இத்தாலி பலெர்மோ தமிழர் ஆன்மீகப்பணியகத்தின் சன் நிக்கொலா ஆலயத்தில் 30.09.2018 அன்று 35 இளையோருக்கு மன்னார் ஆயர் மேதகு இம்மனுவேல் பெர்னாந்துவினால் உறுதிப்பூசுதல் திருவருட்சாதனம் வழங்கப்பட்டது. மேலும் அறிய இத்தாலி பலெர்மோவில் மன்னார் ஆயர்…
Category Archives: ஏனைய மறைமாவட்டச் செய்திகள்
பள்ளகண்டல் தூய அந்தோனியார் திருத்தல விழா
சிலாபம் மறைமாவட்டத்தின் அருட்ப்பணிப் பரப்பெல்லைககுள் அமைந்துள்ள வில்பத்து வனவிலங்கு பாதுகாப்பிடக் காட்டின் நடுவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளகண்டல் தூய அந்தோனியார் திருத்தல விழா இன்று (08.07.2018) ஞாயிற்றுக்கிழமை காலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மேலும் அறிய பள்ளகண்டல் தூய அந்தோனியார் திருத்தல விழா
மயுட்கோரி செய்தி.
முன்னாள் யூகோஸ்லாவியாவின் ஆழுகைக்குள் இருந்து தற்போது தனிநாடாக உருவாகியிருக்கும் பொஸ்னியா நாட்டின் மயுட்கோரி என்னும் இடத்தில் 1981 ஆனிமாதம் 24ம் திகதி தொடக்கம் இன்று அன்னை மரியாத ஒவ்வொரு மாதமும் ஒரு குடும்பப் பெண்ணுக்கு காட்சி கொடுத்து செய்திகளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். அந்த வகையில் இம்மாதம் 02ம் திகதி அன்னை மரியா மிர்ஜானா என்பவருக்கு கொடுத்த செய்தி.
ஆன்மிக இயக்குனர்களுக்கான தியானமும் ஒன்றுகூடலும்
ஜரோப்பிய மண்ணில் , புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழ்க் கத்தோலிக்க மக்களுக்கு ஆன்மிகப் பணியாற்றி வரும்ஆன்மிக இயக்குனர்களுக்கான மூன்றாவது தியானமும் ஒன்றுகூடலும் ஜேர்மன் நாடடின் எசன் நகரில் நடைபெற்று வருகின்றது. அங்கு நடைபெறும் தியானத்தின் சில பதிவுகள்.
ஆன்மிக இயக்குனர்களுக்கான ஒன்று கூடல்
ஜரோப்பிய நாடுகளில், தமிழ்க் கத்தோலிக்க மக்களுக்குப் பணிபுரியும் தமிழ் கத்தோலிக்க ஆன்மிக இயக்குனர்களுக்கான ஒன்று கூடல் இன்று ( 13.11.2017) திங்கட்கிழமை ஜேர்மன் நாட்டின் எசன் நகரிலுள்ள கார்டினல் கென்ஸ்பாக் என்னும் இடத்தில், ஜரோப்பிய நேரப்படி 19.00மணிக்கு ஆரம்பமாகின்றது. ஜரோப்பாவில் தமிழ் கத்தோலிக்க மக்களுக்கான ஆன்மிகப் பணிகளை முன்னெடுத்துச் செல்லும் அருட்பணியாளர்களின் ஆன்மிகத்தை வலுப்படுத்தவும், மக்களுக்கான ஆன்மிகப் பணியிலே ஒரேவிதமான பணி நலன்களை நடைமுறைப்படுத்தவும் திட்டங்களை வகுக்கவும் இவ் ஒன்றுகூடல் ஒழுங்கு செய்யப்படுகின்றது.