மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க மக்களின் இறைநம்பிக்கையின் மற்றுமொரு பரிமாணமாக வஞ்சியன்குளம் புனித பேதுருவானவர் ஆலயம் புதிதாகக் கட்டப்பட்டு 01.08.2020 சனிக்கிழமை காலை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் கத்தோலிக்க திரு அவையின் திருவழிபாட்டு திருமரபின் வழிகாட்டுதல்களுக்கமைவாக அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க மக்களின் இறைநம்பிக்கையின் மற்றுமொரு பரிமாணமாக வஞ்சியன்குளம் புனித பேதுருவானவர் ஆலயம் புதிதாகக் கட்டப்பட்டு 01.08.2020 சனிக்கிழமை காலை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் கத்தோலிக்க திரு அவையின் திருவழிபாட்டு திருமரபின் வழிகாட்டுதல்களுக்கமைவாக அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.
16ம் நூற்றாண்டின் பதிவுகளோடு நீண்டகால கத்தோலிக்க நம்பிக்கையின் விழுதுகளை ஆழப்பதித்து வேருன்றியுள்ள வஞ்சியன்குளம் புனித பேதுருவானவர் ஆலயப் பங்கு முன்னர் நீண்ட காலம் வங்காலைப் பங்கின் கிளை ஆலயமாகவும் சிறிது காலம் நானாட்டான் பங்கின் கிளை ஆலயமாகவும் இருந்து வந்தது. ஓய்வு நிலை ஆயர் பேரருட்கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் திருப்பணிக்காலத்தில் இது புதிய பங்காக அறிவிப்புச் செய்யப்பட்டது.
அதன் பின்னர் ஏற்கனவே இருந்து வந்த மிகவும் தொன்மை வாய்ந்த ஆலயம் இடவசதி இன்றியும் திருத்த வேலைகளையும் வேண்டி நின்றதனைக் கருத்திற் கொண்டு புதிய ஆலயம் கட்டப்படவேண்டுமென்ற எண்ணம் பலரிடமும் தோன்றியது. அதனால் 2004ம் ஆண்டு அப் பங்கின் முதல் பங்குத் தந்தையாக நியமனம் பெற்ற அருட்பணி.க.அருள்பிரகாசம் அடிகளாரின் காலத்தில் ஓய்வு நிலை ஆயர் பேரருட்கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் பணிப்புரையின் பேரில் இவ்வாலய மக்களின் ஒத்துழைப்போடு புதிய ஆலயத்தை உருவாக்கும் பணி தொடங்கப்பட்டது.
தொடர்ந்து அப் பங்கின் பொறுப்பை பல்வேறு காலங்களில் ஏற்றுக் கொண்ட அருட்பணி.எ.டெனி கலிஸ்ரஸ் அடிகளார் அருட்பணி. க.அருள்றாஜ் குரூஸ் அடிகளார் அருட்பணி.ச.மரியதாஸ் லீயோன் அடிகளார் அருட்பணி அல்பன் இராஜசிங்கம் அமதி அடிகளார் அருட்பணி லோ.ஞானாதிக்கம் அடிகளார் அருட்பணி.யூட் ஞானறாஜ் குரூஸ் (நேரு) அடிகளார் அருட்பணி ப.ஜோண் ஸ்ரனின் சோசை ( சாந்தன்) அடிகளார் ஆகியோரின் அயரா உழைப்போடும் தற்போதைய மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களின் வழிகாட்டுதலோடும் ஆலய மற்றும் பங்குமக்களின் ஒத்துழைப்போடும் இப் புதிய ஆலயம் மிக அழகிய ஆலயமாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இப் பங்கிலிருந்து இரண்டு அருட்பணியாளர்களும் ஒன்பது அருட்சகோதரிகளும் திரு அவையில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். தற்போதைய பங்குத் தந்தை அருட்பணி ப.ஜோண் ஸ்ரனின் சோசை ( சாந்தன்) அவர்களின் நெறிப்படுத்துதலோடு ஆலய மற்றும் பங்குமக்கள் ஒன்றிணைந்து இந் நிகழ்வை சிறப்புற ஒழுங்கமைத்து நடாத்தினார்கள்.