Category Archives: வத்திக்கான் திரு அவைச் செய்திகள்

மறைபரப்புப்பணி மாதத்தில் திருத்தந்தையின் ருவிற்றர் செய்தி

இந்த மறைபரப்புப்பணி மாதத்தில், நீங்கள் இருக்கும் இடத்தில், நீங்களாகவே இருந்துகொண்டு, உங்களை சுற்றியிருப்போருக்கு உங்களை வழங்கவேண்டும் என இறைவன் அழைப்பு விடுக்கிறார். கடவுள் உங்களிடமிருந்து அதிகம் அதிகமாக எதிர்பார்க்கிறார்’ மேலும் அறிய மறைபரப்புப்பணி மாதத்தில் திருத்தந்தையின் ருவிற்றர் செய்தி

னது 22வது வெளிநாட்டுத் திருத்தூதுப்பயணத்தை நிறைவு செய்துள்ளார்

நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது 22வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை சிலி, பெரு ஆகிய நாடுகளுக்கு அண்மையில் மேற்கொண்ட அருட்பணிச் சந்திப்போடு நிறைவு செய்துள்ளார். 2013ம் ஆண்டு மாசி மாதம்  19ம் திகதி, கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பணியை ஏற்றுக்கொண்டார். அதன் பின் தனது முதல் அருட்பணிப் பயணமாக 2013ம் ஆண்டு ஆனி மாதம் 22ந் திகதி தொடக்கம் 29ம் திகதி வரை பிரேசில் நாட்டில் நடைபெற்ற 28வது உலக இளையோர் தின நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

மேலும் அறிய னது 22வது வெளிநாட்டுத் திருத்தூதுப்பயணத்தை நிறைவு செய்துள்ளார்

கோலாலம்பூரில் திருப்பீடத்திற்கான தூதரகம்

இம்மாதம் 23ந் திகதி மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் திருப்பீடத்திற்கான தூதரகம் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடவுள் தரும் நற்செய்தியையும் நல்லொழுக்க வாழ்க்கைப் பண்புகளையும் உலகெங்கும் விதைக்கவே திருப்பீடத்திற்கான தூதரகங்கள் அமைக்கப்படுகின்றன என்று  பேராயர் அஞ்சலோ பெக்சியூ அவர்கள் தெரிவித்தார்.

மேலும் அறிய கோலாலம்பூரில் திருப்பீடத்திற்கான தூதரகம்

திருப்பீடச் செய்திகள்

2015, 2016ம் ஆண்டுகளில் சிறப்பிக்கப்பட்ட இரக்கத்தின் யூபிலி ஆண்டின் ஒரு முக்கிய நிகழ்வாக, சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களோடு உரோம் நகரில் யூபிலியை சிறப்பித்த திருத்தந்தையின் எண்ணத்தில் உருவான, வறியோரின் உலக நாள், முதன்முதலாக இவ் ஆண்டு சிறப்பிக்கப்படுகின்றது. இம்மாதம் 19ந் திகதி ஆண்டின் பொதுக்காலம் 33ம் ஞாயிறன்று இந் நாளைக் கடைப்பிடிக்கும் படி திருத்தந்தை கேட்டுள்ளார். இந் நாழுக்குரிய கருப்பொருளாக “வார்த்தைகளால் அல்ல, செயல்களால் நாம் அன்புகூருவோம்” என்பதனையும் திருத் தந்தை முன்வைத்துள்ளார்.

மேலும் அறிய திருப்பீடச் செய்திகள்

இரு புதிய தபால் தலைகள் வெளியீடு

புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் அவர்கள் பிறந்ததன் 450ம் ஆண்டையும், மார்ட்டின் லூத்தர் அவர்களால் உருவாக்கப்பட்ட சீர்திருத்தத்தின் 500ம் ஆண்டு நிறைவையும் சிறப்பிக்கும் வகையில் நவம்பர் 23ம் திகதி, வத்திக்கான் தபால் துறை, இரு புதிய தபால் வில்லைகளை வெளியிடும் என்று, வத்திக்கான் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளதது.

மேலும் அறிய இரு புதிய தபால் தலைகள் வெளியீடு