
மூவொரு இறைவன் பெருவிழா. 2026
2026.05.31
முன்னுரை.
கடவுளாகிய ஆண்டவரேஇ நீர் வாழ்த்தப் பெறுவீராக. மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர் வாழ்த்துக்குரியது.
அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இரக்கமும் பரிவும் உள்ளவரும்இ சினம் கொள்ளத் தயங்குபவரும், பேரன்பு மிக்கவருமான நம் இறைத்தந்தையின் திருப்பெயரால் நல் வாழ்த்துக்கள் கூறி இத் திருப்பலிக் கொண்டாட்டத் திற்கு உங்களை அன்போடு வரவேற் கின்றோம். இன்று நாம் மூவொரு இறைவனின் பெருவிழாத் திருப் பலியைக் கொண்டாடு கின்றோம். மூவொரு கடவுளின் பிரசன்னம்: ஒற்றுமைக்கும், உறவுக்கும், ஒருமைப் பாட்டிற்கும், ஒரு முன்னுதாரண மாக இருக்கின்றது.
இறைவன் தான் எப்படியான தந்தை என்பதை. அதாவது: ‘ஆண்டவர் இரக்கமும் பரிவும் உள்ள இறைவன். சினம் கொள்ளத் தயங்குபவர். பேரன்பு மிக்கவர். நம்பிக்கைக்குரியவர் எனஇ மோசே வழியாக வெளிப்படுத்துவதை இன்றைய முதலாவது இறைவார்த்தையும்இ மகிழ்ச்சியாயிருங்கள். உங்கள் நடத்தையைச் சீர்ப்படுத்துங்கள். என் அறிவுரைக்குச் செவிசாயுங்கள். மன ஒற்றுமை கொண்டிருங்கள். அமைதியுடன் வாழுங்கள். அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்இ எனத் தூய பவுலடியார் அறிவுறுத்துவதை இன்றைய இரண்டாம் இறைவார்த்தையும் நமக்கு எடுத்துரைக் கின்றன.
எனவே நாம் கடவுளின் ஆவியால் இயக்கப்படுப வர்களாய் இருந்துஇ இந்த இறைவார்த்தைகள் வழியாக நமக்கு வெளிப்படுத்தப்படும் இறைவனின் விருப் பத்தை நாம் கண்டுணர்ந்து நிறைவேற்றவும், நாமனைவரும் மூவெரு கடவுளைப்போல ஒன்றிணை ந்த வாழ்வு வாழவும் வல்லமையை இத் திருப்பலியில் கேட்டுச் செபிப்போம்
முதல் வாசகம்.
இரக்கமும் பரிவும் உள்ளவர் இறைவன்.
விடுதலைப் பயண நூலிருந்து வாசகம்.34:4-6, 8-9
அந்நாள்களில்
ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்டபடி மோசே அதிகாலையில் எழுந்து சீனாய் மலைமேல் ஏறிச்சென்றார். தம் கையில் இரு கற்பலகைகளையும் கொண்டு போனார்.
ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து, அங்கே அவர் பக்கமாய் நின்று கொண்டு, ஆண்டவர் என்ற பெயரை அறிவித்தார். அப்போது ஆண்டவர் அவர் முன்னிலையில் கடந்து செல்கையில், ‘ஆண்டவர்! ஆண்டவர்! இரக்கமும் பரிவும் உள்ள இறைவன். சினம் கொள்ளத் தயங்குபவர். பேரன்புமிக்கவர். நம்பிக்கைக் குரியவர் என அறிவித்தார். உடனே மோசே விரைந்து தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, ‘என் தலைவரே! நான் உண்மையிலேயே உம் பார்வையில் தயை பெற்றவன் என்றால், இவர்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள் எனினும், என் தலைவரே! நீர் எங்களோடு வந் தருளும். எங்கள் கொடுமையையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து எங்களை உம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளும்” என்றார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப்பாடல். தானி (இ). 1: 29-33
பல்லவி : என்றென்றும் நீர் புகழப்பெறவும் ஏத்திப் போற்றப்பெறவும் தகுதியுள்ளவர்.
எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரேஇ நீர் வாழ்த்தப் பெறுவீராக. மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர் வாழ்த்துக்குரியது. பல்லவி ::
உமது தூய மாட்சிவிளங்கும் கோவிலில் நீர் வாழ்த்தப்பெறுவீராக. உயர் புகழ்ச்சிக்கும் மிகு மாட்சிக்கும் நீர் உரியவர். கெருபுகள்மேல் வீற்றிருந்து படுகுழியை நோக்குபவரேஇ நீர் வாழ் த்தப் பெறுவீராக. பல்லவி :
உமது ஆட்சிக்குரிய அரியணைமீது நீர் வாழ்த்தப் பெறுவீராக. உயர் வானகத்தில் நீர் வாழ் த்தப் பெறுவீராக. பல்லவி :
இரண்டாம் வாசகம்.
இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம்; திருமுகத்திலிருந்து வாசகம். 13:11-13
சகோதரர் சகோதரிகளே.
இறுதியாக நான் உங்களுக்குச் சொல்வது: மகிழ்ச்சியா யிருங்கள். உங்கள் நடத்தையைச் சீர்ப்படுத்துங்கள். என் அறிவுரைக்குச் செவி சாயுங்கள். மன ஒற்றுமை கொண்டிருங்கள். அமைதியுடன் வாழுங்கள். அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்.
தூயமுத்தம் கொடுத்து ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள். இங்குள்ள இறைமக்கள் அனைவரும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வசனம். திவெ.1:8
அல்லேலூயா, அல்லேலூயா!
இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவருமான கடவுள்இ தந்தைஇ மகன், தூய ஆவியாருக்கு மகிமை உண்டாகுக. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்.
உலகை மீட்கவே கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பினார்.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம். 3:16-18
அக்காலத்தில்
இயேசு நிக்கதேமுவிடம் கூறியது: தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழி யாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்லஇ தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை. ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பி க்கை கொள்ளவில்லை.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
நம்பிக்கையாளர் இறைவேண்டல்கள்.
1.தூய மாட்சிவிளங்கும் தந்தையே இறைவா!
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரும், மூவொரு கடவுளின் ஒருமைப்பாட்டைத் தம்முள் கொண்டு, மோசேயைப் போல என்றும் உமது திருவுளத்திற்குப் பணிந்து, தம் வாழ்வாலும், பணியாலும் உமது மாட்சிமையைத் துலங்கச் செய்திட: அவர்களுக்கு வேண்டிய ஞானத்தை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2.எங்கள் மூதாதையரின் கடவுளாகிய தந்தையே இறைவா!
உமது மக்களாகிய நாங்கள் அனைவரும், எங்கள் நடத்தையைச் சீர்ப்படுத்தி, உமது அறிவுரைக்குச் செவிசாய்த்து. மன ஒற்றுமை கொண்டு அமைதியுடன் வாழ்ந்திட அருள் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3.அன்புத் தந்தையே இறைவா!
எம்முள் ஒற்றுமையை வளர்த்து, ஒன்றிணைந்து வாழும் மனநிலையை உருவாக்கி எமது வாழ்வாலும், பணியாலும் உம்மை மகிமைப்படுத்தும் சக்தியை எமக்குத் தந்து எம்மை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4.இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்ற வரும் எல்லாம் வல்லவருமான தந்தையே!
உலக நாடுகள் பலவற்றில், இன்று பெருகிவரும் உமது படைப்பின் ஒழுங்கிற்கு எதிரான செயற்பாடுகள் அழிந்து, உமது திட்டத்தைப் பக்குவமாகப் பேணிக் காக்கும் நல்லுள்ளத்தை அனைவருக்கும் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் Trinity Sunday.2026

