25ஆம் வாரம் – செவ்வாய்

முதல் வாசகம்

இறைவனின் கோவிலைக் கட்டி முடித்து பாஸ்கா விழாக் கொண்டாடுங்கள்.

எஸ்ரா நூலிலிருந்து வாசகம் 6: 7-8, 12b, 14-20

கடவுளின் கோவிலைக் கட்டும் பணியைத் தடை செய்யா திருங்கள். யூதர்களின் ஆளுநரும், யூதர்களின் மூப்பர் களும் கடவுளின் கோவிலை, அது முன்பு இருந்த இடத் தில், மீண்டும் எழுப்பட்டும். யூதர்களின் மூப்பர் கடவுளின் கோவிலைக் கட்டுவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண் டும் என்பது பற்றி ஆணை பிறப்பிக்கிறேன். அவர்கள் வேலை தடைப்படாதபடி, அதற்கான முழுச் செலவைப் பேராற்றின் அக்கரைப் பகுதியிலிருந்து வரும் வரியாகிய அரச வருவாயினின்று கொடுக்க வேண்டும். தாரியு என்னும் நானே இக்கட்டளையைப் பிறப்பித்தேன். இது சரிவர நிறைவேற்றப்படட்டும்.

இறைவாக்கினர் ஆகாயும் இத்தோவின் மகன் செக்கரி யாவும் இறைவாக்கு உரைத்ததன் விளைவாக யூத மூப் பர்கள் கோவிலைக் கட்டினர்; வேலையும் முன்னேறிக் கொண்டிருந்தது. இஸ்ரயேலின் கடவுளது ஆணையா லும், பாரசீக மன்னர்களான சைரசு, தாரியு, அர்த்தக் சஸ்தா ஆகியோரின் கட்டளையாலும் அவர்கள் கட்டடப் பணியை முடித்தனர். மன்னர் தாரியு ஆட்சியின் ஆறாம் ஆண்டிலே, அதார் திங்கள் மூன்றாம் நாளிலே, கோவில் வேலை நிறைவுற்றது.

இஸ்ரயேல் மக்கள், குருக்கள், லேவியர், அடிமைத் தனத்திலிருந்து திரும்பி வந்த ஏனையோர், கடவுளின் கோவில் அர்ப்பண விழாவை அக்களிப்புடன் கொண்டாடினார்கள்.

கடவுளின் கோவில் அர்ப்பண விழாவில் நூறு காளை களையும், இருநூறு செம்மறிக் கிடாய்களையும், நானூறு செம்மறிக் குட்டிகளையும் ஒப்புக்கொடுத்தார்கள்; இஸ்ரயேல் குலக் கணக்கின்படி, பன்னிரண்டு வெள்ளாட் டுக் கிடாய்களை இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பாவம் போக்கும் பலியாகச் செலுத்தினார்கள்.

மோசேயின் நூலில் எழுதியுள்ளபடி, எருசலேமில் கடவு ளின் பணிக்காகக் குருக்களை அவர்களின் பிரிவின்படி யும் லேவியரை அவர்களின் துறைகளின்படியும் அவர் கள் நியமித்தனர். மேலும் அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்த மக்கள் பாஸ்கா விழாவை முதல் மாதத் தின் பதினான்காம் நாள் கொண்டாடினர்.

குருக்களும் லேவியரும் ஒன்றிணைந்து தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டனர். அவர்கள் தூய்மையா னார்கள். அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்திருந்த எல்லா மக்களுக்காகவும், சகோதரக் குருக்களுக்காகவும், தங்களுக்காகவும் அவர்கள் பாஸ்கா ஆட்டுக்குட்டியைக் கொன்றனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 122: 1-2. 3-4ய. 4b-5 (பல்லவி: 1)

பல்லவி: மகிழ்வுடன் ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.

1 “ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்”, என்ற அழை ப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். 2 எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். பல்லவி

3 எருசலேம் செம்மையாக ஒன்றிணைத்துக் கட்டப்பட்ட நகர் ஆகும். ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர். பல்லவி

4b இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல் வார்கள். 5 அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின் றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 11: 28

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிற வர்களே, என் தாயும் சகோதரர்களும் ஆவார்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 19-21

அக்காலத்தில் இயேசுவின் தாயும் சகோதரர்களும் இயேசுவிடம் வந்தார்கள். ஆனால் மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுக முடியவில்லை.

“உம் தாயும் சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்” என்று அவருக்கு அறிவித்தார்கள்.

அவர் அவர்களைப் பார்த்து, “இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்” என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.