேவறாஜா அடிகளாரின் இறுதி நல்லடக்க வழிபாடுகள் 12.08.2020 புதன்கிழமை மாலை 03.00 மணிக்கு மன்னார் புனித செபஸ்தியார் ஆலய இயேசுவே ஆண்டவர் வழிபாட்டு மண்டபத்திலே நடைபெற்றது. மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களின் தலைமையில் நடைபெற்ற நல்லடக்கத் திருப்பலியில் மேலும் அறிய ஜோ.பெ.தேவறாஜா அடிகளாரின் இறுதி நல்லடக்க வழிபாடுகள்

அருட்பணியாளர் ஜோ.பெ.தேவறாஜா அடிகளாரின் வித்துடல் இன்று

அமரத்துவமடைந்த மன்னார் மறைமாவட்டத்தின் மூத்த அருட்பணியாளரும் சிறந்ததொரு சமூகநலத் தொண்டருமாகிய அருட்பணியாளர் ஜோ.பெ.தேவறாஜா அடிகளாரின் வித்துடல் இன்று 12.08.2020 காலை மன்னார் ஆயர் இல்லத்திலிருந்து  பவனியாக மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்கு எடுத்துவரப்பட்டது. மேலும் அறிய அருட்பணியாளர் ஜோ.பெ.தேவறாஜா அடிகளாரின் வித்துடல் இன்று

வஞ்சியன்குளம் புனித பேதுருவானவர் ஆலயம் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க மக்களின் இறைநம்பிக்கையின் மற்றுமொரு பரிமாணமாக வஞ்சியன்குளம் புனித பேதுருவானவர் ஆலயம் புதிதாகக் கட்டப்பட்டு 01.08.2020 சனிக்கிழமை காலை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் கத்தோலிக்க திரு அவையின் திருவழிபாட்டு திருமரபின் வழிகாட்டுதல்களுக்கமைவாக அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. மேலும் அறிய வஞ்சியன்குளம் புனித பேதுருவானவர் ஆலயம் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

பணிக்குருக்களாக இன்று 30.07.2020

மருதமடுத் திருத்தாயாரின் பரிந்துரையோடும், அருட்துணையோடும்; ஆன்மிக வளம் செழித்து வளரும் மன்னார் மறைமாவட்டக் கத்தோலிக்க திருஅவையிலிருந்து எட்டுத் தியாக்கோன்கள், மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் பணிக்குருக்களாக இன்று 30.07.2020 வியாழக்கிழமை மேலும் அறிய பணிக்குருக்களாக இன்று 30.07.2020

மடுமாதா திருத்தல ஆடித்திருவிழாவின் வேஸ்பர்

மடுமாதா திருத்தலத்தின் 2020ம் ஆண்டு ஆடித்திருவிழாவின் வேஸ்பர் மாலைப் புகழ் ஆராதனை இன்று 01.07.2020 புதன்கிழமை மாலை அரசாங்கத்தால் மட்டுப்படுத்தப்பட்ட அளவு மக்கள் தொகையோடு சிறப்பாக நடைபெற்றது. மேலும் அறிய மடுமாதா திருத்தல ஆடித்திருவிழாவின் வேஸ்பர்

மடுமாதா திருத்தலத்தில் 2020ம் ஆண்டு ஆடி 02ந்திகதித் திருவிழாவுக்கான

மன்னார் மடுமாதா திருத்தலத்தில் 2020ம் ஆண்டு ஆடி 02ந்திகதித் திருவிழாவுக்கான இரண்டாவது திட்டமிடல் கூட்டம் இன்று 25.06.2020 வெள்ளிக்கிழமை காலை மடுமாதா திருத்தலத்தின் புனித யோசேவ்வாஸ் ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது. இவ் ஒன்று கூடல் கூட்டத்திற்கு முன்னர்: தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரங்கள் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் 2019ம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ் மேலும் அறிய மடுமாதா திருத்தலத்தில் 2020ம் ஆண்டு ஆடி 02ந்திகதித் திருவிழாவுக்கான

அருட்பணி ஜோசவ் பெனடிக்ற் தேவறாஜா அடிகளார் தனது 90வது அகவையில்

மன்னார் மறைமாவட்டத்தின் மூத்த அருட்பணியாளரான அருட்பணி ஜோசவ் பெனடிக்ற் தேவறாஜா அடிகளார் தனது 90வது அகவையை 16.06.2020 அன்று நினைவு கூர்ந்தார். அதனை முன்னிட்டு இன்று 25.07.2020 வியாழக்கிழமை அருட்பணி ஜே.பி.தேவறாஜா அடிகளுக்கான பிறந்தநாள் மதிப்பளிப்பு நிகழ்வு மன்னாரில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்கள் குழாம் இந் நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருந்தது. மேலும் அறிய அருட்பணி ஜோசவ் பெனடிக்ற் தேவறாஜா அடிகளார் தனது 90வது அகவையில்

75வது அகவையை ஆன்மிக நன்றியுணர்வோடு நினைவு கூர்ந்தார்.

யாழ் மாகாண அமலமரித் தியாகிகள் துறவற சபையின் அருட்பணியாளரும் மன்னார் மறைமாவட்டத்தில் நீண்டகாலமாகப் பணியாற்றுபவருமான அருட்பணி.அல்பன் இராஜசிங்கம் அ.ம.தி அடிகளார் 22.07.2020 திங்கட்கிழமை இறைவன் கொடுத்த தனது 75வது அகவையை ஆன்மிக நன்றியுணர்வோடு நினைவு கூர்ந்தார். மேலும் அறிய 75வது அகவையை ஆன்மிக நன்றியுணர்வோடு நினைவு கூர்ந்தார்.

புனித எண்ணெய் அச்ச்சிக்கும் திருவழிபாட்டுத் திருப்பலி

நம் ஆண்டவார் இயேசுவின் திரு இருதயப் பெருவிழாவைக் கொண்டாடும் இன்று (19.07.2020 வெள்ளிக்கிழமை )  காலை மன்னார் மறைமாவட்டத்தின் தலைமை ஆலயமான மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் திருவருட்சாதனங்களை அச்சிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் புனித எண்ணெய் அச்ச்சிக்கும் திருவழிபாட்டுத் திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. மேலும் அறிய புனித எண்ணெய் அச்ச்சிக்கும் திருவழிபாட்டுத் திருப்பலி

நோயிலிருந்து அனைத்து மக்களும் பாதுகாப்புப் பெற சிறப்புத் திருப்பலி

உலகமெங்கும் வேகமாகப் பரவிப் பல உயிர்களை அள்ளிச் சென்று கொண்டிருக்கும் கொரோணா என்னும் கொள்ளை நோயிலிருந்து அனைத்து மக்களும் பாதுகாப்புப் பெறவும், இந்தக்  கொள்ளை நோய் உலகிலிருந்த அகலவும் இறையருள் வேண்டி மன்னார் தோட்ட வெளியில் அமைந்துள்ள மறைசாட்சியரின் அரசி அன்னை மரியாவின் திருத்தலத்தில் நேற்றைய தினம் 26.04.2020 ஞாயிற்றுக் கிழமை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. மேலும் அறிய நோயிலிருந்து அனைத்து மக்களும் பாதுகாப்புப் பெற சிறப்புத் திருப்பலி