நம் ஆண்டவார் இயேசுவின் திரு இருதயப் பெருவிழாவைக் கொண்டாடும் இன்று (19.07.2020 வெள்ளிக்கிழமை ) காலை மன்னார் மறைமாவட்டத்தின் தலைமை ஆலயமான மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் திருவருட்சாதனங்களை அச்சிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் புனித எண்ணெய் அச்ச்சிக்கும் திருவழிபாட்டுத் திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் தூய வாரத்தின் திங்கட்கிழமையன்று திருவருட்சாதனங்களை அச்சிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் புனித எண்ணெய் அச்ச்சிக்கும் திருவழிபாட்டுத் திருப்பலி நடைபெறுவதுண்டு. ஆனால் இவ்வாண்டு கொரேணாத் தொற்று நோயின் காரணமாக உருவாக்கப்பட்ட முடக்கநிலையினாலும், மற்றும் காரணங்களாலும் இத் திருப்பலி நடைபெறவில்லை. எனவே இன்று 19.07.2020 வெள்ளிக்கிழமை இயேசுவின் திரு இருதயப் பெருவிழாவைக் கொண்டாடும் வேளையில் அருட்பணியாளர்கள் இயேசுவின் திரு இருதயத்திற்கு தம்மை அர்ப்பணிக்கும் நாளாகவும் இருப்பதால் இந் நாள் அதற்குப் பொருத்தமான நாளாகத் தெரிவு செய்யப்பட்டு இத் திரு நிகழ்வு இடம் பெற்றது.
இத் திரு நிகழ்வில் மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றும் அருட்பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆயரோடு இணைந்து கூட்டுத் திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர். நாட்டின் சமகால சட்டதிட்டங்களைக் கவனத்திற்கொண்டு ஆலய, மற்றும் திருவழிபாட்டுப் பணியாளர்கள் தவிர்ந்த இறைமக்கள் எவரும் இத்திருப்பலியில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.